Daily Manna 86

நான் விடாய்த்த ஆத்துமாவைச் , சம்பூரணமடையப் பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். எரேமியா 31 :25

எனக்கு அன்பானவர்களே,

இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தேவமனிதர் தன் மனைவியையும் தனது அன்பான ஒரு மகனையும் , மகளையும் மிகவும் சந்தோஷமாக அழைத்துக் கொண்டு, காரில் வெளியூர் புறப்பட்டார்.

ஆனால், பயணத்தின் இடையில் விபத்து ஏற்பட்டு தன் அன்பான மகளை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்த பொழுது, அவர்கள் நெஞ்சம் இரண்டாக பிளப்பது போல் இருந்தது.

ஆண்டவர், அந்த நிலைமையிலும் அவர்களைத் தேற்றினார். அரவணைத்து, ஆறுதல்படுத்தினார்.

இந்த வேதனையை புரிந்து கொள்ள முடியாத மற்றொருவர் அவரது மனைவியிடம் “ஏன் இறந்துபோன உங்கள் மகளை நினைத்து அடிக்கடி உங்கள் பிரசங்கத்தில் அழுகிறீர்கள். ஆண்டவர் தான் அவளை எடுத்துக் கொண்டு போய்விட்டாரே” என்று சற்று ஏளனமாயும், பரிகாசமாயும் கேட்டார்.
அவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.

யோபுவின் வாழ்விலும் தன் பிள்ளைகளையும் தனக்கு உண்டான யாவையும் இழந்து தவிக்கின்ற வேளையிலே தன் நண்பர்களால் நிந்திக்கவும், பரிகாசிக்கவும் செய்யப்பட்டார்.
எத்தனை கொடுமையான வேதனை பாருங்கள்.

நாட்கள் கடந்தன! அவருடைய ஒரே மகன் நண்பர்களோடு கடலிலே குளிக்க சென்றபோது, அவன் திரும்பி வராமல், மரணம் அவனை எடுத்துக் கொண்டு போய்விட்டது.

இந்த வேதனையான அனுபவத்திற்குப் பிறகு தான் பரிகாசித்த தேவ மனிதரைப் பார்த்து, “ஐயா, என்னை மன்னியுங்கள், நீங்கள் பட்ட வேதனை, சஞ்சலம், தவிப்பு இன்று தான் என்னால் உணர முடிகிறது” என்று கண்ணீர் விட்டு கதறினார் அழுதார்.

ஆனால் அந்த தேவ மனிதர். அன்று நடந்ததையெல்லாம் மறந்து, அவரை அணைத்து ஆற்றித் தேற்றினார்கள். அவருக்காக ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடி அவர் வேதனை மாறும்படியாக ஜெபித்து அனுப்பினார்.

வேதம் கூறுகிறது மத்7:2.-ல் நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். என்று பார்க்கிறோம்.

வேதத்தில் பார்ப்போம்,

பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள், எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்;
மாற்கு 4 :24.

நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.
மத்தேயு 7:1

நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்.
லூக்கா 6: 38.

பிரியமானவர்களே,

இன்று நாம் சந்தோஷமாய் இருக்கிறோம் என்று நினைக்கிற வேளைகளிலே, திடீரென்று இயற்கை சீற்றங்கள், பேரழிவுகள், எதிர்பாராத மரணம், விபத்து, ஆபத்து, இழப்பு போன்றவற்றை கேள்விப்படும் போது, அது நம்முடைய வாழ்வில் நிகழும் போது, நம்முடைய இருதயம் உடைந்து, நொறுங்கிப் போய் விடுகிறோம்.

அந்த வழியாய் கடந்து செல்கிறவர்களுக்குத்தான் அதின் வேதனைகளும் கஷ்டங்களும் தெரியும். மற்றவர்கள், “இவர்கள் ஏன் அதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?” என்று ஏளனமாய் பேசக் கூடும்.

ஆனால், அந்த சமயத்தில் மனிதரால் நமக்குக் கொடுக்கக் கூடாத இளைப்பாறுதலையும், சமாதானத்தையும் சகலவிதமான ஆறுதல்களின் தேவனாக இருக்கிற ஆண்டவரால் மட்டுமே நமக்கு கொடுக்க முடியும்

பலவிதமான வேதனைகளின் மத்தியிலும், மரண இருளிலும் நடந்து கொண்டிருக்கிறீர்களா? பயப்படாதீர்கள் ஏனென்றால் நம் அன்பின் சொல்லுகிறார்.
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
ஏசாயா 41:13 என்று நமக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

எனக்கு பிரியமானவர்களே!நீங்கள் ஆண்டவரையே நோக்கிப் பாருங்கள். அவரே உங்களுக்கு ஆறுதலும், அரவணைப்பும் தந்து உங்களை ஆற்றி தேற்றுவார்.

ஆம், நம் ஆண்டவர், “விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்
பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்” எரேமியா 31:25 என்று கூறியிருக்கிறார். இந்த வேத வார்த்தையின் படியே, உங்கள் பிரச்சினைகள் எதுவாயிருந்தாலும் தேவன் அவைகளை மாற்றி, உங்களை ஆறுதல்படுத்துவார்.

ஆகவே கவலைப்படாதிருங்கள்! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு புதிய நம்பிக்கையையும் , பெலனையையும் தந்து, இவ்வுலகில் நீங்கள் நிம்மதியாய் வாழ கிருபை செய்வாராக

ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God