Daily Manna 224

ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது, களிப்பாக்கும். நீதிமொழிகள்: 27:9

எனக்கு அன்பானவர்களே!

நல்ல நண்பராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு மானும், ஒரு ஆமையும், ஒரு மரங்கொத்தி பறவையும் நல்ல நண்பர்களாக வசித்து வந்தனர். அவர்கள் எப்பொழுதும் ஒன்றாகவே காணப்பட்டார்கள்.

ஒரு நாளின் பெரும் பொழுதை ஏரிக்கரையின் அருகிலே பேசுவதிலும் விளையாடுவதிலும் கழித்து வந்தார்கள்.

ஒரு நாள் ஒரு வேடன் அங்கு வந்து வலையொன்றை விரித்து ஏரிக்கரையின் புதர்களுக்குள் புகுந்து மறைந்து கொண்டான்.

தற்செயலாக அங்கு வந்த மான் அந்த வலைக்குள் சிக்கிக் கொண்டது. வலியில் துடித்த அந்த மான் தன் நண்பர்களை உதவிக்கு அழைத்தது.

நான் வலையில் மாட்டிக் கொண்டேன், என்னைக் காப்பாற்றுங்கள்
என்று மானின் கூக்குரல் கேட்டு தன் நண்பன் வலைக்குள் சிக்கித் தவிப்பது கண்டு,மிகவும் வருந்தினார்கள்.

ஒரு திட்டம் போட்டார்கள் இருவரும்.ஆமை உடனே ஒரு வளையில் வசித்த எலியை அழைத்து வந்தது.எலியும் ஆமையும் வேடனின் வலையை கடித்து நாசப்படுத்த தொடங்கின.

இதே நேரத்தில் மரங்கொத்தி வேகமாய் பறந்து சென்று,வேடனின் குடிசையை நெருங்கி வந்தது.

மானின் குரலைக் கேட்டு வெளியே வந்து கொண்டிருந்த வேடனின் தலையை தனது கூரான அலகுகளால் இரு முறை தாக்கியது.

வேடன்: ஆ… ஆ…என்று வலியால் துடித்தான் வேடன். மரங்கொத்தியின் தாக்குதலால் நிலைகுலைந்த வேடன் தன் குடிசைக்குள் ஓடி ஓய்வெடுக்கத் தொடங்கினான்.

மரங்கொத்தி மானை நோக்கி விரைந்து பறந்து வந்தது. மரங்கொத்தியின் எண்ணம் ஈடேறியது.எலியும் ஆமையும் வலையைப் பிய்த்து மானை விடுதலை செய்தது.மூன்று நண்பர்களும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். மிகவும் சந்தோஷமாக காட்டில் அலைந்து திரிந்தனர்.

என் இனிய நண்பர்களே,
என்ன கற்றுக் கொண்டீர்கள் இந்த கதை மூலம்? நல்ல நண்பர்களைப் பெற்று இருப்பது நன்மையையே கொடுக்கும். ஆபத்தில் உதவுபனே ஆத்ம நண்பன் ஆவான்.

வேதத்தில் பார்ப்போம்,

யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்தது போல அவனைச் சிநேகித்தான்.
1 சாமுவேல்: 20:17

பரிமள தைலமும் சுகந்த தூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவது போல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
நீதிமொழிகள்: 27 :9.

என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்து கொண்ட யாக்கோபே, என் சிநேகிதன் ஆபிரகாமின் சந்ததியே,
ஏசாயா:41 :8.

பிரியமானவர்களே,

சங்க காலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவு நண்பர்கள்.

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும்.5 வயதில் .அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு கடவுள் கொடுத்த கிஃப்ட் என்று தான் சொல்லலாம்.

இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே.

மாதா, பிதா, குரு,.
தெய்வம் என்ற வரிசையில் நண்பர்களை இணைப்பதில் தவறு ஏதும் இல்லை என்று சொல்லலாம்.

பெற்றோர்களிடமும் மற்ற உறவுகளிடமும் கூற இயலாத பலவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள இயலும்.

‘உன் நண்பன் யார் என்று சொல்? நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்’ என்பார்கள். நண்பர்கள் எப்படிபட்டவர்களாக இருக்கிறார்களோ அவர்களின் குணமே நம்மை வந்து சேரும்.

பெரும்பாலும் நம்மை சுற்றி இருப்பவர்கள்
எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம்.

அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம்.

வள்ளுவர் நட்பிற்கு மட்டுமே அதிக அதிகாரங்களை திருக்குறளில் வைத்து உள்ளார். நட்பு எத்தகைய வலிமை மிக்கது என்பதும் இதன் மூலமாக நாம் அறிய
இயலும்.

நல்ல நண்பர்கள் கிடைப்பது பெருவரமே. நல்ல நட்பிற்கு பல உதாரணங்கள் படித்திருப்போம். சங்க காலம் தொடங்கி
இன்றைய காலம் வரை பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், இன்று
இன்னும் ஒருபடி மேலே சென்று முகநுால் நண்பர்கள் என்று உலகம் நட்பால் விரியத் தொடங்கி உள்ளது.

