Daily Manna 238

மரண வாசல்களிலிருந்து என்னைத் தூக்கி விடுகிற கர்த்தாவே, சங்கீதம்: 9:13

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மெல்பா பட்டிலோ பீல்ஸ் என்ற பெண்கள் “லிட்டில் ராக் நைன்” என்ற குழுவிலுள்ள ஒன்பது பேர்களில் ஒருத்தியாகத் தேர்வு செய்யப்பட்டாள். இதுவரை, வெள்ளையர்கள் மட்டுமே பயின்று வந்த லிட்டில் ராக் – அர்கன்சாஸ் உயர் நிலைப் பள்ளியில்,
முதல் முறையாக பள்ளிக் கல்வியை முடித்தாள்.

ஆப்பிரிக்க – அமெரிக்க மாணவர்கள் இவர்கள். 2018ம் ஆண்டு இவள் எழுதிய சுய சரிதையில் “நான் பயப்பட மாட்டேன், என்னுடைய வாழ்வின் கதைகள்,
சோதனைகளின் மத்தியில் என்னுடைய நம்பிக்கையை உறுதியாயிருந்தது” என எழுதினாள்.

பதினைந்து வயதே நிரம்பிய மாணவியான இவள், தைரியமாக ஒவ்வொரு நாளும் சந்தித்த கொடுமைகளையும், அநியாயங்களையும், இருதயத்தை உடையச் செய்யும் நிகழ்வுகளையும் எழுதினாள்.

பீல்ஸ் தேவன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை, இருண்ட நாட்களின் பயம் மேற்கொண்ட போது, சங்கீதம் 23-ஐ சொல்லிக் கொள்ளுவேன்.

அவற்றைக் கூறும் போது எனக்கு ஆறுதல் கிடைத்தது. “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்” என்ற வசனம் என்னை தேற்றியது.

என்னுடைய இளம் வயதில் என் பாட்டி என்னிடம் சொல்லுவார்கள்.நீ எதை குறித்தும் கவலைப்படாதே
தேவன் உனக்கு, உன் தோலைப் போல் மிக அருகிலிருக்கின்றார்
நீ கூப்பிடும் போது உடனே அவர் உனக்கு உதவுவார்” என்று கூறிய என்னுடைய பாட்டியின் ஊக்கம் தரும் வார்த்தைகள் என்னுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தன.

அந்த வார்த்தை தான் என்னை மிகக் கொடிய சோதனையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது. பாட்டியிடமிருந்து நான் கற்றுக் கொண்ட வேத வார்த்தைகளை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டேன்.

அவற்றை நான் உச்சரித்த போது, தேவப் பிரசன்னம் என்னோடிருந்ததை நான் உணர்ந்தேன். வேத வார்த்தைகள் எனக்குச் சோதனையைச் சகிக்க பெலன் கொடுத்தது, என்னை தைரியப்படுத்தினது என்று தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

ஆம், நம் அன்பின் ஆண்டவர் நம்முடனே கூட இருக்கிறார்.
எப்படிப்பட்ட கவலைகள், கஷ்டங்கள் இருந்தாலும் நம்மை மீட்டெடுத்து வழிநடத்த வல்லவர்.

வேதத்தில் பார்ப்போம்,

நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார், ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.
சங்கீதம்: 68:20.

கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று: அதினால் மரணக் கண்ணிகளுக்குத் தப்பலாம்.
நீதிமொழிகள்: 14:27.

தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்,
பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள் மேல் நோக்கமாயிருக்கிறது.
சங்கீதம் :33:18-19.

பிரியமானவர்களே,

பல நேரங்களில், தொடர்ந்து கஷ்டமான சூழ்நிலைகளை நாம் சந்திக்கும் போது சோர்ந்து போகிறோம்.
ஏன்? எனக்கு இப்படி எல்லாம் நடக்கிறது, நான் என்ன பாவம் செய்தேன் ? என்று சிந்திக்கிறோம். கலங்கிப் போய் விடுகிறோம்.

சிலருக்கு வேலை இல்லை, சிலருக்கு கடன் பிரச்சனை , சிலருக்கு குடும்ப பிரச்சனை,சிலர் தவறான பழக்கங்களை பழகி விட முடியாமல் தவிக்கிறனர். இப்படி அன்றாடம் பல, பல போராட்டங்களில் போராடி தவிப்பவர்கள் உண்டு.

கர்த்தரையே தேடுகிற, நம்பிருக்கிற நமக்கு ஏன் இப்படி ஒரு சோதனை என்று நம்மை நாமே பல நேரம் கேட்பதுண்டு. ஆனால்
கர்த்தர் எல்லா நேரங்களிலும் நமக்கு அற்புதம் செய்வது இல்லை.

மாறாக அந்த கஷ்டங்களில் நம்மோடு கூட இருந்து நமக்கு பெலன் தந்து அதை கடந்து போக கற்றுத் தருகிறார்.
தாவீது சொல்வதை பாருங்கள் …..
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என்று.

கர்த்தரால் அபிஷேகம் பெற்ற மனிதன் தாவீது, அவர் சந்தித்த கஷ்டங்களை திரும்பி பாருங்கள்…தப்பி ஓடுகிறார், மறைந்து வாழ்கிறார் , மனைவி பிள்ளைகளை எதிரிகள் பிடித்து செல்கின்றனர் , பெற்ற மகனே கொல்ல தேடுகிறான்…

இப்படி பல கஷ்டங்கள் தாவீதுக்கு இருந்தது, ஆனாலும் கர்த்தர் தாவீதோடு கூட இருந்து அவனை விடுவித்தார்.
நாமமும் இந்த கஷ்டமான சூழ்நிலைகளில் செய்ய வேண்டியது இதுவே. கர்த்தருக்குள் நம்மை எப்போதும் பெலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் நம்மோடு இருக்கிறார். இந்த கஷ்டங்கள் நம் ஆண்டவருக்கு எம்மாத்திரம் ! நம்மை ஒருபோதும் கை விடமாட்டார்.

பீல்ஸ்மிக்கும். தாவீதுக்கும் விடுதலை கொடுத்த அன்பின் ஆண்டவர் நமக்கும் நம் எல்லா பிரச்சனைகளிலிருந்தும், அன்பான இயேசு கிறிஸ்து நமக்கு பூரண விடுதலை தந்து நம்மை
மகிழ்விப்பார்.

இத்தகைய ஆசீர்வாதங்களை நாமும் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *