Daily Manna 257

மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். ரோமர் :8 :6.

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வுலகில் யாரும் விரும்பப்படாத ஒன்றும் உண்டு என்றால், அது மரணம் மட்டுமே.

இப்படி மனிதர்கள் ஒரு பக்கம் சென்றுக் கொண்டு இருக்க மற்றொரு புறம், DAVID GOODALL என்ற மனிதர் தனது 94 வது வயதில் முதுமையின் காரணமாக தன்னை கருணைக் கொலை செய்து விடுமாறு ஆஸ்திரேலியாவில் இருக்கும் நீதிமன்றத்தில் அனுமதிக் கேட்டார்.

அந்த நாட்டு சட்டத்தில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டு இருப்பதால் அந்த நாட்டு அரசு அவரின் மனுவை தள்ளுபடி செய்கின்றது. ஆனால் அவர் தன் வாழ்க்கையை தொடர விரும்பவில்லை.

இதனால் அவர் கருணைக் கொலை சட்ட பூர்வமாக அனுமதிக்கும் நாடான சுவிட்சர்லாந்துக்கு சென்று அந்த நாட்டு நீதிமன்றத்தில் போராடி கருணைக் கொலை மூலம் மரணிக்க அனுமதி பெற்றுக் கொள்கிறார்.

இந்த மரணத்திற்கு அவர் நீதிமன்றத்திடம் 10 ஆண்டுகள் போராடி அவருடைய 104 வது வயதில் அனுமதி பெற்றார். பின் அவர் தன் கடைசி ஆசையாக தான் மரணிப்பதற்கு முன்பு தனது பேரக் குழந்தைகளுடன் ஒரு நாள் விளையாடிவிட்டு பின் மரணிப்பதாக கூறுகின்றார்.

பின் அது போல் தன் கடைசி நாளை மகிழ்ச்சியாக தன் பேரக் குழந்தைகளுடன் செலவிட்டு பின் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் மே 18, 2018 அன்று தன் மரணத்தை ஏற்றுக் கொண்டார்.

முதுமை தவிர இவர் உடம்பில் வேறு எந்த குறைபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் “தங்களுக்கு வாழ ஆசையில்லையா?” என்று கேட்டதற்கு “நான் பிறந்தேன் என் விருப்பப்படி வாழ்ந்தேன் அதுபோல் என் விருப்பப்படி என் இறப்பையும் ஏற்றுக் கொண்டேன்”, என்று கூறினார்.

நாம் கிறிஸ்துவுக்குள் இருந்தால் தேவ ஆவியானவர் விரும்பும் காரியங்களையே நாம் செய்வோம். “மாம்ச சிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.

எப்படியென்றால், மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்க மாட்டார்கள்”

வேதத்தில் பார்ப்போம்,

பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
யாக்கோபு :1:15

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.
ரோமர் :8:9

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் :6 :23.

பிரியமானவர்களே,

நீங்கள் கலக்கத்துடனும் பயத்துடனும் இருக்கிறீர்களா? உங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்ளுங்கள். கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டிப்பாயிருக்கும் நாம் நமது சிந்தையையும் புதியதாய் மாற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் மாம்சத்தின் படி வாழ்ந்தால் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. இதுவே கிறிஸ்தவ வாழ்க்கையைப் போல
வாழ்ந்தாலும்
ஒரு சிலர் மாம்சத்தின் சிந்தனைக்கு விலகி வாழ முடிவதில்லை.

வேதம் கூறுகின்றன மாம்ச சிந்தை மரணம். எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் மாம்ச சிந்தையே மேலோங்க வாழவே பிரயாசப்படும்.

ஆனால் நாம் ஆவிக்குரிய சிந்தை உள்ள மக்களாக, வாழும் போது தான் மாம்ச சிந்தையை மேற்கொள்ள முடியும்.

ஆவிக்குரிய சிந்தை நம்மில் எப்பொழுதும் காணப்படுவது மிக அவசியமான ஒன்றாகும். பவுல் கூறுகிறார் “மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்”
(ரோம் 8:13) என்று சொல்லுகிறார்.

நம் வாழ்க்கையில் மேலோங்கும் சரீர சிந்தைகளை, ஆவியானவரின் பெலத்தைக் கொண்டு அழிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்”
(ரோமர் 6:23) என்று சொல்லுகிறார்.

நம்முடைய வாழ்க்கையில் கிறிஸ்துவின் மூலமாக நாம் நித்திய ஜீவனைப் பெற்று வாழ வேண்டியவர்கள். நாம் ஏன் மாம்ச சிந்தையினால் நித்திய மரணத்தை சுதந்தரிக்க வேண்டும்?

தேவன் நமக்கு அநுகிரகம் பாராட்டுகிறவராக இருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்மீது கிருபையும், பொறுமையும் கொண்டவராக இருக்கிறார்.

ஆகவே அன்பு நிறைந்த அந்த தேவனை நாம் சார்ந்து கொள்ளுவோம். அப்பொழுது ஆவியானவர் நம்முடைய மாம்ச சிந்தையை அழிக்க பெலனைக் கொடுப்பார்.

சோர்ந்து போகாமல் தேவனுடைய சர்வாயுதங்களைக் கொண்டு போராடு (எபேசியர் 6:11).

நாமும் மாம்ச சிந்தையை நம்மை விட்டு விலக்கி நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.

ஆமென்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *