Daily Manna 230

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். லூக்கா: 8:8

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இயேசு வாழ்ந்த காலத்தில் நிறைய விஷயங்களை உவமைகளாகப் போதித்தார். இயேசுவின் உவமைகள் எப்போதுமே உழைப்பாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும்.

நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது.

முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்து விட்டது”. (மாற்கு 4:26-29)

விதை, என்பது இறைவனின் வார்த்தைகள். அந்த வார்த்தைகள் நடப்படும் நிலம் தான் மனித இதயம். விதைக்கப்படும் இறைவார்த்தை மனித மனங்களில் புதைபட்டு, முளைவிட்டுக் கதிராகவும், தானியமாகவும் மாறுகிறது.

விதை இருப்பது அவசியம்.விதைக்க வேண்டுமெனில் முதலாவது தேவை, கைவசம் விதைகள் இருப்பது தான். இன்று இறை வார்த்தை பைபிள் வழியாக நமக்கு எளிதாகக் கிடைக்கிறது.

இறைவார்த்தை எனும் விதைகள் எந்த அளவுக்கு நம்மிடம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நாம் நிலங்களில் நட முடியும். எனவே இறை வார்த்தைகளை தொடர்ந்து படிக்க வேண்டும்.

விதைத்தல் அவசியம் விதைகள் மண்ணில் புதையுண்டால் தான் பலன் தர முடியும். தனியே இருக்கும் விதைகள் முளைகளாவதில்லை. இறைவனின் வார்த்தையும் தனியே இருக்கும் வரை வார்த்தையாகவே இருக்கிறது.

அது மனித மனங்களில் பதியனிடப்பட்ட பின்பு தான் உயிர் பெறுகிறது.

விதைகளைப் போல நிலங்களும் அவசியம். விதைகள் இருந்தாலும், விதைப்பவன் இருந்தாலும் கூட நிலம் இல்லையேல் அந்த விதைப்பில் எந்த பயனும் இல்லை.

எனவே இறைவார்த்தை எனும் விதை நமது இதயங்களில் நுழைவதற்குத் தக்கபடி நமது இதயங்களை உழுது செம்மைப்படுத்தி வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கற்பாறை நிலமாகவோ, வழியோர நிலமாகவோ, முட்புதராகவோ இருக்குமிடத்தில் விதைப்பது பயனளிப்பதில்லை.

விதைகள், நிலங்கள் போன்று காலமும் அவசியம். விதைத்த உடனே பயனை எதிர்பார்ப்பது மிகவும் தவறு.விதைகள் பலனளிக்க காலம் தேவைப்படும்.

அவை வேரிறக்கவும், முளை விடவும், வளரவும் நேரம் தேவைப்படும். அவசரப்படுவதால் எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை. விதைப்பவனைப் போல, விதைக்கும் பணியைச் செய்து விட்டுக் காத்திருக்க வேண்டும்.

கட்டாயப்படுத்த முடியாது சீக்கிரம் முளைத்து வா என நிலத்தையோ, முளையையோ நாம் கட்டாயப்படுத்தி விட முடியாது. இறைவார்த்தை பயனளிக்க இறைவன் ஒரு திட்டத்தை வைத்திருப்பார். அந்த திட்டத்தின் படியே அனைத்தும் நடக்கும்.

வேதத்தில் பார்ப்போம்,

விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப்பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
லூக்கா: 8:5

சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.
லூக்கா: 8:6

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
லூக்கா :8:7

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்.
லூக்கா :8:8

பிரியமானவர்களே,

ஆண்டவர் தமது வசனத்தை விதைக்கும் போது, முதலாவது எதிர்பார்ப்புகளோடு விதைக்கிறார்,

ஆண்டவர் தம்முடைய ஜனத்தின் மூலமாகவும் அருட்பணியாளர்கள் மூலமாகவும் அறிவிக்கிறார்.

இன்றைக்கு அநேகர் கர்த்தருடைய வசனத்தை அறிவிப்பதில்லை. தங்களையும் தங்கள் பிரஸ்தாபத்தையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எந்த பலனும் ஏற்படுவதில்லை.

கர்த்தருடைய வசனம் விதைக்கப்பட்டாலும் பல காரணங்களினால் அது பலன் தராமல் தடுக்கப்படுவதை இவ்வுவமையிலே காண்கிறோம்.

எனவே நாம் வளர்ந்து பலன் கொடுக்க வேண்டுமானால் புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல கர்த்தருடைய வசனத்தின் மேல் நாம் வாஞ்சையுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

கர்த்தருடைய வார்த்தை அறுவடையைக் கொடுக்கிற வார்த்தையாக இருக்கிறது. ஆண்டவருடைய நற்செய்தியையும் இராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தையும் அறிவிக்க அறிவிக்க அது நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் கொடுக்கிறது.

ஆண்டவர் தமது இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க 12 சீஷர்களைத் தெரிந்து கொண்டார். ஒருவன் மடிந்து போனாலும் பின்பு ஒரு சீஷனைத் தெரிந்தெடுத்து சேர்த்துக் கொண்டனர்.

இவர்களினால் தேவனுடைய இராஜ்ஜியம் கட்டப்பட்டது. ஐந்தாயிரம் பேர்களும் பின்பு நாலாயிரம் பேர்களும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டனர்.

ஒரு சின்ன பகுதியிலே ஆரம்பிக்கப்பட்ட தேவ இராஜ்ஜியத்தின் மீட்பின் திட்டம் இன்று உலகத்தின் அனைத்து நாடுகளிலும் பெரிய அறுவடையின் பலனைக் கொடுத்து கொண்டு இருக்கிறது.

கர்த்தருடைய வார்த்தை அறிவிக்கப்படும் போது,அது மிகுந்த ஒரு அறுவடையைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது.

அருமையான தேவபிள்ளையே,
நாம் விளைச்சலுள்ள மனிதனாக இருக்கிறோமா?
நாம் கனி கொடுக்கிறோமா? நாம் பலன் கொடுக்கிறோமா?

மூன்று விதமான நிலத்தில் பலன் கிடைக்காமல் போனது.

கடைசியாய் இயேசு குறிப்பிட்ட அந்த நல்ல நிலத்தில் மட்டுமே பலன் காணப்பட்டது.

இன்றைக்கு விளைச்சல் உள்ள ஒரு நிலமாக நாம் மாற வேண்டுமானால்,
சாத்தானுக்கும் வீண் உலகக் கவலைக்கும் ஐசுவரிய மயக்கத்திற்கும் இடம் கொடாத படிக்கு உங்களை கர்த்தருக்கு ஒப்புக் கொடுத்து விடுங்கள். அப்பொழுது நூறாக அறுபதாக முப்பதாக பலன் கொடுப்பீர்கள்.

கர்த்தர் தாமே இத்தகைய மேன்மையான ஆசீர்வாதங்களை இந்த ஓய்வு நாளில் நமக்கு தந்து வழிநடத்துவாராக.
ஆமென்

Similar Posts

  • Daily Manna 109

    வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. நீதி 19 :14 எனக்கு அன்பானவர்களே! பூரண அழகுள்ளவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். இரு நண்பர்கள் தொலைக் காட்சியிலே திரைப்படம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் வந்த நடிகையைப் பார்த்து ஒருவன் சொன்னான், ‘இவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள், இவளை நான் திருமணம் செய்து கொண்டால் என் வாழ்க்கையே சொர்க்கம் போலாகிவிடும்’ என்றான். இன்று…

  • Daily Manna 271

    என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. சங்கீதம்: 51:3. எனக்கு அன்பானவர்களே! ‌பரிசுத்தமாக்குகிற பரமன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதைக்…

  • Only those who are obedient to the Lord can defeat Satan

    Only those who are obedient to the Lord can defeat Satan வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; 1 பேதுரு 2 :18. ========================== எனக்கு அன்பானவர்களே! யாவருக்கும் மேலானவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த செல்வந்தனாயிருந்தான். ஆனால் அவன் சரியான கஞ்சனாயிருந்தான். எனவே, அவனுக்கு முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள்…

  • If you believe, you will receive whatever you ask for in prayer.

    If you believe, you will receive whatever you ask for in prayer. நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார் மத்தேயு 21:22. ======================== எனக்கு அன்பானவர்களே! விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் ஜெபிக்கிற ஜெபத்திற்கு ஆண்டவர் பதில் கொடுக்கிறார் என்று நாம் கூறினாலும் சில ஜெபங்களுக்கு பதில் வராத போது உடனே நாம் சோர்ந்து போவதுண்டு….

  • Daily Manna 188

    அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; யோவேல்: 2 :32. எனக்கு அன்பானவர்களே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒருமுறை கேரளாவைச் சேர்ந்த ஒரு பக்தி நிறைந்த மனிதர் தம் மகனைப் பற்றி கண்ணீரோடு சாட்சி சொன்னார். தன் மகன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானான். நாங்கள் எவ்வளவோ சொல்லி பார்த்தோம் கீழ்ப்படியவில்லை. சபையார் எல்லாரும் அவனுக்காக ஜெபித்தோம். ஒரு நாள் இரவு டெல்லியிலிருந்து ஒரு ஊழியக்காரர் எங்கள்…

  • The desire for money is the root of all evil

    The desire for money is the root of all evil ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; பிரசங்கி: 6 :9. ××××××××××××××××××××××××× எனக்கு அன்பானவர்களே! மனநிறைவுள்ள வாழ்வை அருளிச் செய்கிற இறைமகனாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். ஒரு மன்னர் ஊர்வலம் போய்க் கொண்டிருந்தார். அப்போழுது ஒரு பிச்சைக்காரன் எதிர்ல் வந்து “பிச்சை கொடுங்கள்” என்று கேட்டார். “என்னுடைய அமைதியை கெடுக்காதே போ”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *