Jesus Christ is miraculous

Jesus Christ is miraculous

அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9:6

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!

அதிசயசங்களை செய்பவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு புருஷனை அறியாத கன்னிகையிடம் இயேசு பிறந்தது அவர் அதிசயமானவர் என்றும் தெய்வீகத் தன்மை உடையவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இயேசுவின் தாயாகிய மரியாளும் அவருடைய வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத் ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

யூதர்களுடைய வழக்கத்தின்படி நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும்¸ பெண்ணுக்குமிடையே மூன்று கட்டங்களாக ஒப்பந்தங்கள் செய்யப்படுகிறது.

அவையாவன: முதலாவது சிறுபிராயத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் திருமணம் செய்யப்படும் என்று பெற்றோர்களுக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

இரண்டாவது பிள்ளைகள் திருமண பருவத்தை அடையும்போது இருபாலருடைய சம்மதத்தைக் கேட்டறிந்து ஒப்பந்தம் செய்து கொள்ளுவார்கள்.

மூன்றாவது
திருமணம் நடைபெறவிருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பாக சமுதாய மக்களின் முன்னிலையில் இரு வீட்டாரும் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண் அந்த ஒரு வருடகால இடைவெளியில் தனது கன்னித் தன்மையைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை அவள் தன் தவறான நடக்கையினால் கர்ப்பவதியானால்¸ அந்த ஒருவருட இடைவெளியில் அது தெரியவரும் போது¸ யூத வேதச் சட்டப்படி நிச்சயிக்கப்பட்ட மணமகன் அவளோடு செய்த நிச்சயதார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை நிச்சயித்து திருமணம் செய்து கொள்ள உரிமையுண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மரியாள் கர்ப்பவதியானாள் என யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. ஆகவே யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாகத் தள்ளிவிட மனதாயிருந்தான்.

ஆனால் யோசேப்பு நீதிமானாயிருந்த படியினால் அவன் மரியாளைத் தள்ளி விடுவதைத் தேவன் விரும்பவில்லை. ஆகவே¸ பிதாவாகிய தேவன் சொப்பனத்திலே ஒரு தேவதூதனை யோசேப்பினிடத்தில் அனுப்பி அவனுக்கு அறிவுரை கூறினார்.

“தாவீதின் குமாரனாகிய யோசேப்பே¸ உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்¸ அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

மத் 1:20-25 யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து¸ கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக் கொண்டு¸ அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து¸ அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.”

வேதத்தில் பார்ப்போம்,

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?
எரேமியா 32 :27.

அவர் தம்முடைய அதிசயமான கிரியைகளை நினைவுகூரும்படி செய்தார்,
சங்கீதம் 111: 4.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏசாயா 9 :6.

பிரியமானவர்களே,

இயேசுகிறிஸ்து அதிசயமானவர். அவர் பிறப்பு ஓர் அதிசயம். ஏனென்றால்¸ இந்த உலகத்தில் ஒரு மனிதனும் பிறக்காத விதத்தில் அவர் பிறந்தார். கன்னிகையின் வயிற்றில் உருவாகிப் பிறந்தார். இது ஓர் அதிசயம்.

மரியாள் என்னும் கன்னிகையினிடத்தில் காபிரியேல் வந்து, ‘கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்; ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’
லூக்.1:28 என்றான்.

“உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவகுமாரன் என்னப்படும்’ என்றும் சொன்னான். அவளுக்கு ஒரே பயம்! நான் இப்பொழுது தான் புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறேன்; எப்படி நான் கர்ப்பவதியாக முடியும்? ஒரு கன்னி கர்ப்பவதி ஆவது என்பது இயலாத காரியம்.

அப்பொழுது தூதன் சொன்னான்: ‘பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்’ என்று.

ஆகவே தேவாதி தேவன் பாவமாம்சத்தில் உள்ள ஒரு பெண்ணின் கர்ப்பத்தினுள் தன்னை அடக்கி ‘காலம் நிறைவேறின பொழுது’ சாதாரண ஒரு மனித குழந்தையைப் போலவே அவரும் பிறப்பார் என்றால் அது அதிசயம் தானே!

வானங்களைப் படைத்தவர்; வானாதி வானங்களும் கொள்ளாதவர் அவர்; ஒரு ஏழைத்தாயின் கர்ப்பத்தினுள் தன்னை அடைத்து ஒரு சாதாரண குழந்தை பிறப்பது போல் அவரும் பிறப்பார் என்றால் அவருடைய பிறப்பு அதிசயம் தானே!

அவர் பிறப்பில் இன்னொரு அதிசயம் என்ன? தேவன் மனிதனானார்; வார்த்தை மாம்சமானது; ‘அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம் பண்ணினார்;
அவருடைய மகிமையைக் கண்டோம்;’ யோவா.1:14.

அது தேவனுக்கு ஒப்பான மகிமையாக இருந்தது. அதுதான் அதிசயம்! அத்தனை மகத்துவம் உள்ள தேவன் தன்னை வெறுமையாக்கி மனித சாயலாய் அடிமையின் ரூபமெடுத்து ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தது அதிசயம்.

அதனால் தான் அவருடைய நாமம் அதிசயம்! அவர் அதிசயமான விதத்தில் பிறந்ததினால் அவர் தேவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை மறுபடியும் இணைக்க முடிந்தது.

அவர் பூமியிலே வாழ்ந்த காலத்தில் அவர் முழு பூரண மனிதனாக இருந்தாலும் அவருக்குள் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் இருந்தபடியால் அவர் இரு தன்மையும் உடையவராக இருந்தார். இது ஒரு அதிசயம்!

ஆகவே தான் அவருடைய நாமத்தை அதிசயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பாவம் நிறைந்த உலகில் இயேசுகிறிஸ்து மனிதனாக பிறந்தார். ஆனால் பாவம் இல்லாதவராக, பாவம் செய்யாதவராகவே அவர் வாழ்ந்தார்.
பாவமில்லாத பரிசுத்தராகிய இயேசு, நாமும் பரிசுத்தமாய் வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறார்.

அவர் நாமம் அதிசயமானவர். அவர் நம் வாழ்விலும் அதிசயங்களை செய்ய வல்லவர்.
அதிசயமான‌ கிரியைகளை நமக்காக நடப்பிப்பவர். இஸ்ரவேல் ஜனங்களை அதிசயவிதமாய் நடத்திய அதே தேவன் இன்றும் நம்முடைய வாழ்விலும் அதிசயங்களை செய்வார்.

இப்படிப்பட்ட அதிசயங்களை நாம் கண்டு அதிசயிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

  • Related Posts

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Daily Manna 243

    கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். சங்கீதம் :94 :22. எனக்கு அன்பானவர்களே! தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதிலளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    The Golden Gate’s Timeless Majesty

    The Golden Gate’s Timeless Majesty

    Rise of Competitive Video Gaming

    Rise of Competitive Video Gaming