Daily Manna 227

பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா மத்தேயு 7:11

எனக்கு அன்பானவர்களே!

நன்மையானவைகளை நம் வாழ்வில் தருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் காலை 11:30 மணி அளவில் டெக்சாசிலுள்ள Robb Elementary என்னும் முன்னாள்
மாணவனான Salvador Ramos (18) என்பவன், ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.

தகவலறிந்து பள்ளிக்கு வந்த போலீசார் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடந்து கொண்டிருக்க, போலீசாரோ பள்ளிக்குள் செல்லாமல் வெளியையே நின்று கொண்டிருந்தார்கள்.அவர்களை உள்ளே செல்லும்படி பெற்றோர் கூச்சலிட்டனர்.

அல்லது எங்களையாவது உள்ளே விடுங்கள் என்று கெஞ்சினார்கள்.
ஆனால் போலீசாரோ பெற்றோர்களை கீழே தள்ளி, அவர்கள் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து, டேஸர் கருவியை வைத்து அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.

பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் செய்தியை 40 மைல் தொலைவிலிருந்த Angeli என்ற பெண் கேட்ட போது ஐயோ
தன் பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ என பதறியடித்து ஓடோடி வந்திருந்தாள் Angeli Rose Gomez என்ற பெண்.

அவருடைய இரண்டு பிள்ளைகளும் அந்தப் பள்ளியில் தான் படித்து வந்திருக்கிறார்கள்.
Angeli பள்ளிக்கு வந்தபோது அங்கு நின்ற போலீசார், தாங்களும் பள்ளிக்குள் செல்லாமல், பள்ளிக்குள் செல்ல முயன்ற பெற்றோரையும் விடாமல் நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஏன் இப்படி சும்மா நிற்கிறீர்கள்? பள்ளிக்குள் செல்லுங்கள் என அவர் சத்தமிட, போலீசார் ஒருவர் Angeli விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி அவளைக் கைது செய்துள்ளார்.

தனக்கு தெரிந்த போலீசார் ஒருவர் அங்கிருப்பதைக் கண்ட Angeli, அவரிடம் பேசி தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார்.

மக்கள் தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றக் கோரி தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டிருக்க, மெதுவாக கூட்டத்திலிருந்து வெளியேறிய Angeli, யாரும் கவனிக்காத நேரத்தில், வேலியைத் தாண்டி பள்ளிக்குள் குதித்திருக்கிறார்.

நல்ல வேளையாக, துப்பாக்கிச் சூடு நடத்துபவன் கண்ணில் படாமல் உள்ளே சென்று, தன் பிள்ளைகளை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தாள் Angeli.

அந்தப் பெண் நிரூபருக்கு பேட்டி அளிக்கும் போது கூறிய வார்த்தைகள். என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தப்படும் செய்தியை கேட்டதும் என் குடல்கள் துடிதுடித்து பதறிப் போனது.

என் அன்பான பிள்ளைகளை நான் நினைத்துப் பார்த்த போது என் முன்னே இருந்த உலகமே இருண்டு போனது போல் இருந்தது. செய்வது அறியாது துடித்துப் போனேன்.

நான் என் ஆண்டவரின் மீது முழு நம்பிக்கை வைத்து, நான் 40 மைல் தூரத்தை சற்று நேரத்தில் கடந்து சென்று என் பிள்ளைகளை நான் உயிரோடு மீட்டுக் கொள்ளும்படி என் ஆண்டவர் எனக்கு உதவி செய்தார் என்று கண்ணீர் மல்க கூறினாள்.

வேதத்தில் பார்ப்போம்,

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
மத்தேயு: 7 :11.

ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
ஏசாயா: 66 :13

அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
சங்கீதம் :147 :13.

பிரியமானவர்களே,

காலேப் தன் மகள் அக்சாளுக்கு நிலங்களைக் கொடுத்திருந்தான். ஆனால் அவைகள் வறட்சியானவைகள். எனவே தகப்பனிடம் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைத் தாரும் எனக் கேட்டாள்.

அவள் தகப்பனோ, கீழ்ப்புறத்தில் மட்டுமல்லாமல் மேற்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தார் என்று நியாயாதிபதி:1:15-ல் பார்க்கிறோம். ஒரு உலகப் பிரகாரமான தகப்பன் தன் மகளுக்கு இத்தனை ஆசீர்வாதங்களை கொடுத்தார்.

ஆனால் நம் அன்பான இயேசு கிறிஸ்து கூறுகின்றார்
“பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும் போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா (லூக்கா 11:13)என்றார்.”

ஆம் பிரியமானவர்களே,
நம்மை உருவாக்கி, ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வருகிற அன்பின் ஆண்டவர் நம்மை எத்தனை அதிகமாக ஆசீர்வதிப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நம் ஆண்டவர் நமக்கு உன்னதத்தின் ஆசீர்வாதங்களினாலும் பூமிக்குரிய சகல ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரம்பி வழியப் பண்ணுவார்.

இந்நாளில் ஆண்டவர் உங்களை உலக ஆசீர்வாதம், செழிப்பு, ஆரோக்கியம், சமாதானம்… போன்ற ஆசீர்வாதங்களினால் நிரப்புவதுமின்றி,
ஜெப ஆவி, வல்லமை வரங்கள், ஆவியின் கனிகள் போன்ற ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கூட தந்து உங்களை நித்திய ராஜ்யத்திற்கென்று தகுதிப்படுத்துவார்.

“அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.”
ஆதியாகமம்:49:25.

ஆம்,நம் அன்பின் ஆண்டவர் நம் வாழ்வை நன்மைகளால் நிரப்புபவர்.புதிய ஆசீர்வாதங்களால் நிரப்பி நம்மை ஒவ்வொரு நாளும் அழகு பார்ப்பவர்.
இத்தகைய நல்ல தகப்பனை பெற்றுக் கொண்டது நம் யாவருக்கும் கிடைத்த கிருபையே.

இந்த கிருபையை பரிசுத்த ஓய்வு நாளில் பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God