Daily Manna 139
புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள். புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப் போடுகிறாள். நீதிமொழி:14:1 எனக்கு அன்பானவர்களே! நித்திய கன்மலையாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். வீடு கட்டப்படுவதையும், இடிக்கப்படுவதையும் கவனித்திருக்கிறீர்களா? கட்டுவதற்கு அதிக சிரமம் எடுக்கப்படும்.ஒரு கல்லின் மேல் ஒரு கல்லாக அடுக்கி நேர்த்தியாகக் கட்ட அதிக காலம் எடுக்கும்.அதிக செலவும் ஆகும். ஆனால், அதை இடிக்கும் போதோ அதை சுலபமாக தரை மட்டமாக்கி விடலாம். […]