Daily Manna 175

இயேசு அதைக் கண்டு விசனமடைந்து சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்; மாற்கு:10:14.

இயேசு அதைக் கண்டு விசனமடைந்து சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள்;
மாற்கு:10:14.
========================
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ப்ரூஸ்ரிட்டர் என்பவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் குருவாக {போதகராக} இருந்தார். ஒருநாள் நள்ளிரவில் அவர் வசிக்கும் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்து பார்த்தார்.

அப்போது ஒரு சிறுவனும், சிறுமியும் பரிதாபமான கோலத்தில் நின்றார்கள். நள்ளிரவு நேரம் என்பதால், அவர்களிடம் பெரிதாக எதுவும் பேசாமல் தங்குவதற்கு இடமளித்து விட்டு அவர் தூங்கச் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் அவர் கண் விழித்துப் பார்த்த போது, அங்குள்ள அறைகள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதைக் கண்டார். அதுமட்டுமல்லாமல், அவருக்கான காலை உணவும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.

இவை எல்லாவற்றையும் பார்த்து ஆச்சர்யப்பட்ட ப்ரூஸ்ரிட்டர், அந்த சிறுவனையும் சிறுமியையும் அழைத்து, `நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், ஏன் இப்படி நள்ளிரவில் தனியாக வந்தீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், `நாங்கள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள். எங்களது பெற்றோர் எங்களை வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள்’ என்று சொல்லி கண்ணீர் விட்டு அழத் தொடங்கி விட்டனர். அவர்களது நிலைமையைப் புரிந்து கொண்ட ப்ரூஸ்ரிட்டர் என்ற அந்த குருவானவர்,அந்தக் குழந்தைகளிடம், “நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் எல்லா வசதிகளையும் செய்து தருகிறேன்” என்று சொன்னார்.

இதைக் கேட்டு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் அங்கே தங்கினார்கள்.
இதற்கிடையே சிலர் ப்ரூஸ்ரிட்டரிடம், “முன் பின் தெரியாத குழந்தைகளை உங்களோடு வைத்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. இது பிற்காலத்தில் பெரிய பிரச்னையில் கொண்டு போய் விட்டு விடும். அதனால் அவர்களை துரத்தி விடுங்கள்” என்று கூறினார்கள்.

ஆனால் அவர்கள் சொல்வது எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அந்தக் குழந்தைகளைத் தன்னுடன் வைத்துப் பராமரித்து வந்தார். சில நாள்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு யோசனை வந்தது. `நாம் ஏன் பெற்றோரால் துரத்தப்பட்ட இது போன்ற குழந்தைகளுக்காக ஓர் இல்லம் தொடங்கக் கூடாது…’ என்பதே அவரது யோசனை.

உடனே, அவர் தன்னுடன் இருந்த அந்த இரண்டு குழந்தைகளையும் கொண்டு `உடன்படிக்கையின் இல்லம்’ என்ற ஒரு இல்லத்தை அமைத்தார்.

ஊர் மக்கள் சொன்னதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் ஏழைகள், கைவிடப்பட்ட மற்றும் அநாதைக் குழந்தைகளுக்காக அவர் ஏற்படுத்திய இல்லத்தில் ஏராளமான குழந்தைகள் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள்.

இது வரலாற்று நிகழ்வு. இங்கே வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வையும் நாம் உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம் :127 :4

பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப் போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்
கொலோசேயர்: 3: 21

இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.
சங்கீதம்:127 :4.

பிரியமானவர்களே,

இயேசு கிறிஸ்து சிறு பிள்ளைகளை தம்மிடம் வரவழைத்து அவர்களுக்கு ஆசி வழங்குகிறார். ஆனால், இயேசுவின் சீடர்களோ, குழந்தைகள் மீது அவருக்குள்ள அன்பினைப் புரிந்து கொள்ளாமல் அவரிடம் குழந்தைகளைக் கொண்டு வந்த பெற்றோரைத் தடுக்கின்றார்கள்.

இதைக் கண்ட இயேசு சீடர்களைக் கடிந்தபடி தன்னிடம் அழைத்து வரப்பட்ட குழந்தைகளைக் கூப்பிட்டு, அவர்களை ஆசீர்வதிக்கிறார். இந்த நிகழ்வு நமக்கு ஒரு சில உண்மைகளை எடுத்துக் காட்டுகிறது. அவை என்னென்ன என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.

குழந்தைகளைப் பெரியவர்கள் ஆசீர்வதிக்கும் பழக்கம் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. யாக்கோபு, யோசேப்பின் இரு புதல்வர்களான மனாசேயையும் எப்ராயிமையும் ஆசீர்வதித்ததாக வேதம் நமக்குச் சான்று பகர்கிறது.

