Daily Manna 21

கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். ரோமர்:10:9

எனக்கு அன்பானவர்களே!

நம்முடைய அருமை இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார்.

அவர் சொன்னது, ‘அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம் போவதற்கு? என்று வாதிடுகிறார்கள்.
ஆனால் இது ஒரு போதும் போதாது. இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விட வேண்டும். அந்த விமானம் மிகவும் உயர் ரக விமானம். அது அவனை சரியாக அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை
எல்லாம் ரெடியாக இருக்கிறது.

விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ இன்னும் விமானத்தில் வராமால் காலம் தாழ்த்தி கொண்டே வந்தான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான்.

ஆனால் அவன் அதில் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை.
அதனால் அவன் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை.

அது போல தான், ஒரு வேளை நாம் இயேசு கிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம். ஆனால் நாம் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், நம்முடைய நம்பிக்கை எல்லாமே வீண்’ என்று கூறினார்.

வேதத்தில் பார்ப்போம்,

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்
ரோமர்:10:10

மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல.
1யோவான்:4 :3

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கை பண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான்.
1யோவான்:4 :15

பிரியமானவர்களே,

இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவரை நம்முடைய விசுவாசமும், நம்பிக்கை எல்லாமே வீணாகத்தான் இருக்கும்.

நாம் எப்படி கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வது? அதற்காக நாம் நம் உடலை வருத்தி, காணிக்கைகளை கொண்டு வந்து அவரது பாதப்படியில் போட வேண்டும் என்கிற அவசியம் சிறிதும் இல்லை. அவரது நாமத்தை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு இரட்சிப்பு இலவசமே!
.
வேதம் சொல்கிறது, ‘என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்’.

ஆம், இதுதான் இரட்சிப்பு. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு நம் வாயினாலே அறிக்கையிட்டு, நீர் என் பாவங்களுக்காக சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தீர் என்றும் விசுவாசிக்க வேண்டும்.

அப்படி விசுவாசித்ததை வாயினால் அறிக்கை செய்யும் போது நாம் இரட்சிக்கப்படுவோம்.
கர்த்தரின் வருகை சமீபமாயிருப்பதினால், நாம் எவ்வளவு துரிதமாய் கர்த்தரை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அத்தனை துரிதமாய் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அந்திக்கிறிஸ்து வருவதற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்து விட்டது. அவன் வருவதற்குள் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நாம் எடுத்துக் கொள்ளும் படியாக நாம் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

‘யோவான் ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்’
(மத்தேயு:11:12). ஆம், பலவந்தமாகவோ, இல்லாமலோ பரலோக ராஜ்யத்திற்கு தயாராகும்படி எச்சரிக்கிறார்கள். நாம் அதைப் பிடித்துக் கொள்வோமானால், நித்திய ஜீவன் நமக்கு உண்டு.

அந்த நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம். விசுவாசத்தோடு பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாவோம்.

கர்த்தர் தாமே இந்த வார்த்தைகள் மூலமாய் நம்மை தகுதிபடுத்தி அவரது பரலோக வாழ்வுக்கென்று நம்மை தகுதிபடுத்துவாராக
ஆமென்

  • Related Posts

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

      ✝️ தயவு — கிறிஸ்துவின் நம்மிடத்திலான அழகிய கனி “எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.”— யோபு 10:12 ✨ ஆரம்ப வாழ்த்து எனது அன்பான சகோதரர் சகோதரிகளே,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்…

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    Finding Rest in the Goodness of the Lord

    Finding Rest in the Goodness of the Lord