Daily Manna 274

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள்: 12:22.

எனக்கு அன்பானவர்களே!

உண்மையுள்ளவராகிய இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

உலகமெங்கும் வியாபித்திருக்கின்ற ஒரு தீமையான காரியம் என்னவென்றால் பொய் கூறுவது. அல்லது உண்மையல்லாத வாழ்க்கை வாழ்வது. பெரும்பாலான மக்களின் வாழ்வில் இதைக் காண முடியும்.

ஆண்கள், பெண்களை விட அதிகமாக பொய் சொல்லுகிறார்கள்” என்று ‘லண்டன் சயின்ஸ் மியூசியம்’ என்ற அமைப்பு செய்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆண்கள் அதிக பொய் சொல்ல பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல அடிக்கடி தூண்டப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.

‘யாரிடம் ஆண்கள் அதிக பொய் சொல்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு, ‘மனைவியிடம் தான் அதிகமாக பொய் சொல்கிறார்கள்’ என்பது பதிலாக இருக்கிறது.

மனைவி மனம் கோணாமலிருக்க, மனைவியின் பார்வையில் தன் ‘இமேஜை’ காப்பாற்றிக் கொள்ள, குடும்பத்தில் சண்டை ஏற்படாமலிருக்க, தன்மீது அன்பு வைத்திருக்கும் மனைவியின் அன்பு குறைந்து விடாமலிருக்க.. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்கள் அதிகமாக மனைவியிடம் பொய் சொல்கிறார்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பொய்களையாவது மனைவியிடம் ஆண்கள் சொல்கிறார்கள்.
சிலருக்கு பொய் என்பது உயிருடன் கலந்து விட்டது. தன்னை அறியாமலேயே அவர்கள் பொய் சொல்கிறார்கள். சாதாரண காரியத்துக்கும் சிறிதும் யோசிக்காமல் பொய் சொல்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை ஆபத்தானது.

மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பதற்கும் மற்றவர்களை தாழ்த்துவதற்கும் பொய் சொல்லப்படுவதுண்டு. தன்னுடைய நன்மைக்காக நம்மை நேசிக்கும், நம்மீது நம்பிக்கை வைக்கும் மக்களிடம் கூட அவர்களை மதிக்காமல் உண்மைக்கு புறம்பாக பேசுபவர்கள் இன்று அநேகம்.

கடவுள் உண்மையாக இருப்பவர்களை நேசிக்கிறார். ஆண்டவர் வெறுக்கும் ஏழு காரியத்தில் இரண்டு பொய் சார்ந்தது, அவை பொய்யுரைக்கும் நாவு என்றும் பொய்யுரைக்கும் போலிச் சான்று என்றும் படிக்கிறோம்.
நீதிமொழி:6:17-19.

பொய்யின் சிந்தனைகள் இருக்கின்ற உள்ளத்தில் உண்மை இருக்காது. அற்ப சந்தோஷத்திற்காக சொல்லும் பொய்கள் நிலைப்பதில்லை. மனிதர்கள் அழியலாம், ஆனால் அவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அழிவதில்லை.

ஆதலால் தான் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் உண்மையுள்ளதாக இருத்தல் வேண்டும்.
ஒரு போதும் பாதி உண்மை முழு உண்மையாகாது. உண்மை என்பது முழுமையானது. பொய் தன்னலமானது, அதில் துளி கூட அன்பில்லை.

இயேசு உண்மையுள்ளவர் என்றும், நாம் படிக்கும் வேதம் உண்மையானது, கலப்படமில்லாதது என்றும் ஆழமாக நம்புகிற நாம் ஏன்?அவர் வழியை பின்பற்ற முடியவில்லை.

நாம் இவ்வுலகில் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். இல்லையென்றால் வேதத்தை பின்பற்றுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

வேதத்தில் பார்ப்போம்,

என் நாமத்தைக் கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
லேவியராக: 19 :12.

அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
சங்கீதம்: 12:2.

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
நீதிமொழி: 28 :20.

பிரியமானவர்களே,

வேதத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்கள் ஆதி திருச்சபையில் ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தவர்கள்.

அவர்கள் சென்று தங்கள் செல்வத்தை எல்லாம் விற்று விட்டு பேதுருவிடம் ஒப்படைத்த போது கொஞ்சம் தங்களுக்கு என்று வைத்து விட்டு எல்லாவற்றையும் கடவுளுக்கு கொடுத்தோம் என்று பொய் சொன்னார்கள்.

கடவுளின் முன்னிலையில் பொய் சொன்ன காரணத்துக்காக கணவனும் மனைவியும் அங்கேயே சுருண்டு விழுந்து மாண்டனர். கொஞ்சத்தை நமக்கென்று வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது தவறல்ல,

ஆனால் அவர்கள் சொன்ன சிறிய பொய் தான் கடவுளின் முன்னிலையில் பெரிய தவறாக கருதப்பட்டது. ஒரு சிறு பொய் கூட தங்களை அழித்து விடும் என்பதை அனனியா, சப்பிராள் வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கிறது.

தன்னை தான் உயர்த்தி காட்டுவதற்காக மக்கள் பொய் சொல்கிறார்கள். இவ்வுலகில் எல்லா இடங்களிலும் இந்த பொய் என்ற மாயத் தோற்றம் காணப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.

போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் விரும்புவதில்லை. தங்களை ஆன்மிகவாதிகள் என்றும், அல்லது பணக்காரர்கள் என காட்டிக் கொள்பவர்களை அவர் எப்போதும் வெறுக்கிறார்.

செருக்கு கொண்ட மனிதர்களை அவர் எதிர்க்கிறார். பணிவு கொண்ட மனிதர்களை அரவணைக்கிறார். நாம் செய்கிற எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற சிந்தனை நம்மில் இருக்குமானால் நாம் எந்த தவறும் செய்ய மாட்டோம்.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
நீதிமொழி: 12:22

ஆம் பிரியமானவர்களே,
உண்மை உள்ளவராகிய இயேசுவை பின்பற்றுகிற நாம் அவர் காட்டிய சத்திய வழியில் நடந்து உண்மையுள்ளவர்களாய் வாழ வேண்டும் என்பதையே தேவன் எதிர்பார்க்கிறார்.

வேதத்தில்
மத்தேயு :25:23- ல் “உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களை அநேகத்தின் மீது அதிகாரியாக கர்த்தர் வைப்பார் என்று உண்மையின் மகத்துவத்தை இவ்வசனம் கூறுகிறது.

நாமும் தேவன் தருகிற உயர்வுகளை சுதந்தரித்துக் கொள்ள உண்மையின் வழியில் நடந்து பரலோக வாழ்வுக்கு தகுதிபட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships