Daily Manna 220
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவவழி. நீதிமொழிகள்: 6:23 எனக்கு அன்பானவர்களே! வேதத்தின் வழியில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இங்கிலாந்து தேசத்து மாமன்னர் நான்காம் வில்லியம் மரித்த இரவு நேரம்.பட்டத்திற்கு வர வேண்டிய இளவரசியான சிறுமி அரண்மனையின் மற்றொரு அறையில் துயில் கொண்டிருந்தாள். அவளை தூக்கத்திலிருந்து எழுப்பி “இங்கிலாந்து அரசியாரே வாழ்க!” என்று வாழ்த்தி நடந்ததை கூறினார்கள். உடனே சிறுபெண்ணாய் இருந்த…