இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுக்களை அறுப்பேன். நாகூம் :1:13
எனக்கு அன்பானவர்களே!
நுகத்தடிகளை நீக்கி நம்மை நிமிர்ந்து நடக்கப் பண்ணுகிற அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு ஊழியர் சொல்லுகிறார் நான் ஆப்பிரிக்காவிலுள்ள ‘பெனின்’ என்ற தேசத்திற்குப் போன போது, அந்த மக்களை சிறைப்படுத்த, வியாபாரிகள் ஒருவரின் கழுத்தின் மேல் மரத்தினாலாகிய ஒரு நுகத்தை வைத்து, இரும்பு சங்கிலிகளால் முன் நடக்கிறவர்களையும், பின் நடக்கிறவர்களையும் இணைத்து, ஆயிரமாயிரமான பேரை அடிமைகளாக்கி அமெரிக்கா கொண்டு போய் விற்பதற்காக நடத்திக் கொண்டு போகிற ஓவியத்தைப் பார்த்தேன்.
பசியும், பட்டினியுமாய் வாழ்ந்த அவர்களுக்கு, விடுதலை கிடைக்கவில்லை. ஆடு, மாடுகளை ஏற்றுவதைப் போல கப்பலில் ஏற்றி, பல மாதங்களுக்கு பிறகு, அவர்களை மார்க்கெட்டில் ஏலமிட்டு விற்பனை செய்தார்கள். அந்த அடிமைத்தன நுகத்தைப் பார்க்கும் போது, மிகவும் மன வேதனையாயிருந்தது.
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்’
யோவான்:8:36.
ஆண்டவராகிய இயேசு நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்று சொன்னார்.
’இயேசுவே சத்தியம்’ அவரின் விடுதலையே மெய்யான விடுதலை. அன்பானவர்களே! உங்கள் வாழ்க்கையில் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு இருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல க்கூடுமா?
சத்தியத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையாகிய ஆண்டவர் இயேசுவைப் பற்றிக் கொள்ளுங்கள். விடுதலை பெறுவீர்கள்.
வேதத்தில் பார்போம்,
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.
யோவான்:8:36.
நீர் என் ஆத்துமாணவினிடத்தில் வந்து அதை விடுதலை பண்ணும், என் சத்துருக்களினி மித்தம் என்னை மீட்டுவிடும்.
சங்கீதம்: 69:18.
சிறைப்பட்டுப் போனவன் தீவிரமாய் விடுதலையாவான், அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை.
ஏசாயா: 51:14
பிரியமானவர்களே,
பிசானசானவன் இப்படித் தான் ,பலர் மேல் கடன் சுமையை ஏற்றி, அடிமைகளாக வைக்கிறான். வட்டி கட்ட முடியாத படி, தடுமாறுகிறார்கள். வேறு சிலர் மேல் நோய், வியாதி, சாபம் என்னும் நுகத்தடியோடு வாழ்கின்றனர்.
கர்த்தரை அறிந்து கொள்ளும் போது தான் நாம் உண்மையான விடுதலையடைகிறோம். ‘பாவம் செய்கிறவன் பாவத்துக்கு அடிமை. குமாரன் உங்களை விடுதலையாக்கினால் நீங்கள் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று
இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே சீஷராயிருப்பீர்கள். சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.
இயேசுவை தங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் அறிந்து கொள்ளுபவர்கள் தங்களை கட்டியிருக்கும் பாவக் கட்டுகளிலிருந்தும் அடிமைப்படுத்தும் தீய பழக்கங்களிலிருந்தும் விடுதலை பெறுகின்றனர்.
இயேசு அவர்களை விடுவிக்கிறார்.
தேவபிள்ளைகளே,
சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” “கர்த்தருடைய ஆவி எங்கேயோ, அங்கே விடுதலையுமுண்டு”
இன்றைக்கு உங்கள் நுகத்தடியைப் பார்த்துக் கொண்டிராமல், விடுதலையாக்குகிற கர்த்தரை நோக்குங்கள். எந்த நுகத்தடியையும் முறித்துப் போட அவரால் முடியும் என்பதை விசுவாசியுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் அனைவரோடும் கூட இருப்பதாக.
ஆமென்.