He remembered us in our low estate His love endures forever.
நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136 :23. =========================எனக்கு அன்பானவர்களே! உயர்ந்தவராய் இருந்தும், தாழ்மையுள்ளவர்களாகிய நம்மை நோக்கிப் பார்க்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருவன் நன்றாய் வாழ்ந்திருக்கும் போது அவனைச் சுற்றி ஏராளமானோர் இருப்பார்கள். ஓடி ஓடி பணிவிடை செய்வார்கள். உறவுகள் தேடி வரும். அவனே ஒருநாள் வாழ்வில் விழுந்து போனால், எல்லோரும் அவனை விட்டு ஓடி ஒளிந்து விடுவார்கள்….