The Lord loves you so much

The Lord loves you so much

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர்:2 :7.

“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””
எனக்கு அன்பானவர்களே!

மனுஷ சாயலாய் இவ்வுலகத்திற்கு வந்த இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு மிஷனெரி குடும்பமாக பிலிப்பைன்ஸ் (மணிலா) தேசத்திற்குப் போயிருந்தார். அங்கு குப்பை மேட்டில் வாழ்ந்த ஜனங்களைப் பார்த்து மிகவும் மனதுருகினார்.

அவர்களைக் குறித்து விசாரித்த பொழுது அவர்கள், “நாங்கள் இந்த குப்பை மேட்டிலிருந்து நகரத்திற்குப் போனதே கிடையாது. இங்கு தான் நாங்கள் சந்ததி சந்ததியாக கூடாரம் போட்டு வசிக்கிறோம்.” என்று சொன்னார்களாம்.

ஆகவே, அந்த குப்பை மேட்டில், வேண்டாம் என்று போடப்பட்ட பொருட்களினாலே மிஷனரியாய் வந்தவரும் கூடாரத்தை அமைத்து அவர்களுடன் தங்கினார். அங்குள்ள பிள்ளைகளை காலையிலே எழுப்பி, “வெளியே என்ன உணவு வகைகள் கிடைக்கிறதோ அதை எடுத்துக் கொண்டு வாருங்கள்” என்று அனுப்பினார்.

அதைத் தான் மூன்று வேளையும் அவர்கள் சாப்பிட்டு வந்தார்கள். இரக்கமுடையவர்களாக அங்கே மிஷனெரி ஊழியம் செய்து, அந்த மக்களுக்கு ஆண்டவரைப் பற்றி சொல்லி அவர்கள் வாழ்ந்திருக்கும் படியாக வழியை உண்டாக்கினார்கள்.

இந்த மிஷனெரி செய்ததை பாருங்கள். இவரைக் காட்டிலும் அதிகமாய் நமது பரலோக தகப்பன் நமக்கு செய்திருக்கிறார். அந்த காரணத்தினால் தான் தனது ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார்.

“தம்மைத் தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார் பிலிப்பியர் 2:7 என்று வேதத்தில் வாசிக்கிறோம். மனுஷர்களாகிய ஊழியர்கள் அப்படிச் செய்யும் பொழுது, நம்முடைய ஆண்டவர் எவ்வளவு அதிகமாக நமக்கு நன்மை செய்வார்!

ஆம், இந்த உலகத்தில் அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கிற தேவனாக வந்திருக்கிறார் ரோமர் 4:17. ஆகவே விசுவாசத்தோடு ஆண்டவரை தேடுவோம். அவர் நம் மனவிருப்பங்கள் யாவற்றையும் நிறைவேற்றுவார்.

வேதத்தில் பார்ப்போம்,

ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்;
எபிரேயர் 2:14

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2:6-7

பிரியமானவர்களே,

ஆண்டவர் உங்களை மிகவும் நேசிக்கிறார். ஆகையால் தான் தன்னுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து நமக்கு மீட்பை உண்டாக்கி தரவும், அதன் முலம் அனேக பாடுகளை படவும் தன் நேசகுமாரானை ஒப்புக் கொடுத்தார்.

அவர் ராஜாதி ராஜாவாகவும், தேவாதி தேவனாகவும் இருந்தார். நம்மை மீட்டெடுக்க நம்மைப் போலவே மனுஷ சாயலானார். நாம் வாழ்ந்திருக்கும் படியாகவே, இயேசு பரலோகத்திலிருந்து அடிமையின் ரூபமெடுத்து பூமிக்கு வந்தார்.

ஆகவே, தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவோம்.

“நான் ஒன்றுக்கும் உதவாதவள்(ன்). எனக்காக யாருமில்லை” என்று நீங்கள் கலங்கிக் கொண்டிருக்கலாம். கவலைப்படாதிருங்கள்! உங்களை நேசிப்பதற்காகவே இந்த உலகத்தில் அவர் அடிமையின் கோலம் எடுத்து இறங்கி வந்திருக்கிறார்.

உங்களுடைய வியாதி, கவலை, வெறுமையை, ஏழ்மை,இல்லாமை எல்லாம் அவர் அறிந்திருக்கிறார். நாம் வாழ்ந்திருக்கும்படியாகவே அவர் இந்த உலகத்தில் பிறந்திருக்கிறார்.

“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்து கொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார்” 1 கொரிந்தியர் 1:27 என்று வேதம் கூறுகிறது.

நம்பிக்கையோடிருங்கள். நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும், மற்றவர்களுடைய சுமையை உங்களால் இயன்ற அளவுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுடைய துயரங்களில் உதவுவதற்கு தயங்காதிருங்கள்.

சிறுமைப் பட்டவன் மேல் சிந்தையுள்ளவன்‌ பாக்கியவான். தீங்கு நாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார் என்று சங்கீதம்:41:1 -ல் உள்ளது. ஆகவே நாம் சிறுமையானவர்களுக்கு நன்மை செய்வோம். அவர்கள் மேல் சிந்தையுள்ளவர்களாய் இருப்போம்.

அப்பொழுது ஆண்டவர்,நம் வாழ்க்கையில் நாம் வேண்டிக் கொள்வதற்கும் விரும்புவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிற தமது வல்லமையின்படியே நம்மை ஆசீர்வதித்து உயர்த்துவார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தரும் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டு வளமாய் வாழ நமக்கு அருள் புரிவாராக.

ஆமென்

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships