கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 2 தீமோத்தேயு 4:17
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
1968 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 3-ம் நாள் இரவில், மார்டின் லுத்தர் கிங் கடைசி உரையை ஆற்றிய போது, நாம் கடினமான நாட்களை சந்திக்க இருக்கிறோம்,” என்று மக்களிடம் கூறினார்.
“ஆனால் உண்மையில் அது எனக்கு பிரச்னை இல்லை, ஏனெனில் நான் மலையின் உச்சிக்கு வந்து விட்டேன்.நான் கடவுளின் விருப்பத்தின் படியே செயல்பட விரும்புகிறேன். அவர் தான் என்னை மலை உச்சி வரை இட்டுச் சென்றவர்.
நான் அங்கிருந்து எனக்கு வாக்களிக்கப்பட்ட நாடு எத்தகையது என்பதை கண்டிருக்கிறேன்.
என்னால் உங்களோடு கூட வர முடியாமல் போகலாம்.ஆனால்
இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை;
நான் எந்த மனிதனைக் கண்டும் பயப்படவில்லை. என் கண்கள் கடவுளின் வருகையின் பெருமையைக் கண்டிருக்கின்றன”
என்று பெருமையுடன் கூறுகின்றார்.
ஆண்டவர் மீது அன்பும்,பக்தி வைராக்கியமும் கொண்ட மார்ட்டின் லூதர் கிங், தம் ஜனங்களின் மீட்புக்காக அரும் பாடுபட்ட அவரை சுட்டு வீழ்த்த வெறி கொண்ட மனிதர்கள் திட்டமிட்டனர்.
மறு நாளில் அவர்
டென்னசியில் ஏப்ரல் 4-ஆம் நாள் மாலை சொற்பொழிவு ஆற்ற, கிங் ஒரு ஹோட்டல் அறையின் பால்கனியில் நின்றிருந்தார்,
அப்போது எதிரிகளால் அவரது வலது கன்னத்தில் சுடப்பட்டார். தொட்டா அவரது தாடையை துளைத்து, முதுகுத்தண்டின் ஊடே சென்றது. அந்த இடத்திலே சுருண்டு விழுந்து அவர் உயிரை விட்டார்.
அப்போது அவருக்கு வயது 39. மார்ட்டின் லூதர் கிங்கை பகைமையால் அவரை கொன்றார்கள்.
வேதத்தில் பார்ப்போம்,
ஏனென்றால், நான் இப்பொழுதே பான பலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.
2 தீமோத்தேயு: 4:5
நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.
2 தீமோத்தேயு: 4:6
இது முதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.
2 தீமோத்தேயு: 4:7
பிரியமானவர்களே
இப் பூமியில் மார்ட்டின் லூதர் கிங் தன்னுடைய வாழ்நாள் நிறைவடைய போகிறது என்பதை நன்கு அறிந்திருந்ததைப் போல, பவுலும் அறிந்திருந்தார்.
நான் இப்பொழுதே பான பலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.
2 தீமோத்தேயு :4:5 என்றார்.
இருவருமே வாழ்வில் நம்பமுடியாத அளவு முக்கியத்துவத்தை உணர்ந்த போதும் தங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நித்திய வாழ்வைக் குறித்த தரிசனத்தைப் பெற்றிருந்தனர்.
அப்போஸ்தலனாகிய பவுலும் தன்னுடைய மரணத்திற்கு முன்பாக தன்னுடைய சீஷனான தீமோத்தேயுவிற்கு எழுதும் போது, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப் போகிறேன்.
நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்” (2 தீமோ. 4:6,8) என்கின்றார்.
இருவருமே அடுத்தபடியாக தங்களுக்கு நடக்க இருந்ததை வரவேற்றனர்.
நெடுவாழ்வு அதற்கான இடத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை,என்று அவர் சொல்லியிருந்தார்.
24 மணி நேரங்களுக்கும் குறைவான நேரத்தில் அப்படி அவர் பேசியிருந்தார்.
நான் வாக்களிக்கப்பட்ட நாட்டைக் கண்டிருக்கிறேன். என்னால் உங்களோடு அங்கு வர முடியாமல் போகலாம். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை, ஏனெனில் நான் சிகரத்திற்குச் சென்று விட்டேன் என்று அவர் பேசியிருந்தார்.
மார்ட்டின் தனக்கு வரப்போவதை முன்பே அறிந்திருந்தாரா?
இவர்களைப் போன்று நாமும் நம்முடைய கண்களை, “காணப்படுகிறவைகளையல்ல,
காணப்படாதவைகளை நோக்கி” திருப்புவோமாக, “ஏனெனில், காணப் படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” (2 கொரி. 4:18).
ஒவ்வொரு மனிதனும் எந்த வயது வரைக்கும் வாழுகிறான் என்பதல்ல, வாழும் காலத்தில் என்ன செய்தான் என்பதுவே காரியம்.
உலக வாழ்வு அணையப் போகும் இறுதி நேரத்திலும், எல்லாராலும் கைவிடப்பட்டுத் தனித்து நின்ற வேளையிலும், பவுலடியார் சொன்ன காரியம் நம்மைச் சிந்திக்க வைக்கட்டும்.
“கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும் என்னைப் பலப்படுத்தினார்.
கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார். அவருக்குச் சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்” (2தீமோத்.4:17,18) என்பதே.
அன்பானவர்களே, மகிழ்ச்சியும் இணைந்தது தான்
கிறிஸ்தவ வாழ்வு. உலகம் தரும் இன்பங்கள் துன்ப நேரத்தில் இருந்த இடம் தெரியாமல் இல்லாமற் போய் விடும்.
பாடுகளுக்கூடாகக் கிடைக்கின்ற வெற்றிக் களிப்புக்கு எதுவும் ஈடாகாது. சிலுவை சுமப்பது, சுவிசேஷத்தினிமித்தம் தீங்கனுபவிப்பது, நல்ல போர்ச்சேவகனாய் தண்டிலே சேவகம் பண்ணுவது எதைக் குறித்தும் பயப்படாதே.
உன்னை அழைத்த தேவன் முடிவுபரியந்தம் கூடவே இருந்து வழிநடத்த வல்லவர். உன் கையிலுள்ள சுவிசேஷ சுடர் அணைந்து விடாதபடி மாத்திரம் கவனமாயிரு.
அதன் ஒளி பரந்து வியாபிக்க வேண்டும். அதற்கு நீ உன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். இன்று அது கடினமாகத் தோன்றினாலும்,
இறுதியிலே, ‘உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே, உன் எஜமானின் சந்தோஷத்தில் பிரவேசி’ என்ற சத்தம் தொனிக்கும் போது அந்த மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாகாது.
இந்த பரம சந்தோஷத்தை நாமும் பெற்றுக் கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு இந்த ஓய்வு நாளில் கிருபை செய்வாராக.
ஆமென் .