Promises may be delayed but they will surely come true in our lives.

Promises may be delayed but they will surely come true in our lives.

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப் போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்.
மீகா: 5:2.

========================
எனக்கு அன்பானவர்களே!

இறை மைந்தன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் தேவன் நம்முடைய வாழ்வுக்கென்று ஒரு பெரிய திட்டத்தை வைத்திருக்கின்றார் என்பது உண்மை என்றாலும், நம்முடைய வாழ்வில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை நாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.

ஆனால் இயேசு கிறிஸ்துவினுடைய மானிட வாழ்வைப் பொறுத்தவரை, அவர் மனிதனாக இவ்வுலகத்தில் பிறப்பதற்கும் முன்பே அவருடைய வாழ்வுச் சம்பவங்கள் அனைத்தும் வேதாகமத்தின் முதற்பகுதியான பழைய ஏற்பாட்டில் பலநூறு வருஷங்களுக்கும் முன்பே எழுதப்பட்டுள்ளன.

இதனால் தான் தம்முடைய வாழ்வைக் குறித்து அவர் சொல்லும் போது, “மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்”
( மத்தேயு: 26:24,
மாற்கு 14:21 )என்று தெரிவித்தார். ஏனென்றால், அவருடைய வாழ்க்கையில் நடைபெற்ற காரியங்கள் அனைத்தும் ஏற்கனவே பழைய ஏற்பாட்டுக் கால தீர்க்கதரிசிகளினால் முன்னுரைக்கப்பட்டிருந்தது.

இதனால் தான், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் மத்தேயு அவருடைய வாழ்க்கையின் பல சம்பவங்களை “தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இவ்வாறு நடந்தது” என்னும் விளக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். உண்மையில், மொத்தம் 232 பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் நிறைவேறியுள்ளதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இயேசு கிறிஸ்துவின் இவ்வுலக வாழ்க்கையில் 232 தீர்க்கதரிசனங்கள் சொல்லர்த்தமாக நிறைவேறியுள்ள போதிலும், அவருடைய பிறப்பில் நிறைவேறிய மூன்று தீர்க்கதரிசனங்கள் ஆராயப்பட்டுள்ளன. இவை
அவர் எப்படி பிறப்பார்? எங்கு பிறப்பார்? எப்படிப்பட்டவராய் இருப்பார்? என்பதைப் பற்றிய முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களாகும்.
இயேசுகிறிஸ்து எப்படி பிறப்பார் என்பதை ஆதி.3:15-ல் தேவன் முன்னறிவித்துள்ளார். இது இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் முன்பு ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமாகும்.

பிற்காலத்தில் இதே விஷயம்,
அவருடைய பிறப்பு நடைபெறுவதற்கு 700 வருஷங்களுக்கு முன்னர் வாழந்த மீகா என்னும் தீர்க்கதரிசி, அவர் எங்கு பிறப்பார் என்பதை முன்னறிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து பிறந்த பொழுது வானத்தில் தோன்றிய சிறப்பான நட்சத்திரத்தைக் கண்டு யூதருக்கு ஒரு ராஜா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்து, அவரைத் தேடி அக்காலத்தில் யூதேயாவை ஆண்டு வந்த அரசன் ஏரோதுவிடம் வான சாஸ்திரிகள் சென்ற போது, அங்கிருந்த பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மீகா 5:2ஐ ஆதாரமாகக் கொண்டே அவர் பெத்லகேமில் பிறப்பார் என்று அறிவித்தார்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
ஏசாயா 7:14.

காலம் நிறைவேறின போது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.
கலாத்தியர் 4 :5.

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.
மீகா 5:2

பிரியமானவர்களே,

எருசலேம் நகருக்கு தெற்கே சில மைல்கள் தொலைவில் உள்ள பெத்லகேம் அக்காலத்தில் மிகவும் சிறியதோர் பட்டணமாக இருந்தது.

இஸ்ரவேலை ஆளும் பிரபு அங்கு பிறப்பார் என்று மீகா இவ்வசனத்தில் முன்னறிவித்துள்ளார்.
அக்காலத்தில் பாலஸ்தீனாவின் வடக்கில், இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் ஒன்றான “செபுலோன் கோத்திரத்தினருக்கு” கொடுக்கப்பட்ட பிரதேசத்திலும் பெத்லகேம் என்னும் பெயரில் ஒரு பட்டணம் இருந்ததினால் (யோசு.19:15),

அதிலிருந்து இயேசு கிறிஸ்து பிறக்கும் ஊரை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காவே
மீகா இதை “ எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேம்” என்று குறிப்பிட்டுள்ளார். எப்பிராத்தா என்பது பெத்லகேம் என்னும் ஊரினுடைய பழைய பெயர் என்பதை ஆதி.35:16, 35:19, 48:7 போன்ற வசனங்கள் அறியத் தருகின்றன.

மீகா கூறிய இத் தீர்க்கதரிசனத்தில் “புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது” என்னும் சொற் பிரயோகம் இயேசு கிறிஸ்து நித்தியமானவர் என்பதையும், இதனால் அவர் தேவன் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

பெத்லகேம் அற்பமான சிறிய பட்டணமாக இருந்தாலும், இது தாவீது பிறந்த ஊராக இருந்ததினால், தாவீதின் வம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவும் இவ்வூரில் பிறந்துள்ளார்.
.
மீகா உரைத்த தீர்க்கதரிசனத்தின் படி இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பதற்காக மரியாளும் யோசேப்பும் 80 மைல்கள் தொலைவிலிருந்த நாசரேத் என்னும் ஊரிலிருந்து பெத்லகேமுக்குச் சென்றனர்.

அக்காலத்தில் இஸ்ரவேல் மக்களுடைய தேசம் ரோம சாம்ராட்சியத்தின் அடிமைத்தனத்துக்கு உட்பட்டிருந்தது.
இயேசு கிறிஸ்து பிறந்த வருஷம் முதலாம் குடிமதிப்பு எடுக்கப்பட்டதினால் 80 மைல்கள் தொலைவில் நாசரேத் என்னும் ஊரில் குடியிருந்த இயேசு கிறிஸ்துவின் சட்டரீதியான தகப்பன் யோசேப்பு மரியாளுடன் தனது சொந்த ஊரான பெத்லகேமுக்குச் சென்றான்.

இல்லையென்றால் அவர்கள் நாசரேத்திலேயே இருந்திருப்பார்கள். எனவே, இயேசு கிறிஸ்து பிறந்த வருஷம் குடிமதிப்பு எடுக்கப்பட்டதினாலேயே அவர் பெத்லகேமில் பிறக்கக் கூடியதாய் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

உண்மையில்,
”தேவனுடைய திட்டத்தையும் வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றும் ஒரு ஊடகமாக ரோம சக்கரவர்த்தி செயற்பட்டு, குடிமதிப்பு எடுக்கும் முறையை அக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளான்”.

ஏனெனில், தமது திட்டத்தை நிறைவேற்றும் தேவன் அதற்கு ஏற்றவிதமாக உலகின் அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலைகளை மாற்றுகிறவராக இருக்கின்றார்.
ஏனெனில் அவர் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்.

நாமும் கர்த்தரை மட்டுமே நம்பியிருக்கும் போது, நமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும் படி எல்லா காலங்களையும், சமயங்களையும் நமக்காக மாற்றித் தருவார் .ஏனெனில் அவர் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவர்.

ஒருவேளை நமக்கான வாக்குத்தத்தங்கள் நிறைவேறாமல் காலதாமதம் ஆகலாம். ஆனால் அவைகள் கண்டிப்பாக நம் வாழ்வில் நிறைவேறும்.

ஆம் பிரியமானவர்களே, நம் வாழ்வில் வாக்குத்தத்தங்கள் நிறைவேற யோசேப்பும், மரியாளும் கர்த்தருடைய வார்த்தைக்கு காத்திருந்தது போல நாமும் கர்த்தருக்கு காத்திருக்கும் போது கர்த்தராலே நமக்கு சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதமுள்ள வாக்குத்தத்தங்களை சுதந்தரிக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

  • Related Posts

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

      ✝️ தயவு — கிறிஸ்துவின் நம்மிடத்திலான அழகிய கனி “எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.”— யோபு 10:12 ✨ ஆரம்ப வாழ்த்து எனது அன்பான சகோதரர் சகோதரிகளே,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்…

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    Finding Rest in the Goodness of the Lord

    Finding Rest in the Goodness of the Lord