If you are willing and obedient, you will eat the good things of the land

If you are willing and obedient, you will eat the good things of the land

நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
ஏசாயா 1:19

***********
எனக்கு அன்பானவர்களே!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு முறை குரு ஒருவர் தன்னுடைய சீடர்களுடன் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.

குரு தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர் கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.

அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏரியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது.

அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப்படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.

இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டு போய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பி விட்டான். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.

ஒரு மணி நேரம்
சென்ற பிறகு, குரு தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார்.நீர்நிலை அருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற் சென்று பதிந்திருந்தது.

ஒரு பானையின் தண்ணீரை மொண்டு கொண்டு சீடன் குருவிடம் திரும்பினான். குரு தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.

தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?

நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!

நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?

ஆமாம் சுவாமி!

நம் மனமும் அப்படிப்பட்டது தான்..
மனம் குழப்பத்தில் இருக்கும் போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அமைதியாக மனதை அப்படியே கடவுளிடம் விட்டு விட வேண்டும்.

சிறிது நேரத்திற்குப் பின் அந்த மனது கடவுளின் அருளால் சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது கடவுளின் அற்புத சக்தியால் அமைதியாகி விடும் .

நடக்க வேண்டியது எல்லாம் சரியாய் நடக்கும் அது நம்முடைய முயற்சியின்றி நடக்கும்.

மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை! அதற்கு கடவுளின் பங்கு மாத்திரமே தேவை.

வேதத்தில் பார்ப்போம்,

மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
நீதி 19 :3.

நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
ஏசாயா 1 :19.

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35 :4.

பிரியமானவர்களே,

நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான பயம் நம்மை மனம் பதறச் செய்கிறது. அநேக வேளைகளில் எதிர்காலத்தைக் குறித்த பயம்,

மனங்கலங்கி போய் சஞ்சலப்படுகிறீா்களா? பலவிதமான பிரச்சனைகளினால் நீங்கள் அமைதியின்றி தவித்து என்ன செய்வதென்று அறியாமல் இருக்கிறிர்களா ?

தேவன் சொல்கிறாா்.
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறாா். யோசுவா: 1:9 என்று சொல்லுகிறார்.

எனவே எதைக் குறித்தும் சஞ்சலப்படாதீா்கள். கலக்கமடையாதீா்கள் இஸ்ரேல் ஐனங்களுக்கு விரோதமாக யுத்தம் செய்கிற எதிாிகளைக் குறித்து தேவன் சொல்கிற காாியம் என்னவென்றால்..

இஸ்ரலேரே, கேளுங்கள்,
இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தம் செய்யப் போகிறீர்கள், உங்கள் இருதயம் துவள வேண்டாம், நீங்கள் அவர்களைப் பார்த்து பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.

உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.
உபாகமம் 20:4 என்றார்.

ஆதலால்
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே, நான் உன் தேவன்,நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன், என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன் என்றார்.

ஒரு வேளை நாமும் சில சமயங்களில் கலங்கிய நீரைப் போல மனக்குழப்பங்களில் இருக்கலாம். மன போராட்டத்தில் இருக்கலாம். நம் இருதயத்தை கர்த்தரிடம் ஒப்புக் கொடுக்கும் போது கர்த்தர் நம் போராட்டங்களை மாற்றி, மன அமைதியை தர வல்லவர்.

“நான் உன்னுடனே இருக்கிறேன்”என்று வாக்கு பண்ணியிருக்கிறார்.
வாக்கு பண்ணியவர் உண்மையுள்ளவர்.

இந்த ஓவ்வுநாளிலே அவர் நமக்கு ஆறுதல் அளித்து மனநிறைவோடு வாழ நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.

ஆமென்

  • Related Posts

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

      ✝️ தயவு — கிறிஸ்துவின் நம்மிடத்திலான அழகிய கனி “எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.”— யோபு 10:12 ✨ ஆரம்ப வாழ்த்து எனது அன்பான சகோதரர் சகோதரிகளே,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்…

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    Finding Rest in the Goodness of the Lord

    Finding Rest in the Goodness of the Lord