Daily Manna 212

அப்பொழுது தேவன்: பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம்: 1:11

அப்பொழுது தேவன்: பூமியின் மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் கொடுக்கும் கனி விருட்சங்களையும் முளைப்பிக்கக் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. ஆதியாகமம்: 1:11


எனக்கு அன்பானவர்களே!

இவ்வுலகை பாதுகாத்து வழிநடத்தி வருகிற இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு வருடமும் ஜீலை 28- ம் நாள் உலக இயற்கை பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இயற்கை என்றாலே மலைகள், மரங்கள், காடுகள், நீர்நிலைகள் தான் நம் கண்முன் தோன்றும் .
ஒவ்வொரு மரமும் ஓர் வரம்.ஒரு மரத்தின் விலையை மதிப்பிட முடியாது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து கொள்ள, பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டியிருக்கிறது.

இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய்திருக்கிறது.
ஒரு ஆள் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக் கொள்கிறார். 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன.

அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி.
ஒரு மரம் தரும் ஆக்சிஜனின் மதிப்பே இவ்வளவு என்றால், அது நமக்குத் தரும் மற்ற சேவைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

மரத்தைப் போன்று இயற்கையும், அதிலுள்ள பல்வேறு உயிரினங்களும், தாவரங்களும் மனித குலத்துக்கு காலங்காலமாகச் செய்துவரும் சேவைகளை புரிந்து கொண்டு, அவற்றைக் காப்பாற்ற வேண்டும்.

இந்த நோக்கத்துடன், உலக இயற்கை பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது
நாம் உயிர் வாழ சுவாசிக்கும் காற்று முதல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் உருவாக்குவதற்கான மூலப்பொருள் வரை அனைத்தும் இயற்கையிடம் இருந்தே கிடைக்கின்றன.

கணக்கற்ற இந்த இன்றியமையாத சேவைகளை காசு வாங்கிக் கொள்ளாமல், ஒவ்வொரு விநாடியும் இயற்கை நமக்கு வழங்கி வருகிறது. 1970-க்கு பிறகு இயற்கை வளங்களை மனித குலம் பயன்படுத்தும் விகிதம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது,

33 சதவீத இயற்கை வளங்களை பூமி இழந்திருக்கிறது என்று உலக இயற்கை நிதியம் கூறுகிறது. பல உயிரினங்களின் அழிவு இதற்கு எடுத்துக்காட்டு.
இயற்கையை பாதுகாக்கவில்லை என்றால், எதிர் காலத்தில் ஒட்டுமொத்த அழிவு விரைவாக நிகழ அதிக வாய்ப்பு என்று உயிரியல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எனவே நாம் அனைவரும் இயற்கை வளங்களை ஞானமாய் பயன்படுத்த வேண்டிய
கட்டாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இறைவன் படைத்த இவ்வுலகை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு பரிசளிப்பது நமது கடமையாகும்.

வேதத்தில் பார்ப்போம்,

நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
நீதிமொழிகள்: 11 :30.

நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
வெளி: 22 :2

நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
வெளி: 7:3.

பிரியமானவர்களே,

நமக்கு என்ன தேவை என்பதை நம்முடைய தேவன் நன்கு அறிந்து இருக்கிறார். ஆகாயத்து பட்சிகளை மறவாது போஷிக்கிற தேவன் உங்களை போஷிக்காமல் இருப்பாரோ ? நிச்சயமாகவே அவர் உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்தித்து உங்கள் குறைவுகளை எல்லாம் நிறைவாக்குவார்.

கர்த்தராகிய நான் அதை காப்பாற்றி, அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி , ஒருவரும் அதனை சேதப்படுத்தாத படிக்கு இரவும், பகலும் அதை காத்துக் கொள்ளுவேன் என்று சொல்லுகிறார்.

ஒரு கோழி தன் குஞ்சுகளை சிறகுகளின் கீழே வைத்து பாதுகாப்பது போல நம்மை காக்கிறார்.

மனித குலத்தின் பாதுகாப்பு கவசமாக மரங்களையும் நமக்கு கொடுத்திருக்கிறார்.

மனிதர்களைப் போல நகரவோ, பேசவோ முடியாதவை என்றாலும் இவை இன்றி மனிதர்களால் வாழ முடியாது. மனிதர்கள் துணையின்றி மரங்கள் வாழ்ந்து விடும். ஆனால் மனிதர்கள் வாழ மரங்கள் மிகவும் அவசியமாயிருக்கிறது.

மரத்தைத் தேடி வரும் பறவைகள், தங்கள் மகிழ்ச்சியை ஒலி எழுப்பிச் சொல்கின்றன. நம் வீட்டின் முன் பகுதியிலோ, பின் பகுதியிலோ ஒரேயொரு மரத்தை மட்டும் நட்டு வைத்து வளருங்கள் நண்பர்களே! அந்த மரம் இளமைப் பருவத்தை அடைந்ததும் நம்மில் பல மாற்றங்கள் நிகழும். அது கண்டு நம் உள்ளம் மகிழும்.

மரத்தைத் தேடிவரும் சிட்டுக் குருவிகள் சிறகடித்துப் பறப்பதையும், அணில்கள் தன் நண்பர்களோடு ஓடிப்பிடித்து விளையாடுவதையும், பலவிதமான பறவைகள் மனம் மயக்கும் மொழியையும், இலை மறைவில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு தன் இசையால் நம்மைப் பரவசப்படுத்தும் குயிலின் குரலையும் கேட்டு நம்மால் பேரின்பம் எய்த முடியும்.

காற்றைச் சுத்தப்படுத்தி நம் கவலைகளை அப்புறப்படுத்துகிறது. கூண்டுக்குள்ளே பறவைகளை அடைத்து வைத்து அதன் குரல் கேட்டு குதுகலம் அடைவதில் அர்த்தமில்லை. மரம் வளர்த்தால் போதும்; பறவைகள் நம்மைத் தேடி தானாய் வரும்.

இத்தகைய இயற்கையை எவரும் ரசிக்க தவறுவதில்லை. இதற்கு வேதத்தில் உள்ள தாவீதும் விதிவிலக்கு அல்ல. தாவீதரசனும் இயற்கையை ரசிக்க தவறவில்லை.

சங்கீதம் 19-ல் 1 முதல் 6 முடிய உள்ள வசனங்களில் இயற்கையழகை ரசித்து பாடுகிறார் தாவீதரசன்.

“அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.
சங்கீதம் 19:4,5 என்று சூரியனை குறித்து கவிதையை பொழிகிறார்.
சூரியனை மட்டுமல்ல. வானம், ஆகாயவிரிவு, பகல், இரவு என்று இயற்கையை வர்ணித்து பாடுகிறார்.

ஆனால் இந்த உலக அழகை பார்த்து மட்டுமே பாடலை பாடாது அடுத்த வசனத்தில் “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
சங்கீதம் 19:7 என்று பாடுகிறார்.

கர்த்தர் படைத்த ஆச்சரியமான, அதிசயமான உலக படைப்புகளை விடவும் தேவன் கொடுத்த வசனம் அதை விட இனியது என்று சங்கீதம்:19:10- ல் “அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது என்று வேதத்தின் அதிசயங்களை கூறுகிறார்.

நாம் எப்படி இயற்கையை ரசிக்கிறோம்?. இயற்கையை மட்டும் ரசிக்கிறோமா? இல்லை இயற்கையை உருவாக்கிய இறைவனின் அன்பை ரசிக்கிறோமா?

ஒரு காகம் தன் வாழ்நாளில் பல்லாயிரம் மரங்களைத் தன் எச்சத்தின் மூலமாக உருவாக்குகிறதாம். மரங்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எத்தனை மரங்களை உருவாக்க வேண்டும்? என்பதை எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!

மனித குலத்தின் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்ற இயற்கையை மனிதர்கள் அழிப்பதனால் இன்று பூமியில் காலநிலை மாற்றமானது உருவாகியுள்ளது. இதன் காரணமாக பலவகையான ஆபத்தான அர்த்தங்கள் இடம் பெறுகின்றன

மரம் மனிதனின் மூன்றாவது கரம்.ஆளுக்கொரு மரம்!ஆனந்தமாய் இணையட்டும் நம் கரம்!மரம் வளர்க்க மழை பொழியும்!மழை பொழிய வறுமை ஒழியும்!

இயற்கையை நேசித்து பாதுகாப்போம். எமது வருங்கால சந்ததியினரும்
மனித இனங்களுக்கும் வாழும் சூழலை உருவாக்கி.
கொடுப்போம்!…

இறைவன் படைத்த இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாய் வாழ்ந்து இறைவனோடு அகமகிழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

  • Related Posts

    Death and life are in the power of the tongue

    மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். நீதிமொழிகள்:18:21 எனக்கு அன்பானவர்களே! இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் பேசும் நல்ல வார்த்தையே நம்மை வாழ்வில் மேலோங்க வைக்கும்…

    Daily Manna 243

    கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். சங்கீதம் :94 :22. எனக்கு அன்பானவர்களே! தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பதிலளிக்கிற இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். குடிப் பழக்கத்திற்கு அடிமையாயிருந்த…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Winning Spiritual Battles with Faith and Confidence

    Winning Spiritual Battles with Faith and Confidence

    God’s Presence Gives Rest

    God’s Presence Gives Rest

    Gods Blessings

    Gods Blessings

    Tamil Bible Verse – Videos

    Tamil Bible Verse – Videos

    The Golden Gate’s Timeless Majesty

    The Golden Gate’s Timeless Majesty

    Rise of Competitive Video Gaming

    Rise of Competitive Video Gaming