Be Transformed By The Renewal Of Your Mind
பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது.
ரோமர் 7 :8.
=========================எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இன்றைக்கு கீழ்ப்படியாமையினால் அநேக குடும்பங்கள், ஊழியக்காரர்கள் மற்றும் அநேக சபைகள் தங்கள் அதிகாரத்தை இழந்து போய் நின்று கொண்டிருக்கின்றன
பிசாசுக்கு எதிர்த்து நிற்க திராணியில்லாமல் தேவ பலனை இழந்து போய் நிற்கும் ஊழியக்காரர்கள் பலர் உண்டு. வைராக்கியமாக பிரசங்கிப்பார்கள், ஜெபிப்பார்கள், அருமையாக ஆராதிப்பார்கள். ஆனால் ஏதாவது ஒரு வகையில் பிசாசின் கிரியைகளின் ஆளுகைக்குள் இருப்பார்கள்.
ஏதாவது ஒரு வழியில் பிசாசு அவர்களை அடிமையாக்கி அவனது ஆளுகையில் வைத்திருக்கிறான்.
இயேசு கிறிஸ்துவை பார்த்து பிசாசுகள் பயந்து கெஞ்சின. எங்களை விட்டுவிடும் எங்களைத் போக விடும். காலம் வருவதற்கு முன்பாக எங்களை வேதனைப்படுத்த வந்தீரோ என்றன.
ஏனென்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிதாவுக்கு கீழ்ப்படிந்தவராக இருந்தார். பிசாசினால் அவரை குற்றப்படுத்த முடியவில்லை. சாத்தான் தன்னை சோதனைக்குட்படுத்தும் போது அவனை துரத்தினார்.
அவர் தன் சீஷர்களை குறித்து வேண்டுதல் செய்யும் போது என்னை போல இவர்களும் உலகத்தார்களல்ல என்றார். இன்றைக்கு ஊழியம் செய்கிற பலர் உலகத்தின் ஆசை இச்சைகளுக்கு அடிமையாகவே இருக்கின்றனர்.
மாற்கு 16 -17 ல் விசுவாசிகள் கூட என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள் என்று இயேசுகிறிஸ்து சொன்னார். ஆனால் இன்றைக்கு விசுவாசிகள் மற்றும் ஊழியக்காரர்கள் பிசாசின் வல்லமைகளுக்கு எதிராக யுத்தம் செய்ய திராணியற்றவர்களாக இருக்கின்றனர், ஏனென்றால் சர்வாயுதவர்க்கம் என்ற தகுதியை அவர்கள் இன்னும் பெற்று கொள்ளவில்லை.
வெளிப்படுத்தின விசேஷம் இரண்டாவது அதிகாரம் 11 வது வசனத்தில் மரணம் நேரிடுகிறதாக இருந்தாலும் அதற்குத் தன் ஜீவனையும் பாராமல் இயேசுவின் இரத்ததாலும் சாட்சியின் வசனத்தாலும் அவனை ஜெயித்தார்கள்.
அதாவது இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு தேவனுக்குக் கீழ்ப்படிந்து சாட்சியுள்ள வாழ்க்கையின் மூலம் அவனை ஜெயித்தார்கள், அவர்கள் தங்கள் உயிர் மேல் ஆசை வைக்கவில்லை.
வேதத்தில் பார்ப்போம்,
உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?
யாக்கோபு 4 :1.
இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்;
யூதா 1 :16.
அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.
எபேசி 4:22-24
பிரியமானவர்களே,
தேவன் நமக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைத்திருக்கிறார். ஆனால், நம்மில் பலருக்கு ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும் வழியில் நடக்க ஒரு போதும் மனமில்லை.
தேவனுடைய கற்பனைகளுக்கு கீழ்படிந்து நீதி செய்வதினால் தேவன் நமக்கும் நம் சந்ததிக்கும் வைத்திருக்கக்கூடிய ஆசீர்வாதங்களை நாம் நொடி பொழுதில் இழந்து போகிறோம்.
நமக்கு எதிராய் வைத்திருக்கக்கூடிய ஆசீர்வாத வாசல்களை நாமே அவருடைய கற்பனைகளை மீறி அடைத்து கொள்கிறோம். கர்த்தர் சொல்கிறார்…உனக்கு கொஞ்சம் பெலன் இருந்தும் என் வசனத்தை கைக்கொண்டபடியால் திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் அதை ஒருவனும் பூட்டமாட்டான் என்றார்.
இன்றைக்கு, தரிசனங்களை அடையவேண்டிய வாலிப குமாரர்கள் குமாரத்திகள் உலக இச்சையென்னும் காரியங்களில் விழுந்து போகிறார்கள்.
தேவன் தங்களுக்கு வைத்திருக்கும் தரிசனங்களையும் தேவ திட்டத்தையும் அவர்கள் மறந்து போகிறார்கள்.
வசனத்துக்கு கீழ்படிந்து தங்கள் பரிசுத்தை காத்து கொள்ள வேண்டிய வாலிபர்கள் பிசாசின் கண்ணியில் எளிதாக வீழ்ந்து விடுகிறார்கள்.
பிசாசானவன் இச்சைகளை விதைக்கிறான்.
அதாவது இச்சைகளை உண்டாக்கக்கூடிய ஆவிகளை அனுப்புகிறான்.
வாலிபர்கள் தேவ பெலனில்லாததினால் உலகமும் அதன் ஆசை இச்சைகளை அன்றைக்கு ஏவாள் விருட்சத்தை பார்த்தது போல இன்றும் நம் பார்வைக்கு இன்பமாய் இருக்கிறதை பார்த்து அதற்குள் வீழ்ந்து விடுகிறார்கள்.
தேவ சமூகத்தில் காத்திருக்க வேண்டிய பிள்ளைகள் இன்று உலக இச்சைகளுக்கும் , இன்பங்களுக்காகவும் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போகிறார்கள்.
ரோமர்:12:2 -ல் நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள் என்று பார்க்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே, நாமும் உலக ஆசை இச்சைகளுக்கு இடங்கொடாமல் தேவனுடைய சித்தத்தையும்,
பிரியத்தையும் உணர்ந்தவர்களாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.