The Lord Jesus gives us a new beginning in our lives

The Lord Jesus gives us a new beginning in our lives

மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்.
லூக்கா 1:38

=========================
எனக்கு அன்பானவர்களே!

புதிய துவக்கத்தை நம் வாழ்வில் அருளிச் செய்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து தன்னை கர்த்தரின் திட்டத்திற்கு ஒப்புவித்த பெண் தான் இயேசுவின் தாயாகிய மரியாள்.

வேதத்தில் காபிரியேல் தூதன்
என்பவர் மிகவும் முக்கியமான சமயங்களில் மாத்திரமே பரலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து மக்களுக்கு தேவனின் திட்டத்தை வெளிப்படுத்துவார்.

இயேசு பிறக்க போகும் செய்தியை மரியாளுக்கு அறிவிக்கும் படியாய் வெளிப்பட்டார்.

மரியாளோ இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை என்று தன்னை கர்த்தரின் பணிக்கென்று ஒப்பு கொடுத்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இதே போன்றொதொரு சம்பவம் பழைய ஏற்பாட்டிலும் நடந்துள்ளது. வயது முதிர்ந்த சாராள் ஏற்ற காலத்தில் பிள்ளை பெறப் போவதாக கர்த்தர் ஆபிரகாமிடம் தெரிவித்தார். இதை கேட்ட சாராள் நகைத்தாள்.

ஏனெனில் குழந்தை பெறும் பருவத்தை அவள் சரீரம் கடந்து விட்டது. இந்த முதுமைக் காலத்தில் குழந்தையுண்டாக முடியுமா? சாராளுக்கு அதிர்ச்சி ! அந்த நிலையை கடந்து விட்டேனே! என்று சிரிப்பு தான் வந்தது.

கர்த்தரோ ஆபிரகாமை நோக்கி, “சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்க பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” ஆதி: 18: 13, 14.என்று சொல்லி கர்த்தர் தமது வல்லமையை ஆபிரகாமுக்கு எடுத்துரைத்தார்

புதிய ஏற்பாட்டு பெண்ணான மரியாளுடன் பழைய ஏற்பாட்டு பெண்ணான சாராளை ஒப்பிட்டுப் பார்ப்போமாயின் அநேக வித்தியாசங்களை நம்மால் கவனிக்க முடியும்.

சாராள் கணவனை அறிந்தவள். வயது முதிர்ந்தவள் அனுபவமிக்கவளாயிருந்தும் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்ட போது இது எப்படியாகும்? என்று சாராள் நகைத்தாள்

ஆனால் மரியாளோ கணவனை அறியாதவள். அனுபவம் இல்லாத சின்ன பெண். ஆண்டவரின் வார்த்தையை கேட்ட உடனே
மரியாள் விசுவாசித்தாள்.

ஆனால் “கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?” என கர்த்தர் அவளிடத்தில் கேட்குமளவிற்கு சாராள் சந்தேகமும் அவிசுவாசமும் உடையவளாய் இருந்தாள்.

முதலிலேயே தன் அடிமைப் பெண்ணான ஆகாரைத் தன் கணவனாகிய ஆபிரகாமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்து, அவனது விசுவாசத்துக்கும் இடறலாக இருந்தாள்.

ஆனால் மரியாளோ தேவனுடைய வார்த்தையை முற்றிலுமாய் நம்பி, அதற்குக் கீழ்ப்படிந்து, தேவ குமாரனைப் பெற்றெடுக்கும் பாக்கியத்தை பெற்றாள்.

எனவே தான் “மரியாள்
நமது ஆண்டவருக்கு
தாயானாள்”.
லூக் 1:43.
“சாராளோ ஜாதிகளுக்கு தாயானவள்”
ஆதியா:17:16 என்று பார்க்கிறோம்.

கீழ்படிதல் தான் மேலான ஆசீர்வாதங்களை கொண்டு வரும்.

இன்று கர்த்தருடைய வார்த்தை நமது செவியில் தொனிக்கும் போது சாராளைப்போல நகைத்து, இருதயத்திலே சந்தேகிக்காமல்,
மரியாளைப் போன்று “உம் வார்த்தையின் படி எனக்கு ஆகக்கடவது” என்று முற்றிலுமாய் நாம் கீழ்ப்படிதலுடனும், விசுவாசத்துடனும் நம்மைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கும் போது தான் ஆண்டவரின் உள்ளம் மகிழும்.

வேதத்தில் பார்ப்போம்,

கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத் திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.
ஆதியாக:18:14.

இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாதது தான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மத்தேயு 19 :26

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.
எபிரேயர் 11:6.

பிரியமானவர்களே,

இன்றைக்கும் கர்த்தர் வாக்கு மாறாதவராக, தம்மை விசுவாசிக்கிற மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வல்லமை உள்ளவராக இருக்கிறார்.

நம்முடைய வாழ்க்கையில் எவைகள் எல்லாம் முடிந்து போனது என்று நினைத்து நாம் கலங்கிக் கொண்டு இருந்தோமோ, அவைகளை கர்த்தர் நமக்கு புதிதாக துவக்கப் போகிறார்.

இனி நடக்கவே நடக்காது என்று நீங்கள் முடிவு கட்டி, முற்றுப்புள்ளி வைத்தவைகளுக்கு, கர்த்தர் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறார்.

சாராளுடைய கர்ப்பம் செத்துப் போய் இருந்த சூழ்நிலை தான். எல்லாம் முடிந்து விட்டது என்று மனிதர்களால் கூறப்பட்ட நிலையிலும், ஒரு புதிய துவக்கத்தை கர்த்தர் உண்டு பண்ணி ஈசாக்கை கொடுத்து புதிய நன்மைகளை கொடுத்தார்.

ஆம், நம் வாழ்வில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி எல்லா வாசல்களும் மூடப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்’’ வெளி 3:8.என்று சொன்னவர், நமக்காக புதிய வாசலைத்
திறக்கிறார்.

இதுவரை உங்கள் சுய எண்ணத்தின்படியாக எல்லாவற்றையும் யோசித்த நீங்கள் , இன்று கர்த்தருடைய வார்த்தைக்கு உங்களை ஒப்புக் கொடுங்கள்.

இதுவரை உங்களை தோல்வியடையச் செய்து வந்த எல்லாவற்றிலும் இருந்தும் கர்த்தர் உங்களை விடுவித்து உங்கள் வாழ்வில் புதிய துவக்கத்தைக் கொடுக்க விரும்புகிறார்.

எவைகள் எல்லாம் முடிந்து போனது என்று நீங்கள் நினைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவைகள் இனிமேல் தான் துவங்கப் போகிறது.
இதுவரை நீங்கள் எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வந்த காரியங்களை கர்த்தர் நிறைவேற்றிக் கொடுக்கப் போகிறார்.

விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் கர்த்தரை மட்டுமே சார்ந்து தேவனை நோக்கி, “உமது வார்த்தையின் படி என்னுடைய வாழ்க்கையில் நான் முடிந்து போனது என்று நினைத்தவைகளை எனக்கு நீர் துவக்கி தரப் போவதற்காக நன்றி’’ என்று கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். கர்த்தர் உங்களுக்கு அற்புதம் செய்யப் போகிறார்.
இல்லாததை உருவாக்கப் போகிறார்.

நமக்காக பாலகனாகப் பிறந்த இயேசு கிறிஸ்துவை, மரியாளைப் போல கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்பு கொடுத்து புதிய துவக்கத்தை காண நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

Similar Posts

  • The Lord GOD has given me the tongue of the wise

    The Lord GOD has given me the tongue of the wise இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும் படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; ஏசா 50 :4. •••••••••••••••••••••••••••••••••••••••• எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த ஏழையானவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான். ஒருநாள் வேட்டைக்குச்…

  • Daily Manna 183

    சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; நீதிமொழிகள்: 13:4. சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது;நீதிமொழிகள்: 13:4.~~~~~~~~எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும் படி வேண்டினான்.அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் “டொக் டொக்கென்று” மரத்தைக்…

  • Daily Manna 227

    பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா மத்தேயு 7:11 எனக்கு அன்பானவர்களே! நன்மையானவைகளை நம் வாழ்வில் தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்காவில் ஒரு பள்ளியில் காலை 11:30 மணி அளவில் டெக்சாசிலுள்ள Robb Elementary என்னும் முன்னாள்மாணவனான Salvador Ramos (18) என்பவன், ஈவு…

  • Daily Manna 52

    அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப் பண்ணவுமாட்டார். ஏசாயா :42:2 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு நாள் மலையும், கடலும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டன.கடல் மலையை பார்த்து, “ஹும் … என்ன இருந்தாலும் உனக்குதான் எப்போதும் நல்ல பெயர்!!!” என்று பெருமூச்சு எறிந்தது… மலை, “ஏன் அப்படி சொல்கிறாய்?” என்று கேட்டது.“மலை போல் நம்புகிறேன் என்று தான் எல்லோரும்…

  • Daily Manna 222

    என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப் பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும்.அவர்களை நீதியின் வழியிலும், நியாய பாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். நீதிமொழிகள்: 8:20,21 எனக்குஅன்பானவர்களே! நன்மைகளின் பாதையில் நம்மை நடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு பால்காரன் தன் மாட்டிலிருந்து கறந்த பாலை ஒரு குடத்தில் இட்டு அதை தலையில் சுமந்தபடியே அடுத்த ஊருக்கு விற்கப் புறப்பட்டான்.பாலை விற்றதும் என்ன செய்யலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். இப்பாலை…

  • Daily Manna 44

    இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய் என்றார். லூக்கா:22:48. எனக்கு அன்பானவர்களே! அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். எதிர்பார்க்கும் முத்தமோ, எதிர்பாரா முத்தமோ அது இயல்பாய் இருந்தால் தான் அன்பின் வெளிப்பாடு. நாம் தாராளமாகவே முத்தங்கள் பரிமாறுகிறோம்! பெற்றெடுத்த குழந்தையை அரவணைத்து தாய் கொடுப்பது பாசத்தின் முத்தம். கணவன் மனைவிக்கிடையில் பரிமாறப்படுவது அன்பின் முத்தம். தான் செய்த தவறை மறைக்க பெற்றோரின் கழுத்தைக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *