Daily Manna 160

கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். அப்போஸ்தலர்: 2 :21.

கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார்.
அப்போஸ்தலர்: 2 :21.
*********
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

எல் சால்வடார் தேசத்தில் இயேசுவை கனப்படுத்தும்படி அவருடைய சிலையை அந்த தேசத்தின் தலைநகரத்தின் நடுவே நிறுவியுள்ளார்கள். அது நகரத்தின் மத்தியில் போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் இடத்தில், அங்குள்ள அனைவரும் பார்க்கும்படியாக உயரமாக இருக்கிறது. ஏனெனில் அவர் எல்லாவற்றிற்கும் உயர்ந்தவர் என்பதை வெளிபடுத்தவே அவ்வாறு நிறுவியுள்ளனர் என்பதை கூறுகின்றனர்.

“உலக இரட்சகர்” என்று எழுதப்பட்டிருப்பதை அங்குள்ள அனைவரும் பார்க்கும்படிக்கும் அவருடைய தெய்வத்துவம் வெளிப்பட்டுள்ளது.
அவரே உலக இரட்சகர் என்று
1 யோவான் 4:14-ல் கூறியிருப்பதை அந்த வார்த்தைகள் உறுதிப்படுத்துகிறது.

கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும் எந்தவித பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கலாச்சாரமோ, வயதைதோ, படிப்பைபோ, செல்வத்தையோ, செல்வாக்கையோ அவர் பார்ப்பதில்லை. தம்மை பக்தியுடன் உண்மையாய் தேடுபவர்களை ஏற்றுக் கொள்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் அக்காலத்திலே பல தேசங்களிலே சுற்றி திரிந்து இயேசுவின் வாழ்க்கையையும், அவர் மரணத்தையும், உயிர்தெழுதலையும் பிரசங்கித்து வந்தார். இந்த நற்செய்தியை அவர் எல்லாருக்கும் பிரசங்கித்தார். மதத் தலைவர்களுக்கும், காவலாளிகளுக்கும்,
யூதர்களுக்கும், புறஜாதியருக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எல்லாவித மக்களுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிவித்தார்.

ஒரு மனிதன் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசத்தால் அவரோடு புது ஐக்கியத்துக்குள் வரலாம் என்று பவுல் கூறுகிறார்
ரோமர். 10:9 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது.

எனவே நமது அருமை இரட்சகருக்கு யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் அவர் கர்த்தரானார்.

வேதத்தில் பார்ப்போம்,

உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
நீதிமொழிகள்: 28:18.

இஸ்ரவேலோ கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
ஏசாயா: 45 :17.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர்:4 :12.

பிரியமானவர்களே,

இரட்சிப்பு என்பது பாவத்தின் தண்டனையிலிருந்து நமக்கு கிடைக்கும் விடுமலையாகும். ‘பாவத்தின் சம்பளம் மரணம் (அதாவது, தேவனிடமிருந்து என்றென்றுமாய் பிரிக்கப்படுதல்), தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.

கடந்த கால இரட்சிப்பானது பாவத் தண்டனையிலிருந்து நம்மை விடுவித்து தேவனோடு ஜக்கியப்படுத்துகிறது.

நிகழ்கால இரட்சிப்பு என்பது பாவத்தின் வல்லமையிலிருந்து கிடைக்கும் விடுதலையாகும். ‘நீங்கள் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவம் உங்களை மேற்கொள்ள மாட்டாது.”

இரட்சிக்கப்பட்ட பிறகும் சோதனை வரத்தான் செய்யும். ஆனால் இரட்சிக்கப்பட்டவன் தன் சுயபெலத்தில் சாராமல் கிறிஸ்துவை சார்ந்திருப்பதால் பாவத்தின் மேல் அனுதினமும் வெற்றியை அனுபவிப்பான்.

இரட்சிப்பு என்பது பாவத்தின் பிரசன்னத்திலிருந்தே கிடைக்கும் விடுதலையாகும். இது இவ்வுலகில் அல்ல, பரலோகில் கிடைக்கும் உன்னத ஆசீர்வாதமாகும்.

அங்கு சாத்தானுக்கு இடமில்லையாதலால், பாவச் சோதனையோ பாவப் பிரசன்னமோ கிடையாது. போராட்டம் இல்லை. நித்திய இளைப்பாறுதல்! பரலோகத்தைக் குறித்து இப்படி வாசிக்கிறோம்.

‘நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள்.

பாவத்தை விட்டு மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது இரட்சிப்பைப் பெறுகிறோம். இயேசுவை சார்ந்திருந்து பாவத்தின் மேல் வெற்றி பெறும் போது இரட்சிப்பை அனுபவிக்கிறோம்.

விழிப்போடும் பிரயாசத்தோடும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்குக் காத்திருக்கும் போது அவர் நம்மை மகிமையில் சேர்த்து நித்திய இரட்சிப்பை அனுபவிக்க அருள் செய்வார்.

இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருக்கலாமா?

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய பிரதான இரட்சிப்பை கூறி அவரின் வருகைக்கு ஆயத்தப்பட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *