Daily Manna 19

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன், அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம்:40:1

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஆவியின் கனிகளில் ஒன்று நீடிய பொறுமையாகும். ஆண்டவரின் பிள்ளைகள் கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படுவதற்கு பொறுமை மிக மிக அவசியமாகும்.

பொறுமையுள்ளவர்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருப்பார்கள்.

ஒரு சிறந்த ஆபரணம் செய்ய விரும்பும் தட்டான் அதிக பொறுமையாய் இருக்க வேண்டும்.அவன் இரும்பும், செம்பும், வெண்கலமும் தேடாமல், நல்ல பொன்னை தேடுகிறான். அதைக் கண்டுபிடித்து எடுத்து அதை பலமுறைப் புடமிடுகிறான்.
அதிலுள்ள அழுக்கு கழிவு முதலியவற்றை பொறுமையாய் நீக்குகிறான்.

மாத்திரமல்ல, சிறந்த வேலைப்பாட்டை மிக நுணுக்கமாய் அந்த பொன்னில் அவன் செய்கிறான். ஒரு ஆபரணத்தை செய்யும் போது, இரவும்,பகலும் உழைத்து மிக கருத்தோடு மிக ஜாக்கிரதையோடு செய்து முடிக்கிறான்.

கர்த்தர் உங்களை மிகவும் விலையேறப்பெற்ற ஆபரணமாக மாற்றுவதற்காகவே, உங்களை பாடுகளின் பாதையிலும், உபத்திரவத்தின் குகையிலும் நடத்துகிறார்.

நீங்கள் பொறுமையை இழந்து விடுவீர்களென்றால், அவருக்கு உகந்த ஆபரணமாய் உங்களால் விளங்க முடியாமல் போய் விடும்.
எனவே பொறுமை உங்களை அலங்காரமுள்ளவர்ளாய் மாற்றும்.

வேதத்தில் பார்ப்போம்,

உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளுங்கள்.
லூக்கா:21:19

நீ சகித்துக் கொண்டிருக்கிறதையும் பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.
வெளி:2 :3

நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
ரோமர்:12 :12

பிரியமானவர்களே,

யாக்கோபு எழுதுகிறார் , இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்
யாக்:5:11

யோபுவின் பொறுமை பரீட்சிக்கப்பட்ட போது அவர் சொன்னார். ” நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்.
யோபு:23:10 என்றார்.

அப்படியே அவர் சுத்த பசும் பொன்னாக விளங்கினார்.
தன்னுடைய சிறையிருப்பின் காலங்களிலே யோபு மிகவும் பொறுமையாக இருந்தார். சிறையிருப்பு மாறியதும் அவர் இரண்டத்தனையாய் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டார்.

வேதத்திலும் நீங்காத இடம் அவருக்கு கிடைத்தது. பொறுமையைக் குறித்து அருமையாய் போதிக்கக் கூடிய சிறந்த பக்தன் ஒருவர் உண்டென்றால் அது யோபு தான்.

எனக்கு அருமையானவர்களே!

நீங்கள் எல்லா சூழ்நிலையிலும் பொறுமையாயிருங்கள்.
வேதம் சொல்லுகிறது,
நெடுங்காலமாய் காத்திருத்தல் இருதயத்தைக் இளைக்கப் பண்ணும், விரும்பினது வரும்போதோ ஜீவ விருட்சம் போலிருக்கும்
நீதி:13:12

நீங்கள் பொறுமையோடு காத்திருக்கும் போது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சகலமும் நன்மையாகவே செய்து முடிப்பார்.

அவர் தருகிற நன்மைகளை பெற்றுக் கொண்டு வளமாய் வாழ கர்த்தராகிய ஆண்டவர் நமக்கு துணை செய்வாராக.
ஆமென்

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships