Daily Manna 276

உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். உபாகமம்: 20:1 அன்பானவர்களே! என்றென்றும் நம்மோடு கூடவே இருந்து வழிநடத்துகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலக மகா யுத்தத்தின் போது, அமெரிக்க படைத் தளபதிகள் யாவரும் ஒரேயிடத்தில் கூடி, ஜெர்மனியைத் தாக்க தயாராக இருந்தனர். ஜெர்மானியப் படைகள் மிகவும் வலிமை பெற்றவை. ஆகையால் அமெரிக்க தளபதிகள் நடு நடுங்கினார்கள். அவர்களில் ஜெனரல் ஐசனோவர் என்ற தேவ மனிதர் இருந்தார். அவர்…

Daily Manna 275

மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. நீதிமொழிகள்:27:21 எனக்கு அன்பானவர்களே! இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். இந்நாட்களில் சோதனைகள் பல ரூபங்களில் நம்மைத் தாக்க நேரலாம்; வியாதியாகவோ, பண கஷ்டமாகவோ, சபலமாகவோ, துன்புறுத்தலின் வடிவிலோ நம்மைத் தாக்கலாம். ஆனால் ஒன்றை மறவாதீர்கள் உங்களுக்கு வரும் சோதனைக் களங்கள் எல்லாம், உங்களுக்கு சாதனைத் தளங்களே! நீங்கள் சோதனைகளை தவிர்க்க நினைத்தால் பல சாதனைகளும் தவிர்க்கப்படும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் இந்த உலகத்தால்…

Daily Manna 274

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள்: 12:22. எனக்கு அன்பானவர்களே! உண்மையுள்ளவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் என்னவென்றால் பொய் கூறுவது. அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும். ஆண்கள், பெண்களை விட அதிகமாக பொய் சொல்லுகிறார்கள்” என்று ‘லண்டன் சயின்ஸ் மியூசியம்’ என்ற அமைப்பு செய்த ஆய்வில்…

Daily Manna 273

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்கீதம் 122:1 எனக்கு அன்பானவர்களே! தமது ஆலயத்தின் சம்பூரணத்தினால் நம்மை நிரப்பி ஆசீர்வதிக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு தம்பதியினர் ஒரு ஞாயிற்றுக்கிழமைகாலையில் சோம்பலாக படுத்திருந்தனர். அதில் மனைவி எழுந்து ஆலயத்திற்கு செல்ல புறப்பட ஆரம்பித்தார்கள். ஆனால் கணவரோ எழுந்து புறப்படுகிற வழியாக இல்லை. அப்போது மனைவி, ‘என்னங்க. ஆலயத்திற்கு புறப்படவில்லையா?’ என்று…

Daily Manna 272

ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார். உங்கள் மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதி செய்கிற தேவன். ஏசாயா :30::18 எனக்கு அன்பானவர்களே! மனதுருக்கமுள்ள இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை ஜனாதிபதி ரிச்சர்டு நிக்சன் தனது அதிகாரத்தை இழந்த போது, சகஊழியர்களுடன் அவரும் சிறையிலடைக்கப் பட்டார். அங்கு ஒருவர் அவருடனே மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். அவர் சிறையில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட, தன்னை ஒருநாள் இந்த சிறையிலிருந்து தேவன்…

Daily Manna 271

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம்: 51:3. எனக்கு அன்பானவர்களே! ‌பரிசுத்தமாக்குகிற பரமன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதைக்…