Daily Manna 31

கர்த்தர் நன்மையானதைத் தருவார், சங்: 85:12 அன்பானவர்களே! இம்மாதத்தில் கர்த்தர் உங்களை விசேஷ விதமாக ஆசீர்வதித்து உங்களுக்கு நன்மையானதைத் தரப்போகிறார். எனவே சோர்ந்து போகாதிருங்கள். ஒரு சமயம் வாலிபன் ஒருவன் நல்ல வேலைக்காக வெகு நாட்கள் காத்திருந்தார். அவர் காத்திருந்தது வீண்போகாமல் அவர் எதிர்பார்த்தபடியே அவருக்கு நல்லதொரு இடத்தில் இருந்து நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்தது. அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி, நேர்முக தேர்வை எதிர்பார்த்து அதற்காக தயாராகி, வெளியூர் செல்ல வேண்டும் என்பதற்காக முன்பதிவில் பயண சீட்டும்…

Daily Manna 30

கர்த்தரை நம்பி நன்மைசெய், தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். சங்: 37:3 அன்பானவர்களே! அமெரிக்காவின் நியூயார்க் நகரம். அது ஒரு மருத்துவமனையின் பிரத்யேக வார்டில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள்கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக் கொள்ளும் நர்ஸ் வந்தார். சார்… உங்களைப் பார்க்க உங்க மகன் வந்திருக்கார்.’’ முதியவர்…

Daily Manna 29

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மத்: 4:15 அன்பானவர்களே! ஒரு சமயம் அட்லாண்டிக் கடலில் ஒரு பயணக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஓர் இளைஞனுக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமாகிக் குளிரில் மிகவும் நடுங்க ஆரம்பித்தான். கப்பலில் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த கட்டிலில், கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தான். தாங்க முடியாத குளிராக இருந்ததால் முனகிக் கொண்டே படுத்திருந்தான். தூக்கம்…

Daily Manna 28

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும், கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். சங்:140:1 அன்பானவர்களே! ஒரு மரத்தில் இரு அணில்கள் இங்கும் அங்கும் தாவி குதித்து சந்தோஷத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்து விட்டது. அணில் மேலே விழுந்ததும் விழித்தெழுந்த ஓநாய் அதைப் பிடித்துக் கொண்டது. ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் ‘என்னை விட்டுவிடு ‘ என கெஞ்சியது….

Daily Manna 27

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள். என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்: 122:1 அன்பானவர்களே! ஒருவர், “என்னம்மா இன்றைக்கு மகள் ஆலயம் வந்திருக்கிறாள்?” என்று கேட்டார். “ஆமாம் நாளை பரீட்சை, அதுதான் வந்தாள்” என்ற பதில் அம்மாவிடமிருந்து வந்தது. “என்ன குடும்பமாய் இன்று ஆலயம் வந்திருக்கிறீர்கள்?” என்றால், “மகனுக்கு “பெண் பார்க்க போகவேண்டும். அதுதான் ஆலயம் வந்து ஜெபம் செய்து விட்டு போகலாம் என்று வந்தோம்” என்ற பதில். இப்படியாக ஆலயம் செல்லுவதற்கு எத்தனை…

Daily Manna 26

உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது. எரே:5:25 அன்பானவர்களே! ஒருவன் இன்னொருவனிடம் கேட்டான், “உன் வாழ்க்கையில் உன்னுடைய மிகப்பெரிய எதிரியாக யாரைக் கருதுகிறாய்?” என்று. “எனக்கு நானேதான் மிகப்பெரிய எதிரி” என்று மற்றவன் பதிலளித்தான். இது ஒரு உண்மையானக் கூற்று. ஒரு மனிதனுக்கு வெளியில் பலவிதங்களில் பல எதிரிகளும், விரோதிகளும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அவனுடைய மிகப்பெரிய எதிரி அவனுக்குள்ளேயேத்தான் இருக்கிறான். மனிதனுக்கு பிறரால் வரும் தீங்குகளைவிட அவனால் அவனுக்கு ஏற்படும் தீங்குகள் தான் மிக அதிகம்….