Daily Manna 106
நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 1 கொரி 14 :15 எனக்கு அன்பானவர்களே! கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். தமிழ் நாட்டிலுள்ள ஒரு பிரபல ஊழியக்காரரிடம் ஒரு வாலிபனை கொண்டு வந்தார்கள். அவனோடு வந்தவர்கள் அந்த ஊழியக்காரரிடம் ஐயா இந்த வாலிபன் பொது இடத்தில் உங்களை தூஷித்ததினால் திடீரென்று பேச முடியாமல் ஊமையாகி போனான் என்றனர். […]