Daily Manna 145

கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப் பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 2 தெசலோனி: 3 :5

எனக்கு அன்பானவர்களே!

நீடிய பொறுமையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

நாம் அவசரமான ஒரு உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே நாம் நினைக்கிற நேரத்தில் உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று வர கொஞ்சம் காலம் தாமதித்தால் உடனே கோபம், முறுமுறுப்புகள், எரிச்சல்கள் முக கோணல்கள்! இப்படி எத்தனை, எத்தனை…

சமீபத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியரை பார்க்க வேண்டி இருந்தது. ஒரு மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை.

அங்கிருந்த நர்ஸிடம், ‘என்ன உங்க டாக்டர் ஒரு பேஷண்டை இத்தனை நேரம் பார்க்கிறார்? எத்தனை நேரம் காத்திருப்பது? பேப்பரை கிழித்துப் போட்டு விட்டு நாங்கள் போகப் போகிறோம்’ என்று கோபமாக கத்தினார் ஒருவர்.

உடனே அந்த நர்ஸ் ‘இப்ப டாக்டர் உங்களை பார்ப்பார்’ என்று சொல்லி, அவரை அழைத்துக் கொண்டுப் போனார்கள். அந்த நபர் டாக்டரை பார்த்தவுடன், அவர் பேசிய அன்பான வார்த்தைகள், கனிவான கவனிப்புகளை கண்ட போது , ஏன் அப்படி கத்தினோம்? என்று அந்த நபருக்கு தோன்றியது.

அத்தனை சாந்தமாக, மெதுவாக, பொறுமையாக அந்த டாக்டர் பேசிய வார்த்தைகளினால் பின் நாட்களில் இருவரும் நல்ல நண்பராக மாறினர்.

நம்மால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. டிராபிக் ஜாமில் வண்டியை ஓட்டும் போது, சிக்னலில் காத்திருக்கும் போது , வீட்டில் சாப்பாடு கொஞ்சம் லேட்டானால் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. எத்தனை எத்தனை முறுமுறுப்புகள்.

பொறுமை என்பதை இக்காலத்து மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறான் என்பதே எதார்த்தமான உண்மை. நம்முடைய தேவனின் தெய்வீக குணாதிசயங்களில் ஒன்று நீடிய பொறுமை. நாம் பாவிகளாயிருக்கையில் நம்மேல் அவர் நீடிய பொறுமையுள்ளவராக இருந்தாரே!

உலகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நோக்கினால், எத்தனை அக்கிரமங்கள், என்ன பயங்கரமான செயல்கள்! நம்மால் அதைப் பார்த்து, பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.
எத்தனையோ முறை
சொல்கிறோம், ஏன் ஆண்டவர் இவர்களை எல்லாம் விட்டு வைத்திருக்கிறார் என்று! புலம்புகிறோம் அல்லவா?.

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
2 பேதுரு 3:9
என்று வேதம் கூறுகிறது.

தேவன் அத்தனை பொறுமையுள்ளவராயிருக்கிறார் என்றால், அவரின் பிள்ளைகளாகிய நாம் எத்தனை பொறுமையுள்ளவர்களாய் இவ்வுலகில் வாழ்ந்து காட்ட வேண்டும்!

வேதத்தில் பார்ப்போம்,

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
லூக்கா 8:15.

என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும் படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப் போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.
வெளி 3 :10.

அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற்றான்.
எபிரேயர் 6 :15.

பிரியமானவர்களே,

வேதத்தில் பொறுமையாயிருந்த ஆதி விசுவாசிகள் பலரைக் காண முடியும்! மோசே, ஆபிரகாம், யோசேப்பு, யோபு என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே போக முடியும்.

அவர்கள் பொறுமையாய் இருந்ததைப் போல புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய தேவைகளில், தேவன் ஏன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கவில்லை என்று பொறுமையை இழந்துப் போகாமல், அவருடைய நேரத்திற்காக நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

அப்போது தான் ‘கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்’
சங்கீதம் 40:1 என்று நாமும் சொல்ல முடியும்.

எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க ஆவியானவரின் பெலன் தேவை. அவர் கொடுக்கிற நீடிய பொறுமையாகிய கனியின் தன்மை நம் வாழ்வில் இருக்கும் போது ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்கிற பழமொழியின் படி வெற்றி மேல் வெற்றி நம்மை வந்தடையும் என்பதில் எந்த சந்தேகமேயில்லை.

‘நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே’ யாக்கோபு 5:8.

பொறுமை என்பது துன்பம், துயரங்களை கடக்கும் சமயத்தில் கடைப்பிடிப்பதாகும். கஷ்டங்கள் வரும் போது பொறுமையை இழந்து, அழுது புலம்பி, ஆடி அடங்கி, ஓடி ஒடுங்கி, தெம்பு குறைந்த பிறகு, மூச்சுவிட சக்தி இல்லாத போது, இப்போது நான் பொறுமை காக்கிறேன் என்று கூறுவது போலியான பொறுமையாகும்.

ஆகவே நாம் எந்த சூழ்நிலையிலும் தேவனுக்கு பிரியமான நீடிய பொறுமையை தரித்து அவரின் சித்தத்தை செய்து வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God