Daily Manna 177

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை. சங்கீதம் :9:28.

எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை.
சங்கீதம் :9:28.
=========================
எனக்கு அன்பானவர்களே!

உயர்வுகளை தருகிற உன்னத தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ரவி புத்திசாலி மாணவன்.நன்றாகப் படிப்பான். ரவியின் நண்பன் சுமாராக படிப்பான். ஆனால் கடும் உழைப்பாளி.. ரவிக்கு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஆக வேண்டும் என்பது அவனது ஆசை லட்சியம்..எனவே படிப்பு படிப்பு.. என கவனம் சிதறாது படித்தான். மாநிலத்தில் முதலிடம்.

ஆனால் அவன் நண்பனோ ப்ளஸ்டூ பெயில்..! ரவி சொன்னான் “நண்பா கல்வி தான் உயர்ந்தது.. நீ இப்படி படிக்காமல் போனதற்கு பின்னாளில் நிச்சயம் வருந்துவாய்., படிப்பு இன்றி நீ வாழ்க்கையில் ஒரு போதும் உயரவே முடியாது..நான் மருத்துவக்கல்லூரி சீட் கிடைத்ததும் டவுனுக்கு போய் விடுவேன்.. வரட்டுமா என்றான்..

15 ஆண்டுகள்..ரவி MBBS முடித்து MS முடித்து லண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல மருத்துவ பட்டங்கள் பெற்று மிகச் சிறந்த மருத்துவனாக பேர் பெற்றான்.ஆனால் அவனது மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கனவு தான் நிறைவேறவில்லை..!

இந்நிலையில் ரவிக்கு சொந்த ஊரில் புதிதாக துவங்க உள்ள மருத்துவ கல்லூரியின் முதல்வராக முடியுமா எனக் கேட்டு ஒரு அழைப்பு வந்தது.. அழைத்தவர்கள் இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனத்தினர்.. அவர்களது குழுமத்தின் கல்லுரியே இது..!

எதையும் தரமாக செய்யும் நிறுவனம் அது.. ஆகவே அந்த பணியில் சேர சென்றான்.. அந்த கம்பெனியின் ஜெனரல் மேனேஜர் ரவியை வரவேற்று சேர்மனிடம் அழைத்து சென்றார்.. சேர்மனை பார்த்த ரவி வியப்பும் திகைப்பும் அடைந்தான்..

அது ப்ளஸ்டூ பெயிலான தம் நண்பன்!
“நீ,,, நண்பன்…நீங்க நண்பன் தானே” சாரி.. அடடே என்ன ரவி.. நான் எப்பவுமே உன் நண்பன் தான்” ” நீ எப்படி….?? என்ற கேள்விக்கு சேர்மன், “ப்ளஸ்டூ பெயிலானதும் அப்பாவோட ஹார்பர் வேலைக்கு போனேன்.. 6 மாசத்துல நெளிவு சுளிவு கத்துகிட்டேன்..!

அப்போ சில காண்டிராக்ட் எனக்கு கிடைச்சது ஆனா கையில பணம் இல்ல.. அப்பாவும் ஹார்பர்ல ஒரு விபத்தாகி இறந்துட்டார்… அதுல நஷ்ட ஈடா பணம் வந்தது.அத வச்சி காண்டிராக்ட் எடுத்தேன்.. அப்பா உயிர கொடுத்து கிடைச்ச காசில்லியா வெறியோட கடவுள் கிருபையோடு உழைச்சேன்..!

4 வருஷத்துல ஒரு கப்பல் வாங்கினேன்..
அதுக்கு பிறகு முன்னேற்றம் தான் இன்னிக்கு 103 நாடுகளில் எங்க நிறுவனம் இருக்கு.. ஏராளமான தொழில்கள் செய்யறேன்… நான் அதிகம் படிக்கலை ஆத்ம திருப்திக்காக கல்விப் பணியில இறங்கி இருக்கேன்..

மெடிக்கல் காலேஜ்ன்ன உடனே நீ தான் ஞாபகத்துக்கு வந்தே.. ஸ்கூல் படிக்கும் போதே உன் திறமை எனக்கு தெரியும்… நான் தான் உன்னை இந்த பதவிக்கு பொருத்தமா இருப்பேன்னு சிபாரிசு செஞ்சேன்.. இங்க பொறுப்பு ஏத்துக்க உனக்கு சம்மதம் தானே ரவி என்று கேட்டான்..?

படிப்பு மட்டும் தான் வாழ்க்கையில உயர்ந்தது.. தோல்வி ரொம்பவும் தாழ்ந்ததுன்னு நினைச்சேன்… உழைப்பு அது எல்லாத்தையும் விட உயர்ந்ததுன்னு இப்ப தெரியுது.. எனக்கு கிடைச்ச வெற்றி ஒரே ஒரு டாக்டரை தான் உருவாக்கி இருக்கு…!

ஆனா உன் தோல்வி ஆயிரக்கணக்கான டாக்டர்களை உருவாக்கப் போகுது…! என்னை மாதிரி நூற்றுக்கணக்கான டாக்டர்களுக்கு வேலை தரப்போகுது…! என்ன மன்னிச்சுடு நண்பா” என்ற ரவியை நட்புடன் தழுவிக் கொண்டான.!

ஆம்,ஞானிகளை வெட்கப்படுத்தும் படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளை தெரிந்து கொண்டார் என்ற வசனமும் உண்மையாய் பலன் கொடுக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
சங்கீதம்:72 :12

அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறர்;
1 சாமுவேல்:2 :8.

எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார்.
சங்கீதம் :107 :14.

பிரியமானவர்களே,

ஒரு மனிதனை தேவன் ஆசீர்வதிக்க தீர்மானித்து விட்டாரானால் அதற்கு விரோதமாக எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும் அவைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து , தாம் மக்களுக்கு சொன்ன வார்த்தைகளை, வாக்குத்தத்தங்களை நிச்சயம் நிலைநிறுத்துவார்.

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்”
நீதிமொழிகள்: 10:22. பிரயாசங்கள் நம்முடையதாக இருக்க வேண்டும், காரியங்களை வாய்க்கப் பண்ணுகிறவர் கர்த்தர். எல்லாம் என்னாலே ஆயிற்று என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.

ஏனென்றால் “ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை நமக்குக் கொடுக்கிறவர்”
(உபாகமம்: 8:18.) தேவன் என்பதை மறந்து போகக் கூடாது. வேதம் கூறுகிறது “என் சாமர்த்தியமும் என் கைப் பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக.
(உபாகமம்: 8:17,18‌ ) என்று கூறுகின்றன.

இவ்விதமாக கர்த்தரையே சார்ந்து நிற்கும் பொழுது, சூழ்நிலைகள் நமக்கு சாதகமாக இல்லாமல் இருந்தாலும், எதிர்க்கிறவர்கள் சூழ்ந்து நின்றாலும், நம் உழைப்பினை பிசாசானவன் பல வழிகளில் சிதறடித்து போட செயல்பட்டாலும், நாம் பயப்பட வேண்டாம்.

ஏனென்றால் தேவன் நம்மோடு இருந்து நமக்கு வெற்றியை தருபவர். அது மட்டுமல்ல நம்மை ஏளனம் செய்து விட்டு போனவர்கள் நம்மை தேடி வரும்படி செய்வார்.

எந்த அளவுக்கு நீங்கள் சிறுமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டீர்களோ, அதற்கும் மேலாக உங்களை பலத்த ஜனங்களாக மாற்றுவார். உங்களை பகைத்தவர்கள் உங்கள் வளர்ச்சியை கேள்விப்பட்டு அவர்கள் கலங்கிப் போகும் நிலைக்கு கர்த்தராலே நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்.

துன்பத்தை அனுபவித்த வருடங்களுக்கு சரி நிகராய் தேவனால் தேற்றப்படுவோம். தேவனுடைய நேரடி பராமரிப்புக்குள்ளாக, அவருடைய ஆளுகைக்குள்ளாக வந்து அவருடைய சொந்த ஜனங்களாக்கப்படுவோம்.

இந்நாட்களிலும் கூட யார் இப்படிப்பட்ட சிறுமையோடும், துன்பத்தோடும் இருக்கிறார்களோ, அவர்களையும் தேவன் சிறந்திருக்கும் படியாகச் செய்வார்.

“எவரையும் மேன்மைப் படுத்தவும் பலப்படுத்தவும் தேவனுடைய கரத்தினாலே ஆகும்”
(1 நாளாகமம்: 29:12.) “அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்”
(1சாமுவேல்: 2:8.) சிறுமையும் எளிமையுமானவனை தூக்கி விடுகிறார். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் திக்கற்றவர்களுக்கும் அடைக்கலமாயிருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே என் வாழ்வில் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லையே” என்று ஏங்குகின்றவர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆசீர்வாதத்தின் மழையை தேவன் வருஷிக்கப் பண்ணப் போகிறார்.

அவரின் ஆசீர்வாதங்களை பெற்று இம்மையிலும் மறுமையிலும் சிறந்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கிருபை செய்வாராக.

  • Related Posts

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Daily Manna 243

    கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். சங்கீதம் :94 :22. எனக்கு அன்பானவர்களே! தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதிலளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    The Golden Gate’s Timeless Majesty

    The Golden Gate’s Timeless Majesty

    Rise of Competitive Video Gaming

    Rise of Competitive Video Gaming