Daily Manna 159

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன். சங்கீதம்:119:12

உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.
சங்கீதம்:119:12
*************
எனக்கு அன்பானவர்களே!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு தகப்பன் மருத்துவமனையிலிருந்து தன் குழந்தையை அழைத்துக் கொண்டு புறப்பட்ட போது, திடீரென வீதி விளக்குகள் அனைத்தும் அணைந்து விட்டன.

அன்று அமாவாசை இருட்டு. சற்று தூரம் சென்ற பின், அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் விளக்கும் திடீரென அணைந்து விட்டது. பிரயாணமோ நீண்ட தூரம்.

ஆண்டவரைத் துதித்துப் பாடிய வண்ணம் மெதுவாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, திடீரென எங்கிருந்தோ ஒரு சைக்கிள் வேகமாக எங்கள் பக்கம் வருவது தெரிந்தது. அந்த சைக்கிள் வெளிச்சத்தில் அவர்கள் முன் சென்றனர்.

அவர்கள் போக வேண்டிய இடம்மட்டும் அவர்களோடு அந்த சைக்கிளில் வந்த நபரிடம் நன்றி சொல்வதற்கு திரும்பிய போது, அவர் முன் சென்று மறைந்து போனார்.

அன்று மட்டும் அவர் வந்திராவிடில் அந்த இருட்டில் நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம்” என்று தங்கள் அனுபவ சாட்சியை ஒரு குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர்.

ஒரு மோட்டோர் சைக்கிளை வழிநடத்தியது ஒரு சாதாரண சைக்கிள் வெளிச்சம்.
சங்கீதகாரன் தாவீது கூறுகின்றார், “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்கிறார்.

அதாவது, தனது வாழ்க்கை பாதையில் தன்னை வழிநடத்துவதற்கு வெளிச்சமாக தேவனுடைய வார்த்தை இருக்கிறது என்கிறார்.

இந்த இரகசியம் தேவனுடைய வார்த்தைகளைத் தினமும் தியானிப் போருக்கு மட்டுமே இது புரியும். ‘இது சங்கீதக்காரனின் அனுபவம்;

வேதத்தில் பார்ப்போம்

தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது, அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.
சங்கீதம்: 37:31

நான் பிழைத்திருக்கும் படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக, உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
சங்கீதம்: 119:77.

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
சங்கீதம்:119:105.

பிரியமானவர்களே,

தேவ மனிதரான கேம்பல் மார்கன் என்பவர் வேதத்தின் 66 புத்தகங்களுக்கும் சிறந்த விளக்கவுரைகளை எழுதியிருக்கிறார்.

அவர் குறிப்பிடும் பொழுது நான் ஒவ்வொரு புத்தகத்திற்கும் விளக்கவுரை எழுத ஆரம்பிக்கும் முன்னதாக, அந்த புத்தகத்தை குறைந்தது 50 முறையாவது படிக்காமல் நான் எழுதுகோலைத் தொடமாட்டேன் என்று கூறுகிறார்.

வேதத்தை நாம் தியானிக்க வேண்டும்.சங்கீதம் 1:2ல் கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று வாசிக்கிறோம்.

கர்த்தருடைய வார்த்தையை தியானிப்பது என்றால், அதை ஆழ்ந்து சிந்திப்பது, அசை போடுவது என்று பொருள்படும்.
இப்படி நாம் செய்யும் பொழுது, வேதத்திலிருந்து நாம் சிறந்த காரியங்களை கற்றுக் கொள்ள முடியும்.

நம் வாழ்வுக்கு தேவையான அனைத்தும் வேதப் புத்தகத்திற்குள் இருக்கிறது ,நாம் கிறிஸ்துவின் சாட்சிகளாயிருக்க வேண்டுமானால் நாம் வேதத்தையும் மற்றவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும்.

இந்த வழிமுறைகளோடு நீங்கள் வேதத்தை படிப்பீர்களென்றால், வேதப்புத்தகம் உங்கள் வாழ்கையில் பெரிய மாற்றத்தையும், சிறந்த செயல்களை உங்களால் செயல்படுத்த முடியும்.

எனவே வேதத்தை தினம் தினம் வாசிப்போம், மன நிறைவோடு தேவன் தருகிற சமாதானத்தை பெற்றுக் கொள்வோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *