குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான்: 8:36
எனக்கு அன்பானவர்களே!
விடுதலை அளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு சகோதரி கூறுகிறார்,“எனக்கு இப்போது 63 வயதாகிறது. நான் பிறந்த போது, நான் ஒரு பெண் குழந்தையாக இருந்ததால் என் அம்மா என்னைக் கொல்ல முயன்று இருக்கிறர்.
ஆனால் என் தந்தை என்னைக் காப்பாற்றி வளர்த்தார். எனக்கு திருமணமாகி, என் மகனுக்கு ஒன்றரை வயதாயிருக்கும் போது என் கணவர் இறந்து விட்டார்.
எவ்வித ஆதரவுமில்லாமல் நான் தனியாக பலவிதமான வேதனைகளையும், துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தேன்.
நான் ஒரு தொழிலை ஆரம்பித்தேன். அது தோல்வியடைந்தது. என் மகன் வளர்ந்து பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு சென்றான். அங்கு அவன் வகுப்புகளுக்கு செல்லாமல், தவறான பாதைகளில் செல்ல தொடங்கினான்.
என் பாரம் அதிகரித்தது. வீட்டு வாடகை, உணவு, வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் சந்திக்கப்படாமல் தவித்தேன். வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே மிகவும் போராடினேன்.
இப்படிப்பட்ட நேரத்தில் தான் இயேசு கிறிஸ்துவை அறிய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சகோதரி என்னை சந்தித்து என்னை ஆறுதல்படுத்தி, என்னை ஒரு பிரார்த்தனைக்காக அழைத்துச் சென்றார்.
அதன் பிறகு இரட்சிப்பின் பாதையில் என்னை நடத்தினார். நான் என் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்தேன்.
பல சகோதரிகள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து எனக்காக ஜெபித்த போது, பலவிதமான கட்டுகளிலிருந்து நான் முழுமையாக விடுதலையை பெற்றேன்.
அன்றே எனக்கு ஒரு பகுதி நேர வேலை கிடைத்தது.எனது மகனின் மாற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்த போது, தேவன் அவனையும் முழுமையாக விடுவித்தார்.
இப்போது அவன் தனது படிப்பை முடித்து,நல்ல வேலைக்கு செல்கிறான். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் நான் அனுபவிக்காத மகிழ்ச்சியையும் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் கர்த்தர் எனக்கு பூரணமாய் கொடுத்திருக்கிறார்.
என்று கூறினார்.
வேதம் கூறுகின்றது,
“குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவான்: 8:36) என்று
வியாதியிலிருந்தும், பிசாசின் கட்டுகளிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.
உண்மையான விடுதலை என்பது இயேசுவின் மூலமே வருகிறது.
வியாதியிலிருந்தும், பிசாசின் கட்டுகளிலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார்.
வேதத்தில் பார்ப்போம்,
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் :8 :32.
கர்த்தரே ஆவியானவர் ; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
2 கொரிந்தியர்: 3:17.
கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.
ரோமர்: 8 :2.
பிரியமானவர்களே,
ஒவ்வொருவருக்கும்கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் இவ்வுலகில் மெய்யான விடுதலையுண்டு.
அவருடைய வார்த்தையினாலும், அவருடைய இரத்தத்தினாலும், அவருடைய ஆவியினாலும் விடுதலை உண்டு,
இயேசு கிறிஸ்துவினாலன்றி இவ்வுலகில் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், வியாதிகளிலிருந்தும், சிறையிருப்புகளிலிருந்தும், சாத்தானின் அடிமைபடுத்துதலிலிருந்தும் வேறு ஒருவராலும் விடுதலை தர இயலாது.
இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே இவ்வுலகின் வல்லடிக்கு தப்பி பரலோகத்துக்குள் செல்லும் மெய்யான விடுதலை கிடைக்கின்றது.
இவ்வுலக வளர்ச்சிக்கும், மேன்மைக்கும் இயேசு கிறிஸ்துவே வழி.
எவ்விதமான யாகங்களினாலோ, புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதினாலோ, தெய்வங்களினாலோ விடுதலை பெற இயலாது.
நேர்மையான சிந்தனை, நல்லொழுக்கம், நற்செயல்கள், இறைபக்தி போன்றவை மனிதனை நல்வழிபடுத்தும்.
இயேசு கிறிஸ்து மட்டுமே அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.அது மட்டுமல்ல,
மரணத்தினின்று நம்மை உயிர்ப்பித்து தம் இராஜ்யத்தில் சேர்க்க வாஞ்சையுள்ளவராயிருக்கிறார்.
அவர் நம்மை விடுவித்தால் ஒழிய வேறு வழியில் நாம் விடுதலை பெறவியலாது.
ஆகவே
இயேசுவை நம்புங்கள்.
அவர் வார்த்தையை நம்புங்கள்.
இயேசுவே மெய்யான தெய்வம்.
அவர் தருவதே மெய்யான விடுதலை என்பதை உணர்ந்து இந்த ஓய்வு நாளில் விடுதலையைப் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.