Daily Manna 233

கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். யாத்திராகமம்: 34 :6.

எனக்கு அன்பானவர்களே!

இரக்கத்தில் ஐஸ்வரியமுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு கிராமத்திலே, வாழ்ந்து வந்த வாலிபன் ஒருவன், தன் குடும்பத்தில் பலவிதமான துன்பமும் வியாதியும் கஷ்டத்தின் மத்தியில், பிழைப்பதற்கு வழி தெரியாமல், திகைத்து நின்றான்.

ஒரு கடையிலே பசியாற களவு செய்யும் போது கையும் மெய்யுமாக அகப்பட்டுக் கொண்டான். இதனிமித்தம் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் அவனை பிடித்து கட்டி வைத்து அடித்தார்கள்.

அந்தக் காட்சியை கண்ட, அவ்வழியாக வந்த ஒரு வயதான ஓய்வு பெற்ற
ஆசிரியரொருவர், அந்த வாலிபன் மேல் பரிதாபப்பட்டு, அவனை அடிப்பவர்களை நோக்கி:
பிள்ளைகளே, அவனை அடிக்காதேயுங்கள்.
என்னிமித்தம் அவனை விட்டுவிடுங்கள்.

அவனுக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தைக் கொடுங்கள். அவன் செய்த களவுக்குரிய கிரயத்தை கொடுப்பதற்கு என்னிடத்தில் இப்போது பணமில்லை,ஆனால் அந்த அளவிற்குதக்கதாக நான் உங்களுக்கு வேலை செய்கின்றேன் என்று தயவாக கேட்டுக் கொண்டார்.

அந்த கிராமத்திலுள்ள வர்கள்: ஐயா, நீங்கள் எல்லாம் எதற்கு இந்த திருந்தாத கள்வனுக்காக இப்படியெல்லெலாம் பேசுகின்றீர்கள் என்று கூறி அந்த ஆசிரியருக்கு இருந்த நன்மதிப்பினிமித்தம் அந்த வாலிபனை விட்டு விட்டார்கள்.

அந்த ஆசிரியர் கண்ணீர் நிறைந்த கண்களுடன் அந்த வாலிபனை நோக்கி: மகனே, ஏன் உன் வாலிப நாட்களை வீணாக்குகின்றாய். உழைப்பதற்கு எத்தனையோ வழிகள் உண்டே என்று கூறி விட்டு கடந்து சென்றார்.

அந்த ஊரை விட்டு சென்ற வாலிபனின் மனதிலே அந்த ஆசிரியரின் கண்ணீர் நிறைந்த கண்களின் காட்சி வந்து கொண்டே இருந்தது.

அந்த ஆசிரியர் ஏன் எனக்காக கண்ணீர் விட்டார் என்ற கேள்வி அவன் வாழ்க்கையிலே அவனது இருதயத்திலே பெரிதான மாற்றத்தை உண்டாக்கியது.

அவன் தான் உழைத்து முன்னேற வேண்டும் என்று கடும் பிரயாசப்பட்டு, நல்வாழ்வை தெரிந்து கொண்டான்.

பிரியமானவர்களே,
பணம் மற்றும் சரீர உதவிகள் மட்டுமல்ல,
உண்மையான அன்போடு கூடிய சில வார்த்தைகளும் சில மனிதர்களின் வாழ்க்கையை நன்மையானதாக மாற்றும்.

ஒரு வேளை அப்படி மாற்றாவிட்டாலும், உங்கள் இரக்கமுள்ள மனதைக் காணும் பரம பிதா உங்கள் வழியாக மகிமைப்படுவார்.

வேதத்தில் பார்ப்போம்,

பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
மத்தேயு: 12 :7.

செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மன உருக்கமும் நீதியுமுள்ளவன்.
சங்கீதம்: 112 :4.

பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்று கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்.
மத்தேயு :9 :13.

பிரியமானவர்களே,

நம் ஆண்டவரைக் குறித்து வேதத்தில், பல இடங்களில் அவர் இரக்கமுள்ளவர் என்பதை காண முடியும்.
சங்கீதம்
103:8.ல், கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். என்று சொல்லப்பட்டுள்ளது;

யாத்திராகமம் 22:27 ல், அவன் என்னை நோக்கி முறையிடும் போது, நான் அவனுக்குச் செவி கொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன் என்று சொல்லப்பட்டுள்ளது;

ஆனாலும்; ரோமர்:9:15,18, மற்றும், யாத்:33:19ல் தேவன் இப்படியாக சொல்கிறார்.
எவன் மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன் மேல் கிருபையாயிருப்பேன்; எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன் என்கிறார்;

ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலே எல்லாம் ஆகும் என்று இந்த வசனங்களிலிருந்து புரிகிறது.

என்னவெனில். ஆண்டவருக்காக அதிகமாய் உழைத்தாலும், அதிகமாய் காணிக்கைகள் கொடுத்தாலும், அதிகமாய் அன்னதான தருமம் பண்ணினாலும், அவருக்கு சித்தமானவர்களுக்குத் தான் அவருடய இரக்கம் கிடைக்கும்.

அதனால் தான் பவுல் சொல்கிறார். நீ ஓடினாலும் சரி, நீ விரும்பினாலும் சரி, கர்த்தர் இரங்கினால் தான் காரியங்கள் வாய்க்கும் என்கிறார்;

அதனால் தான் இயேசுவும் மத்தேயு:23:23- ல் மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப் பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் [இரக்கத்தையும்] விசுவாசத்தையும் விட்டு விட்டீர்கள்;

இவைகளையும் செய்ய வேண்டும். அவைகளையும் விடாதிருக்க வேண்டும் என்று, வேதபாரகர், பரிசேயரைப் பார்த்து தேவன் சொல்கிரார். முக்கியமான இரக்கத்தை நீங்கள் விட்டு விட்டீர்களே? என்று.

ஆம் அன்பானவர்களே.
தேவனுடய இரக்கத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. அது தேவனாய் பார்த்து கிருபையாய் தருவது.

ஆகவே நாம் இந்த உலகத்தில் எதை இழந்தாலும் தேவ இரக்கத்தை இழந்து விடக் கூடாது; யார் பரிந்துரைத்தாலும் சரி தேவனுடய இரக்கம் கிடைக்காது.

வேதம் கூறுகின்றது
மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.
மீகா :6:8.

எனவே நாம் மன தாழ்மையாய் நடந்து கொள்ளுவோம். உங்கள் நல்ல மனதை காணும் அயலவர்களும அந்நியர்களும் உங்களைப் போல தாங்களும் மாற வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக மாறி விடுவார்கள்.

நீங்கள் பரம பிதாவிற்கு பிள்ளைகள் என்பதை மறந்து போய் விடாதிருங்கள். அவர் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள வராக இருப்பது போல, நீங்களும் உங்கள் இரக்கத்தைக் காண்பியுங்கள்.

நாம் மற்றவர்கள் மீது இரக்கத்தை காண்பிக்கும் போது, நம் கர்த்தரும் தமது இரக்கத்தை நம் மேல் பிரசன்னமாக்குவார்.

கர்த்தர் தாமே இத்தகைய இரக்கத்தை நம் வாழ்வில் தந்து நம்மை காத்து வழிநடத்துவாராக.
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God