Daily Manna 69

துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். மத்தேயு 5:4

எனக்கு அன்பானவர்களே!

துன்பத்திலும் ஆறுதலை அளிக்க வல்லவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

சவுதி அரேபியா கிழக்கு பிரதேசம், புரய்தஹ்வை சேர்ந்த ஒருவர், தன் சொந்த தங்கை பாத்திமா அல் முதைரி யை சில நாட்களாகவே சந்தேகப்பட்டு வந்தார்.

பாத்திமா அவர்கள் அடிக்கடி இயேசுவைப் பற்றி தன் குடும்பத்தாருடன் கருத்தை பகிர்ந்துள்ளார். இதனால் பாத்திமாவின் சகோதரர் தனது தங்கையின் கணினி (கம்ப்யூட்டர்), புத்தகங்களை தோண்ட ஆரம்பித்தார்.

அப்போது அவருக்கு சில பரிசுத்த வேதாகமத்தின் வசனங்கள், இயேசு கிறிஸ்துவை பற்றின காரியங்கள் மற்றும் பாத்திமா வின் கணினியில் ஓர் சிலுவையும் இருந்துள்ளது.

இதைப் பற்றி பாத்திமாவிடம் விசாரித்தார். கடும் கோபம் வந்தது. பாத்திமாவை ஓர் அறையில் அடைத்து வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.

பாத்திமா தனக்கு ஏதோ நிகழப் போகிறது என்று புரிந்து கொண்டார். உடனே
தன் கணினியை எடுத்து தன் கடைசி கடிதத்தையும் கவிதையையும் தேவனுகேன்று எழுத ஆரம்பித்தார்.

அக்கடிதத்தில் தனக்கும் குடும்பத்தாருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. “நான் மிகுந்த நெருக்கத்தில் இருக்கிறேன்.
அவர்கள் என்னை நீ”மாறிவிடு, இல்லையென்றால் குற்றவாளியாவாய்” என்று என் சகோதரர் மிரட்டினார்.

“என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டன” என்று நான் கூறினேன். பிறகு எனக்கு தெரியாமல் என் சகோதரர் கணினியைப் பார்த்து நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினதை கண்டுபிடித்து விட்டார்.

நான்கு மணிநேரம் இந்த அறையில் அடைபட்டு கிடப்பது எனக்கு பயத்தை ஏற்படுத்தினாலும் “கர்த்தர் என்னோடு இருக்கிறார். அவர் என் வெளிச்சமும், ரட்சிப்புமானவர். யாருக்கு அஞ்சுவேன்?”

உங்கள் பட்டயத்தை பற்றி கவலையில்லை, நான் பயப்படவில்லை
தேவனால் மரணத்திற்கு ஒப்பு கொடுக்கப்படுகிறேன்,

நாங்கள் சிலுவையை வணங்கவில்லை, இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கிறோம்.
உண்மையான மேசியாஹ் இயேசு கிறிஸ்துவை வணங்குகிறோம்.
எங்களை வாழ விடுங்கள்
என் கண்ணீர் என் தாடையை தடவி பார்க்கிறது.

என் இதயம் சோகத்தில் உள்ளது.
கிறிஸ்தவர்கள் மேல் ஏன் இவ்வளவு மூர்க்கம் கொள்கிறீர்கள்? தெரியவில்லை
மேசியாவின் வார்த்தை “நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்பதே

ஒ கிறிஸ்தவர்களே, இந்த சோகமான வாழ்க்கைக்காக என் கண்களில் கண்ணீர் வருகிறது.
வரலாறுகளும், சாட்சிகளும் நாங்கள் கிறிஸ்தவர்கள் (இயேசு கிறிஸ்து) மேசியாவின் வழியில் நடப்பவர்கள் என்று சாட்சி கூறும்
என்னுடைய கடைசி வார்த்தை “இந்த உலகத்தில் உள்ள மேசியாவான இயேசுவிடம் ஜெபிக்கிறேன்,
அவர் நம்மை வெளிச்சத்தின் பாதையில் நடத்துபவர் எனக்கு பயமில்லை” என்று இணையதளத்தில் தனது கடைசி கவிதையை எழுதினார்.

நான்கு மணிநேரம் கழித்து அவள் சகோதரன் வந்து, தன் சகோதரியை உயிரோடு எரித்தார். அவர் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. பிறகு அவள் உயிர் இருக்கும் போதே ,அவள் நாக்கை வெட்டினார். பின்பு தன் சகோதரியை கொலை செய்தார்.

அன்பானவர்களே.
இது ஒரு பகுதியில் நடந்தது தான். தன்னுடைய வாழ்க்கை முடிவது தெரிந்தாலும் தைரியமாக ஓர் அரேபிய இணைத்தளம் மூலம் இயேசுவை உலகத்திற்கு அறிவித்து விட்டு மரித்துப் போனார்.

இவரைப் போல் பல ரகசிய கிறிஸ்தவர்கள், ஊழியர்கள், போதகர்கள் உள்ளனர். இவர்களை நீங்கள் நேரில் சந்திக்க முடியாது. ஆனால் அவர்களுக்காக ஜெபிக்க முடியும்.

வேதத்தில் பார்ப்போம்,

உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
மத்தேயு :24:9

இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே
1 தெசலோ:3 :3.

இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
வெளி:7:14

பிரியமானவர்களே,

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு இவ்வுலகில் உபத்திரவம் உண்டு என்றே ஆண்டவர் சொன்னார். அதே வேளையில் எல்லா உபத்திரவங்களிலும் இயேசு நம்மோடு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இயேசு சொன்னார் அவர்கள் உங்களை ஜெப ஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும் என்று
யோவான்: 16 : 2 ஆவியானவரால் இப்படியாக எழுதி வைத்திருக்கிறார்.

சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்தி சொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டுமென்று சொன்னார்கள்.

ஆகையால் உபத்திரவத்தை பார்த்து நாம் ஒருபோதும் சோர்ந்துவிட வேண்டாம்.
எவ்வெளவுக்கெவ்வளவு நீதியினிமித்தம் துன்பத்தை, உபத்திரவத்தை அனுபவித்து மரணத்தின் விளிம்பில் இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு யுகா யுகமாக கிறிஸ்துவோடு கூட வாழ ஆயத்தமாகி விட்டோம் என்று அர்த்தம்.

ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்
ரோம 8 : 18 என்று பவுல் சொல்கிறதை பார்க்கலாம்.

மாத்திரமல்ல பிலிப்பு சபைக்கு பவுல் எழுதும் போது சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் பிலி 1 : 12 என்று சொல்வதின் மூலம் ஒவ்வொரு உபத்திரவத்திலும் சந்தோசம் மகிழ்ச்சி காணப்படும் என்பதை பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்டதான உபத்திரவங்களை கர்த்தருடைய பிள்ளைகள் தாண்டி வர வேண்டும். அப்படி வருபவர்களை தான் கர்த்தர் பாக்கியவான்களாக பார்க்கிறார்.

மாத்திரமல்ல அப்படிப்பட்டதான நீங்கள் தான் பரலோகராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளப் போகிறீர்கள்.

ஆம், நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்களாய் இருப்பார்கள். அவர்களுடைய பிரதிபலனும் கர்த்தரிடமிருந்து மிகுதியாய் இருக்கும்.

ஒரு வேளை நாமும் கர்த்தருக்காக, நீதிக்காக நம் வாழ்வில் துன்பங்களை சகித்திருந்தால் நாமும் பாக்கியவான்களாய் சதாகாலமாய் தேவனோடு இருக்கும் பாக்கியத்தை பெற்றுக் கொள்வோம் என்பதில் ஐயமில்லை.

இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு அருள் புரிவாராக.
ஆமென்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *