மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான். கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான். நீதிமொழிகள்: 18:22.
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான். கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான்.
நீதிமொழிகள்: 18:22.
எனக்கு அன்பானவர்களே,
நல்வாழ்வை அமைத்து தருபவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இரண்டு மன்னர்கள் சண்டையிட்டு கொண்டார்கள். அதில் தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
”நான் கேட்கும் கேள்விக்கு நீ சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே தந்து விடுவேன்” என்றான் .
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? என்பதுவே கேள்வி.
(வென்ற மன்னனின் காதலி, அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு இதற்கு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று ஏற்கெனவே சாெல்லியிருந்தாள்).
இதே கேள்வியை தான் மன்னனிடமும் கேட்டு பதில் பெற நினைத்தான். இக்கேள்விக்கு பதில் காண கால அவகாசம் கேட்டு தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை. கடைசியாக சிலர் சொன்னதால் ….
ஒரு சூனியக்காரக் கிழவியிடம்
சென்று கேட்டான்.
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணமும் நடக்கும்; உனக்கு நாடு கிடைக்கும்.
ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்? என்று கேட்டாள்
அவன் சொன்னான்,நீ “என்ன கேட்டாலும் தருகிறேன்” என்றான்.
சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள், “தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கும் நாடு கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். நீ வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள். நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள். அவள் சொன்னாள்,
“நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும் போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
இதில் எது உன் விருப்பம்?” என்று கேட்டாள்.
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்
“இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று.
உடனே அவள் சொன்னாள், முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
ஆம்! என் அன்புக்குாியவா்களே
பெண் என்பவள் அவளுக்கு சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும் போது தேவதையாகத் தான் இருக்கிறாள்.
முடிவுகளை அவள் மீது திணிக்கப்படும் போது அவள் சூனியக்காரக் கிழவியாகி மாறி விடுகிறாள்.
இதை
அனைவரும் புாிந்து செயல்பட்டால் எப்போதும் உங்கள் மனைவி தேவதையாகவே காட்சி தருவாள் என்பதில் எந்த சந்தேகமேயில்லை.
வேதத்தில் பார்ப்போம்,
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சக் கொடியைப்போல் இருப்பாள்;
சங்கீதம் 128:3.
மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக் கொள்ளுகிறான்.
நீதிமொழிகள்: 18 :22.
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
நீதிமொழிகள்: 19 :14.
பிரியமானவர்களே,
வேதம் சொல்கிறது..
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள் என்று .
குடும்பத்தைக் கட்டுவதற்கு தேவன் ஒரு மஷனுக்கு மனைவியைத் தருகிறாா். அதுவும் ஏற்ற துணையாகத் தருகிறார்.
துணை என்ற வாா்த்தைக்கு ஆங்கிலத்தில் ஹெல்பா் (HELPER) என்ற வார்த்தை சொல்லப்பட்டுள்ளது. புருஷன் ராஜாவானால் மனைவி மந்திாியாக இருக்க வேண்டும்.
குடும்பத்திற்கு ,பணம் சம்பாதிப்பது புருஷனாக இருக்கலாம். குடும்பத்தை நடத்துவது, ஆலோசனை செய்வது
பணத்தை சேமிப்பது, அதை எப்படி செலவு செய்வது, பிள்ளைகளுக்குாிய காாியங்கள், புருஷனுக்குாிய காாியங்கள்
உணவுக்கடுத்த விஷயங்கள்,குடும்பத்தை மேன்மைக்கு கொண்டு வருவது போன்ற அனைத்துக்குமே தேவன் மனைவியை மட்டுமே வைத்துள்ளாா்.
அவள் தேவதையாகவே உங்கள் குடும்பத்தில் வலம் வருபவள்.
உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனி தரும் திராட்சக் கொடியைப்போல் இருப்பாள்,
சங்கீதம்:128:3
உங்கள் மனைவி சந்திரனைப் போல் அழகும்,
சூரியனைப் போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப் போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம் போல் உதிப்பாா்கள். –
உன்னதப்பாட்டு:6:10
எனவே உங்கள் மனைவி தேவதையாக இருப்பதும், சூனியக்காரியாக இருப்பதும் உங்கள் செயலில் தான் இருக்கிறது. நீங்கள் உங்கள் மனைவியை தேவதையாக வைத்திருந்தால், உங்கள் குடும்பமும், உங்கள் சந்ததியும் மகிழ்ச்சியான ஒரு வாழ்வு வாழ முடியும்.
உங்கள் குடும்ப வாழ்க்கையில் உங்கள் மனைவியைத் தவிர
வேறு ஒரு நபர் தலையிட்டால் அந்த குடும்பம் சிதைந்து, சின்னா பின்னமாகி விடும் .கடனிலேயும், இல்லாமையிலேயும், தரித்திரம், வறுமை, சோம்பல், சண்டை, அழுகை, கூக்குரல் அது மட்டுமல்ல சண்டை, அடிதடி, இதெல்லாம் கூட நடைபெறும்.
உங்கள் மனைவி உங்களுக்கு ஏற்ற துணையாக இல்லாமல் இருக்கிறாள் என்று கூட நினைக்கலாம்.
ஆனால்
நீங்கள் ஆண்டவருக்கு பிரியமான ஒரு வாழ்க்கை வாழும் போது, தேவன் உங்களுக்கு ஏற்ற துணையாக உங்கள் மனைவியை மாற்றி அமைக்க ஆண்டவரால் முடியும். அவரால் முடியாத காாியம் ஒன்றுமேயில்லை.
உங்கள் மனைவி காத்தருக்குள் இருப்பவா்கள் என்றால் உங்கள் குடும்பம் ஒரு சொா்க்கமே.
உங்கள் மனைவியிடம் உண்மையாய் இருங்கள்.
அவர்களிடம் அன்பு காட்டுங்கள்.
உங்கள் மனைவியிடம் உங்களை ஒப்படைத்து, அவள் நற்குணங்களை பாராட்டி பாருங்கள். ஒரு மனைவிக்கு இதை விட இந்த உலகத்தில் எதுவும் பெரிதல்ல
உங்கள் மனைவி குணசாலியான தேவதையைப் போல மாறிவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இப்படிப்பட்ட ஆசீர்வாதமான குடும்ப வாழ்க்கையை கர்த்தருக்குள்ளாய் என்றென்றுமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் யாவருக்கும் அருள் புரிவாராக.
. ஆமென்