Daily Manna 230

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். லூக்கா: 8:8

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இயேசு வாழ்ந்த காலத்தில் நிறைய விஷயங்களை உவமைகளாகப் போதித்தார். இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும்.

நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.

முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்து விட்டது”. (மாற்கு 4:26-29)

விதை, என்பது இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் தான் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது.

விதை இருப்பது அவசியம்.விதைக்க வேண்டுமெனில் முதலாவது தேவை, கைவசம் விதைகள் இருப்பது தான். இன்று இறை வார்த்தை பைபிள் வழியாக நமக்கு எளிதாகக் கிடைக்கிறது.

இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே இறை வார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.

விதைத்தல் அவசியம் விதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது.

அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.

விதைகளைப் போல நிலங்களும் அவசியம். விதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை.

எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை.

விதைகள், நிலங்கள் போன்று காலமும் அவசியம். விதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மிகவும் தவறு.விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும்.

அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

கட்டாயப்படுத்த முடியாது சீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும்.

வேதத்தில் பார்ப்போம்,

விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
லூக்கா: 8:5

சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
லூக்கா: 8:6

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
லூக்கா :8:7

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
லூக்கா :8:8

பிரியமானவர்களே,

ஆண்டவர் தமது வசனத்தை விதைக்கும் போது, முதலாவது எதிர்பார்ப்புகளோடு விதைக்கிறார்,

ஆண்டவர் தம்முடைய ஜனத்தின் மூலமாகவும் அருட்பணியாளர்கள் மூலமாகவும் அறிவிக்கிறார்.

இன்றைக்கு அநேகர் கர்த்தருடைய வசனத்தை அறிவிப்பதில்லை. தங்களையும் தங்கள் பிரஸ்தாபத்தையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எந்த பலனும் ஏற்படுவதில்லை.

கர்த்தருடைய வசனம் விதைக்கப்பட்டாலும் பல காரணங்களினால் அது பலன் தராமல் தடுக்கப்படுவதை இவ்வுவமையிலே காண்கிறோம்.

எனவே நாம் வளர்ந்து பலன் கொடுக்க வேண்டுமானால் புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல கர்த்தருடைய வசனத்தின் மேல் நாம் வாஞ்சையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

கர்த்தருடைய வார்த்தை அறுவடையைக் கொடுக்கிற வார்த்தையாக இருக்கிறது. ஆண்டவருடைய நற்செய்தியையும் இராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தையும் அறிவிக்க அறிவிக்க அது நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் கொடுக்கிறது.

ஆண்டவர் தமது இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க 12 சீஷர்களைத் தெரிந்து கொண்டார். ஒருவன் மடிந்து போனாலும் பின்பு ஒரு சீஷனைத் தெரிந்தெடுத்து சேர்த்துக் கொண்டனர்.

இவர்களினால் தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்பட்டது. ஐந்தாயிரம் பேர்களும் பின்பு நாலாயிரம் பேர்களும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டனர்.

ஒரு சின்ன பகுதியிலே ஆரம்பிக்கப்பட்ட தேவ இராஜ்ஜியத்தின் மீட்பின் திட்டம் இன்று உலகத்தின் அனைத்து நாடுகளிலும் பெரிய அறுவடையின் பலனைக் கொடுத்து கொண்டு இருக்கிறது.

கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்படும் போது,அது மிகுந்த ஒரு அறுவடையைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது.

அருமையான தேவபிள்ளையே,
நாம் விளைச்சலுள்ள மனிதனாக இருக்கிறோமா?
நாம் கனி கொடுக்கிறோமா? நாம் பலன் கொடுக்கிறோமா?

மூன்று விதமான நிலத்தில் பலன் கிடைக்காமல் போனது.

கடைசியாய் இயேசு குறிப்பிட்ட அந்த நல்ல நிலத்தில் மட்டுமே பலன் காணப்பட்டது.

இன்றைக்கு விளைச்சல் உள்ள ஒரு நிலமாக நாம் மாற வேண்டுமானால்,
சாத்தானுக்கும் வீண் உலகக் கவலைக்கும் ஐசுவரிய மயக்கத்திற்கும் இடம் கொடாத படிக்கு உங்களை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்து விடுங்கள். அப்பொழுது நூறாக அறுபதாக முப்பதாக பலன் கொடுப்பீர்கள்.

கர்த்தர் தாமே இத்தகைய மேன்மையான ஆசீர்வாதங்களை இந்த ஓய்வு நாளில் நமக்கு தந்து வழிநடத்துவாராக.
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God