இந்தப் பின்னணியில் தான் தங்களது குழந்தைகளை இயேசு ஆசீர்வதிக்க வேண்டும் என்று அதன் பெற்றோர் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசுவும் அந்தக் குழந்தைகளை ஆசீர்வதிக்க முன் வருகின்றார்.

ஆனால், சீடர்கள் இயேசுவைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு, குழந்தைகளின் பெற்றோரைத் தடுக்கிறார்கள். அதனால் இயேசு சீடர்களைக் கடிந்து கொள்கின்றார்.

இந்த நிகழ்வின் கடைசியில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தனது சீடர்களைப் பார்த்து, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்க வேண்டாம்.

ஏனெனில் பரலோக ராஜ்யம் இத்தகையோருக்கே உரியது” என்று கூறுகிறார். இதை நாம் சிந்தனைக்கு உட்படுத்திப் பார்க்க வேண்டும்.

‘இயேசு குழந்தைகளைத் தன்னிடம் அழைப்பதற்குக் காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்பதற்கே’ என்று மத்தேயு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இயேசு கூறுவதுபோல கனிவும் மனத்தாழ்மையும் உடையவரான அவரிடம் குழந்தைகள் செல்லும்போது அவரிடத்தில் உள்ள அந்தப் பண்புகளை கற்றுக் கொள்ளலாம் என்பது உறுதி.

மேலும், ‘குழந்தையின் உள்ளத்தை யாரெல்லாம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே உரியது விண்ணரசு’ என்பதை ஆண்டவராகிய இயேசு மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

ஆகவே, நாமெல்லாம் குழந்தைகளின் உள்ளம் கொண்டவர்களாக வாழ்வோம். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல், அவர்களின் வளர்ச்சிக்கும் காரணமாக இருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நம்மை விண்ணரசுக்கு தகுதிப்படுத்துவாராக
ஆமென்

Similar Posts

  • Daily Manna 257

    மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் :8 :6. எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இவ்வுலகில் யாரும் விரும்பப்படாத ஒன்றும் உண்டு என்றால், அது மரணம் மட்டுமே. இப்படி மனிதர்கள் ஒரு பக்கம் சென்றுக் கொண்டு இருக்க மற்றொரு புறம், DAVID GOODALL என்ற மனிதர் தனது 94 வது வயதில் முதுமையின் காரணமாக தன்னை கருணைக் கொலை செய்து…

  • Daily Manna 271

    என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம்: 51:3. எனக்கு அன்பானவர்களே! ‌பரிசுத்தமாக்குகிற பரமன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதைக்…

  • Daily Manna 42

    அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். லூக்கா 23 :34. எனக்கு அன்பானவர்களே! மன்னிப்பதில் வள்ளலாம் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். மன்னிப்பு என்பதை எல்லாராலும் அருள முடியாது…. மனப்பூர்வமாக ஒருவர் தனக்குசெய்த தீங்கை மன்னிக்கிறார் ஒரு இளம்பெண்..இந்த உண்மைசம்பவம் நமக்கு மன்னிப்பின் அழகு என்ன என்று காண்பிக்கிறது… ஜேக்குலின் என்றபெண் , முக அழகும் அழகான உடல் அமைப்பும் கொண்டவள்….

  • உண்மையுள்ளவனாயிரு, கர்த்தர் உன்னை உயர்த்துவார்.

    இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப் போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். சங்கீதம்: 12:1. எனக்கு அன்பானவர்களே! உண்மையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் அயல் நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?” என ஒரு…

  • Daily Manna 53

    ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. தானியேல்: 9:10 எனக்கு அன்பானவர்களே! அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஆலயம் ஒன்றில் அன்பான போதகர் ஒருவர் இருந்தார். அவரிடம் ஒரு மனிதன் வந்து தங்கினான். அவன் ஒரு திருடன் என்று அவர் அறிந்த பொழுதும், அவனுக்கு சகல உதவியும் செய்து கொடுத்து அவனை அன்புடன் நடத்தினார் . அவனோ நன்றி கெட்டவனாக ஆலயத்திலிருந்த இரண்டு வெள்ளிப்…

  • Daily Manna 111

    அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார். யாத் 35 :33. எனக்கு அன்பானவர்களே! புதிய ஆசீர்வாதங்களால் நம்மை நிரப்புகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். பல வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தில் வசிக்கும் ஒரு சகோதரியின் சாட்சியைப் பற்றி அறிந்திருப்போம். அந்த சகோதரி கேன்சர் நோயினால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்கள். யாரோ ஒருவர் அவர்களிடம், சகோதரர் டி.ஜி.எஸ்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *