GoodSamaritanTerritory

Daily Manna 29

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மத்: 4:15 அன்பானவர்களே! ஒரு சமயம் அட்லாண்டிக் கடலில் ஒரு பயணக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த ஓர் இளைஞனுக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமாகிக் குளிரில் மிகவும் நடுங்க ஆரம்பித்தான். கப்பலில் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த கட்டிலில், கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தான். தாங்க முடியாத குளிராக இருந்ததால் முனகிக் கொண்டே படுத்திருந்தான். தூக்கம் […]

Daily Manna 29 Read More »

Daily Manna 28

கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும், கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். சங்:140:1 அன்பானவர்களே! ஒரு மரத்தில் இரு அணில்கள் இங்கும் அங்கும் தாவி குதித்து சந்தோஷத்துடன் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு அணில் மரக்கிளையிலிருந்து தவறி மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஓநாயின் மீது விழுந்து விட்டது. அணில் மேலே விழுந்ததும் விழித்தெழுந்த ஓநாய் அதைப் பிடித்துக் கொண்டது. ஓநாய் தன்னைக் கொன்றுவிடும் என பயந்த அணில் ‘என்னை விட்டுவிடு ‘ என கெஞ்சியது.

Daily Manna 28 Read More »

Daily Manna 27

கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள். என்று எனக்கு அவர்கள் சொன்ன போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்: 122:1 அன்பானவர்களே! ஒருவர், “என்னம்மா இன்றைக்கு மகள் ஆலயம் வந்திருக்கிறாள்?” என்று கேட்டார். “ஆமாம் நாளை பரீட்சை, அதுதான் வந்தாள்” என்ற பதில் அம்மாவிடமிருந்து வந்தது. “என்ன குடும்பமாய் இன்று ஆலயம் வந்திருக்கிறீர்கள்?” என்றால், “மகனுக்கு “பெண் பார்க்க போகவேண்டும். அதுதான் ஆலயம் வந்து ஜெபம் செய்து விட்டு போகலாம் என்று வந்தோம்” என்ற பதில். இப்படியாக ஆலயம் செல்லுவதற்கு எத்தனை

Daily Manna 27 Read More »

Daily Manna 26

உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது. எரே:5:25 அன்பானவர்களே! ஒருவன் இன்னொருவனிடம் கேட்டான், “உன் வாழ்க்கையில் உன்னுடைய மிகப்பெரிய எதிரியாக யாரைக் கருதுகிறாய்?” என்று. “எனக்கு நானேதான் மிகப்பெரிய எதிரி” என்று மற்றவன் பதிலளித்தான். இது ஒரு உண்மையானக் கூற்று. ஒரு மனிதனுக்கு வெளியில் பலவிதங்களில் பல எதிரிகளும், விரோதிகளும் இருக்கலாம். ஆனால் உண்மையில் அவனுடைய மிகப்பெரிய எதிரி அவனுக்குள்ளேயேத்தான் இருக்கிறான். மனிதனுக்கு பிறரால் வரும் தீங்குகளைவிட அவனால் அவனுக்கு ஏற்படும் தீங்குகள் தான் மிக அதிகம்.

Daily Manna 26 Read More »

Daily Manna 25

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். சங்:128:1-4 அன்பானவர்களே! ஆலயங்களிலே திருமண ஆராதனையின் போது 128ஆவது சங்கீதங்களை வாசிக்கும் ஒரு பழக்கம் இருக்கிறது. அதை நாமும் கேட்டிருப்போம். 128ஆவது சங்கீதத்திலே அருமையான அநேக சத்தியங்கள் உள்ளன. இந்த சங்கீதத்திலே குடும்பத்தைக் குறித்ததான தேவ திட்டத்தைப் பார்க்கிறோம். உங்களுடைய குடும்ப வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய திட்டமாயிருக்கிறது. இதை வாசித்துக் கொண்டிருக்கும் கணவன்-மனைவி அல்லது புதியதாக திருமணமானவர்களே! இதோ, உங்களுக்கு கர்த்தருடைய

Daily Manna 25 Read More »