ஆனால் இந்த முகநூல் நட்பால் முகம் தெரியாதவர்களுடன் பேசி எந்த பிரயோஜனமுமில்லை.

பிரியமானவர்களே!
இந்த உலகத்திலேயே உங்களை நேசிக்கின்ற அநேக சகோதர சகோதரிகளும் இருக்கலாம்.
ஆனால் அவர்கள் எல்லோரையும் விடவும் உங்களை அதிகமாக நேசிக்கின்ற ஒரு சினேகிதர் ஒருவர் உங்களுக்கு உண்டு.

அவர் தான் நம்முடைய கர்த்தராகிய
இயேசு கிறிஸ்து. அவர் நமக்கு ஆண்டவரும் இரட்சகர் மட்டுமல்ல,
அவர் நமது சிநேகிதரும் உற்ற
நண்பனாய் இருக்கின்றார்.

ஒருவன்
தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான
அன்பு ஒருவரிடத்திலுமில்லை என்று
சொன்ன இயேசு (யோவா 15:13)
அவருடைய சிநேகிதர்களாகிய,
நமக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்தார்.

இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால்,
நாம் தேவனுக்கு
நண்பர்களாய் இருக்கும் போது
அல்ல,நாம் தேவனுக்கு சத்துருக்களாக இருக்கையில்
(ரோம :5:10)
இயேசு நம்மை சிநேகித்தார்.
நமக்காக தன்னுடைய
ஜீவனையே கொடுத்தார்.

சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்.
நீதிமொழிகள் 17:17
இவ்வுலக உறவுகளும் நட்புகளும் பெரும்பாலும் நாம் வாழ்ந்து இருக்கும் பொழுது நம்மை நேசிப்பார்கள். நாம் தாழ்ந்து இருக்கும் பொழுது நம்மை வெறுப்பார்கள். இது தான் இன்றைய உலக நியதி.

நல்ல பொருளாதார நிலைமையில்,
நற்பெயரோடு நாம் இருக்கும் போது நம்மை அனேகர் சிநேகிப்பார்கள்,
நம்முடைய வாழ்வில் கஷ்டமும் நஷ்டமும் நற்பெயருக்கு களங்கமும் ஏற்படும் நேரங்களில்,
அவர்கள் சிநேகிக்க
மாட்டார்கள்.

நாம் ஏதாவது தவறு
செய்து விழுந்து விட்டால்,நம்மை தூக்கவோ தாங்கவோ,அவர்கள்
முன்வர மாட்டார்கள்,தங்கள்
கௌரவம் போய்விடும் என்று
நம்மை விட்டு விலகி விடுவார்கள்.

ஆனால்
நம்முடைய ஆத்ம நேசர்,நாம்
உளையான சேற்றில் விழுந்து
கிடந்தாலும் அவர் நம்மை தூக்குகிறவராகவும்,தனது கரத்தினால் நம்மை தாங்குகிறவராகவும் கன்மலையின் மேல் நம்மை நிறுத்தி உயர்த்துகின்றவராயும் இருக்கின்றார்
(சங்கீதம் 40:2)(சங்கீதம் 37:24)

இயேசு இந்த பூமியில் வாழ்ந்த நாட்களிலே
தன்னை மறுதலிக்க போகிறவர்களையும், ஆபத்திலே தன்னை விட்டு விட்டு
ஓடிப் போக போகிறவர்களையும், கடைசி வரை நேசித்தார்.

அவரின்
அன்பும் சிநேகமும் மாறவே இல்லை
(யோவான் 13:1) என்று சொல்கிறது…
“தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்தபடியே,
முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார் என்று வாசிக்கிறோம்.

துன்பம் துடைப்பவன் ‘உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே,
இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார் வள்ளுவர். நல்ல நண்பன் என்பவன் எதையும் எதிர்பாராமல்,
நண்பர்களுக்கு வரும் துன்பத்தை துடைப்பவனே ஆவான்.

(யாக்கோபு 2:23) இல் நாம் படிக்கிறோம்,
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்,
அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
இன்று ஆபிரகாமின் சந்ததியாகிய
நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் நாமும்
தேவனுடைய சிநேகிதர்களாய் இருக்கின்றோம்,
பிதா தாமே உங்களை சிநேகிக்கிறார்.(யோவான் 16:27)

உலக சிநேகத்திற்கு ஒரு முடிவு உண்டு. ஆனால் தேவ அன்பு மட்டுமே மரணத்திற்கு பின்பும் தொடரும் பந்தம்.

கர்த்தர் தாமே இந்த புதிய மாதத்தில் நல்ல நண்பராய் நம்மோடு கூட இருந்து வழிநடத்துவாராக.
ஆமென்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *