Whoever believes has eternal life
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 6 :47.
=========================எனக்கு அன்பானவர்களே!
நித்திய ஜீவனை நமக்கு தர வல்லவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் பிரெக்கன்ரிஜ் என்ற ஒரு தமிழர் வாழ்ந்து வந்தார். அவரை களவு மற்றும் கொலை குற்றத்திற்காக மரணதண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர்.
ஆண்டவரின் ஊழியர் ஒருவர் சிறைச்சாலையில் அமைதியின்றி இருந்த பிரெக்கன் ரிஜ்ஜை சந்தித்துப் பேசினார். கருணை கடலாம் இயேசுவின் அன்பு அவரின் கல் மனதை கரைத்தது.
இயேசு கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்பட்டார். பாவியாகிய எண்னையும் இயேசு நேசிக்கிறார் என்று உரக்கக் கூறி மகிழ்ந்தார்.
அவர் நம்பிக்கை இயேசுவின் மேல் வந்தது. அதன் விளைவாக தான், அவர் “இயேசு நேசிக்கிறார் இயேசு என்னையும் நேசிக்க யான் செய்ததென்ன மா தவமோ” என்று கீர்த்தனைப் பாடலை உள்ளம் உருக எழுதினார்.
சிறைச்சாலையில் அப்பாடலை பாடி பாடி மகிழ்ந்தார். இறுதியில் அப் பாடலை பாடிக் கொண்டே தூக்கு மேடையை நோக்கி மகிழ்ச்சியோடு சென்றார்.
தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனே அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வுளவாய் இவ்வுலகத்தில் அன்புகூர்ந்தார்’ யோவான் 3:16.
ஒவ்வொரு மனிதனும் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படிக்கு இயேசு கிறிஸ்து நம் அனைவருக்கும் வழிகாட்டியுள்ளார்.
வேதத்தில் பார்ப்போம்,
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6 :23.
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5 :24.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
யோவான் 6 :54.
பிரியமானவர்களே,
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்று வேதம் கூறுகிறதல்லவா? நாம் நம்முடைய பாவங்களை மறைக்காமல் கர்த்தரிடம் அறிக்கை செய்து விட்டு விடும் போது அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மை சுத்திகரிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார்.
நாம் அவைகளை மறைத்து வைப்போமானால் நம் பாவங்கள் மன்னிக்கப்படாமல் நாம் நம்முடைய பாவங்களிலேயே மரித்து போவோமானால் எத்தனை பரிதாபம்! நித்திய ஜீவனை இழந்து போவோம்
ஒருவரின் வாழ்நாள் வீதம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் ஒருவரின் ஆயுசு நாட்கள் எழுபது வருடங்கள் என்று வேதாகமம் கூறுகிறது. இதற்கு மேல் வாழ்பவர்கள் உண்டு. ஆனாலும்
நாம் நூறு வருடங்கள் இப்பூமியில் வாழ்ந்தாலும் இம்மண்ணில் பிறந்தவர்கள் இம்மண்ணுக்கு திருபித்தான் ஆக வேண்டும் என்ற நியதி உண்டு.
நாம் இவ்வுலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததும்மில்லை ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்று பக்தன் யோபு குறிப்பிட்டுள்ளார். ஆனால், எமது சரீரம் மண்ணுக்கு திரும்பினாலும் நாம் அந்த நித்திய வாழ்வு அடையும்படிக்கு தேவன்
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது;
இதற்காகவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு தந்தருளியுள்ளார். அவராலே நமக்கு இலவசமான இரட்சிப்பு அருளப்பட்டுள்ளது.
மத்தேயு 9 ஆம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்து நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்கிறார்.
1 தீமோத்தேயு 1 ஆம் அதிகாரத்தில், பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான் என்கிறார் பவுல்
ஆக நாம் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும் அதை மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்ள இயேசு கிறிஸ்து ஆவலாய் இருக்கிறார்.
வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே,
யோவான் 5:39
ஆம் பிரியமானவர்களே, வேதத்தில் நித்திய ஜீவன் இருக்கிறது என்று வேதமே சாட்சி கொடுக்கிறது.
ஆகவே நாம் வேதத்தை ஆராய்ந்து பார்த்து, நமது பாவங்களைப் அறிக்கை செய்து விட்டு விட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வாஞ்சிப்போம்.
எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் யாவரையும் நிரப்பி காப்பதாக.
ஆமென்