Daily Manna 278

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம்:46:1 அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். எத்தியோப்பியாவில் ஏழு மனிதர்கள் சேர்ந்து, ஒரு பன்னிரண்டு வயது சிறுமியை, காட்டுக்குள் கடத்திச் சென்று, துன்புறுத்தினர். அவளுடைய கூக்குரலைக் கேட்ட ஒரு சிறு சிங்கக் கூட்டம், ஓடி வந்து, கடத்தல்காரர்களைத் துரத்தி விட்டு, அவளைப் பாதுகாத்தது. எத்தியோப்பியா காவல் துறையினர், ஏழு நாட்கள் கழித்து அவளைக் கண்டு பிடித்த போது,…

Daily Manna 277

கோபம் நிர்மூடனைக் கொல்லும். பொறாமை புத்தியில்லாதவனை அதம் பண்ணும். யோபு: 5:2 அன்பானவர்களே!நல் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். கர்வப்படுபவன் கடவுளை இழக்கிறான். பொறாமைப்படுபவன் நண்பனை இழக்கிறான். கோபப்படுபவன் தன்னையே இழக்கிறான். பெரும்பாலானோர் கோபத்தால் தன்னைத் தானே இன்று இழந்து கொண்டிருக்கிற பரிதாப நிலையை பார்க்கிறோம். தத்துவ ஞானி பிளேட்டோ, “இறைவன் எப்போதும் நம்மை கண்காணித்துக் கொண்டே இருக்கிறான் என்ற உணர்வு நம்மிடம் இருந்தால் பிறர் மீது கோபம்…

Daily Manna 276

உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். உபாகமம்: 20:1 அன்பானவர்களே! என்றென்றும் நம்மோடு கூடவே இருந்து வழிநடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலக மகா யுத்தத்தின் போது, அமெரிக்க படைத் தளபதிகள் யாவரும் ஒரேயிடத்தில் கூடி, ஜெர்மனியைத் தாக்க தயாராக இருந்தனர். ஜெர்மானியப் படைகள் மிகவும் வலிமை பெற்றவை. ஆகையால் அமெரிக்க தளபதிகள் நடு நடுங்கினார்கள். அவர்களில் ஜெனரல் ஐசனோவர் என்ற தேவ மனிதர் இருந்தார். அவர்…

Daily Manna 275

மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. நீதிமொழிகள்:27:21 எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். இந்நாட்களில் சோதனைகள் பல ரூபங்களில் நம்மைத் தாக்க நேரலாம்; வியாதியாகவோ, பண கஷ்டமாகவோ, சபலமாகவோ, துன்புறுத்தலின் வடிவிலோ நம்மைத் தாக்கலாம். ஆனால் ஒன்றை மறவாதீர்கள் உங்களுக்கு வரும் சோதனைக் களங்கள் எல்லாம், உங்களுக்கு சாதனைத் தளங்களே! நீங்கள் சோதனைகளை தவிர்க்க நினைத்தால் பல சாதனைகளும் தவிர்க்கப்படும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இந்த உலகத்தால்…

Daily Manna 274

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள்: 12:22. எனக்கு அன்பானவர்களே! உண்மையுள்ளவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் என்னவென்றால் பொய் கூறுவது. அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும். ஆண்கள், பெண்களை விட அதிகமாக பொய் சொல்லுகிறார்கள்” என்று ‘லண்டன் சயின்ஸ் மியூசியம்’ என்ற அமைப்பு செய்த ஆய்வில்…

Daily Manna 273

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்கீதம் 122:1 எனக்கு அன்பானவர்களே! தமது ஆலயத்தின் சம்பூரணத்தினால் நம்மை நிரப்பி ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு தம்பதியினர் ஒரு ஞாயிற்றுக்கிழமைகாலையில் சோம்பலாக படுத்திருந்தனர். அதில் மனைவி எழுந்து ஆலயத்திற்கு செல்ல புறப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் கணவரோ எழுந்து புறப்படுகிற வழியாக இல்லை. அப்போது மனைவி, ‘என்னங்க. ஆலயத்திற்கு புறப்படவில்லையா?’ என்று…