Daily Manna 134

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். மாற்கு :9:23.

எனக்கு அன்பானவர்களே!

விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஸ்மித் விகிள்ஸ்வொர்த் என்னும் தேவ ஊழியர், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டவர். அவர் ஒரு நாள் , இரண்டு கால்களையும் இழந்த, ஒரு செல்வந்தரின் வீட்டிற்கு மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

விருந்து மேஜையில் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது ஊழியர் கூறினார், ‘சகோதரனே தேவன் உங்களுக்கு மறுபடியும் கால்களைக் கொடுக்க விரும்புகிறார்’ என்று கூறினார்.

அதைக் கேட்ட செல்வந்தர் நம்பிக்கையற்றவராக எனக்கா ‘எனக்குத் தான் இரண்டு கால்களும் இல்லையே, அதை தான் நான் எப்போதே இழந்து விட்டேனே இனிக் கால்கள் எப்படி வளரப் போகிறது’ என்றார் மிகுந்த வருத்தத்துடன்.

ஊழியர், ‘தேவன் யாவற்றையும் செய்ய வல்லவர்’ என்றார். இந்த வார்த்தை அவரது மனதில் விசுவாசத்தை துளிர்க்கச் செய்தது. ஆவியானவர் செல்வந்தரிடம் ‘இன்றே கடைக்குப் போய் உன் கால்களுக்கு காலணிகளை வாங்கிக் கொள்’ என்றார்.

செல்வந்தர் கடைக்குப் போய் ஒரு ஜோடி காலணிகளைக் கேட்டார். கடைக்காரர் மேலும், கீழும் பார்த்தார். ‘உங்களுக்குத் தான் கால்கள் இல்லையே எந்த அளவில் காலணி கொடுக்க வேண்டும்’ என்றார்.

அவர் ஏழாம் நம்பர் காலணியை கேட்டு வாங்கி, வீட்டிற்கு வந்து தனது முடமான கால்களில் போட்டுப் பார்க்க எத்தனித்தார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அந்த அறையை நிரப்பிற்று. ஒரு நொடியில் மளமளவென்று கால்கள் வளர்ந்தன.

அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் வாங்கி வந்து ஏழாம் நம்பர் அளவிற்கு தக்கதாக அவர் கால்கள் வளர்ந்தன. மகிழ்ச்சி தாங்க முடியாமல் துள்ளிக் குதித்தார். கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.

‘விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது’
எபிரேயர் 11:1-ல்
என்று வேதம் கூறுகிறது.

ஆபிரகாமின் விசுவாசமும் அப்படியே இருந்தது. சாத்தியமில்லாத சூழ்நிலையிலும் விசுவாசிக்க இயலாத நேரத்திலும் தனக்கொரு பிள்ளை பிறப்பான் என்று விசுவாசித்தார்.

எனக்கு அன்பானவர்களே!
சூழ்நிலைகள் எதுவாயினும் யோபு கர்த்தர் மேல் வைத்த விசுவாசத்தை அவன் இழக்கவேயில்லை, யோபு கர்த்தர் மேல் வைத்த விசுவாசம் தான் அவனுக்கு இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை கொண்டுவந்தது.

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்”
எபிரெயர் 11:6.

ஒரு சிறிய குழந்தை தன் தாயின் மீது வைத்திருக்கும் களங்கமில்லாத அன்பு, பாசம்,தேடலைப் போன்று, நாமும் நம் அன்பான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மேல் அன்பும்,விசுவாசம் வைத்து அவரையே நாம் பார்த்திருப்போமானால் தாயிலும் மேலான அன்புள்ள ஆண்டவர் நம்மைப் பாதுகாத்து, நம் விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றி நம்மை மகிழ்ச்சியாய் வாழ வைக்க வல்லமையுள்ள ஆண்டவர் தான் நம் இயேசு கிறிஸ்து.

வேதத்தில் பார்ப்போம்,

விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்து போவது போலக், கடந்து போனார்கள்; .
எபிரேயர் 11:29.

நாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.
1 யோவான் 3 :23.

தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
1 யோவான்: 5:4

பிரியமானவர்களே,

இன்றும் உங்களை அழுத்துகிற பிரச்சனைகள், வேதனைகள் மத்தியில் தேவனை விசுவாசிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, .
நானிருக்கும் இந்த வியாதியில், இந்த பிரச்சனையில் இருந்து யார்? என்னை விடுவிக்க கூடும் என்று கலங்குகிறீர்களா?

நாம் ஆண்டவர் மேல் எவ்வளவாய் விசுவாசம் வைக்கிறோமோ, அவ்வளவாய் அற்புதத்தை பெற்றுக் கொள்ள முடியும். கர்த்தருடைய வேதம் இப்படி சொல்லுகிறது. “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது என்று.

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப் போகிற இடத்திற்குப் போகும் படி அழைக்கப்பட்ட போது, அதற்கு கீழ்ப்படிந்து தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்.

ஆண்டவர் தாம் வாக்குப் பண்ணின படியே, வானத்து நட்சத்திரங்களைப்போல அவன் சந்ததியை பெருகப் பண்ணினார்.

சாராளும் வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் ஆண்டவர் அவளுக்கு வாக்குப் பண்ணினபடியே, பிள்ளை பெற்றாள். எபிரெயர் 11:1,2,8,11 . என்று பார்க்கிறோம்.

இந்த விதமாக நம் அனுதின வாழ்விலே நாமும் கர்த்தர் மேல் விசுவாசம் வைக்கும் பொழுது, ஆண்டவர் அதை ஆசீர்வதித்து நம்முடைய விசுவாசத்தின்படியே நாம் கேட்கிறதை நமக்கு தந்தருளுவார்.

அற்புதங்களை செய்யும் நம் தேவனை விசுவாசியுங்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும், நீங்கள் கலங்கி கொண்டிருக்கிற காரியத்தில் அற்புதங்கள் செய்து உங்களை விடுவிப்பது தேவனுக்கு இலேசான காரியம்.

நம் வியாதியின் மத்தியிலும், பிரச்சனைகளின் மத்தியிலும் நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நம் தேவன் ஒரு போதும் விரும்புவதில்லை.

அவற்றை மாற்றவும் வல்லவர் அவர் ஒருவரே என்ற விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்போது, இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதம் செய்து, தேவன் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குவார்.

கர்த்தர் அற்புதம் செய்யும் போது, மற்றவர்கள் வியப்புக்குள்ளாகி, இந்தக் காரியம் எப்படி நடந்தது என்று ஆச்சரியப்படும் வண்ணம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.

இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.
ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God