Daily Manna 282

உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். மத்தேயு :5:37

எனக்கு அன்பானவர்களே!

உண்மையுள்ளவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு முறை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார்.
அங்கே ஓரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப் பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா விசாரித்தார்.
” நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.
” உங்கள் சந்தேகம் என்ன?” என்று முல்லா கேட்டார்.

” உண்மை .. .. .. உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார்.

முல்லா பெரிதாகச் சிரித்தார், ” இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா?

உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ – பேசவோ – செயற்படவோ-அதையாரும் விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவம் தான் உண்மை” என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

வாய்மையே வெல்லும்” என்ற வாசகத்தினை நாம் எல்லா இடங்களிலும் காண முடியும். ஆனால், இது தான் உண்மை. இந்த நிலைபாடு இடம், பொருள், ஆட்களுகேற்ப மாறுபடுவது அனைவரும் அறிந்ததே.

உலகில் இருமாறி கொள்கையில் உண்மையும் உள்ளது. ஒரு விடயம் உண்மை இல்லையென்றால் பொய்யாகவே நம்பப்படுகிறது, அதாவது அந்த இரண்டு பரிமாணத்தை தாண்டி வேறு இல்லை என்று அர்த்தம்!

வாழ்வில் நாம் முன்னேற வேண்டுமாயின் நாம் உண்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது ஆன்றோரின் கருத்தாகும்.

மனிதனிடத்தில் காணப்பட வேண்டிய மிகவும் அடிப்படையான நற்குணங்களில் உண்மை முதன்மையானதாகும்

வேதத்தில் பார்ப்போம்,

நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள்.
யாக்கோபு :5:12

உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
மத்தேயு: 5 :37.

பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதிமொழிகள்: 12 :22.

பிரியமானவர்களே,

இந்நாட்களில் உண்மை உயர்வு தரும் என்று பேசுபவர்களையும்,
நினைப்பவர்களையும் உதாசீனம் செய்யும் அளவிற்கு இந்த சமூகம் மாறி விட்டது.

பொய் பேசி பிறரை ஏமாற்றி அதன் மூலமாகவே பலரும் இன்று முன்னேறுகின்றனர். இலாபம் சம்பாதிக்கின்றனர். உயர்ந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.
இதுவே இன்றைய நிகழ்கால நிதர்சனம்.

இருப்பினும் இவை நிச்சயமாக பின்னாளில் பெரும் துன்பத்தை தரவல்லன.“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்று கூறுவார்கள்.

அதற்கிணங்க உண்மையே எம்மை வாழ்விக்கும். ஆதலால் உண்மை உள்ளவர்களாய் வாழ்வோம். இன்றளவும் உலகத்தில் அனைவராலும் போற்றப்படுகின்ற உயர்ந்த நிலைகளை அடைந்தவர்கள். உண்மையை பின்பற்றியவர்களாவர்.

சுயநலம் இன்றி கடினமாக உழைத்த அவர்கள் நேர்மையாலும் உண்மையாலும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றனர்.

இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி வாய்மையின் வழி நின்றவர். இதனால் தான் அவரால் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.

அதுபோல கர்மவீரர் காமராஜர் மிகச்சிறந்த நேர்மையான மனிதராக இன்றும் மக்களால் போற்றப்படுகின்றார். இவ்வாறு பல உதாரணமான மனிதர்களை நாம் காண முடியும்.

வாழ்விலே நாம் உயர்ந்த நிலையை அடைந்து கொள்ள வேண்டும் என்று கனவு காண்கின்ற ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசியம் என்னவென்றால் உண்மை தன்மையுடன் விடாமுயற்சியும் சேர்ந்தால் எமது வெற்றி என்பது நிச்சயமாக ஒரு நாள் கிடைத்தே தீரும்.

இதற்கு சான்றாக பலரது வாழ்க்கை வரலாறுகளை புரட்டிப் பார்க்க முடியும். நாம் செய்கின்ற தொழிலின் மீது நம்பிக்கையும் விருப்பமும் இருந்தால் அது நிச்சயமாக எம்மை பெரிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்பதில் துளியும் ஐயமில்லை.

இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டும். எமது நாடு, எமது மக்கள் அனைவரும் சிறப்பாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என எதிர்பார்க்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் தமக்குள்ளே ஒரு கேள்வியை எழுப்ப முடியும்.

நான் நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கின்றேனா? அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தால் இந்த உலகம் நாம் நினைப்பது போல அழகாய் இருக்கும்.

எனவே பிறரைப் பற்றி கவலைப்படாமல் நாம் உண்மையுள்ளவர்களாக வாழ முயிச்சிப்போம்.

கர்த்தர் தாமே இத்தகைய உண்மையை நம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க நம் யாவரும் கிருபை செய்வாராக.
ஆமென்.

  • Related Posts

    தயவு – கிறிஸ்துவின் இதயத்தின் பிரதிபலிப்பு | Mercy – The Reflection of Christ’s Heart

      ✝️ தயவு — கிறிஸ்துவின் நம்மிடத்திலான அழகிய கனி “எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்;உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.”— யோபு 10:12 எனது அன்பான சகோதரர் சகோதரிகளே,கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு…

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Do Not Worry About Tomorrow: Learning to Trust God’s Daily Care

    Do Not Worry About Tomorrow: Learning to Trust God’s Daily Care

    Why Forgiveness Matters: How Sin Blocks Blessings in Life

    Why Forgiveness Matters: How Sin Blocks Blessings in Life

    Bearing One Another’s Burdens: Living Out the Law of Christ

    Bearing One Another’s Burdens: Living Out the Law of Christ

    God’s Guidance and Wise Counsel: Why Listening Protects Your Life

    God’s Guidance and Wise Counsel: Why Listening Protects Your Life

    Filled with the Holy Spirit: How God’s Wisdom Brings Growth and Favor

    Filled with the Holy Spirit: How God’s Wisdom Brings Growth and Favor

    The Fear of the Lord: The Foundation of a Life That Pleases God

    The Fear of the Lord: The Foundation of a Life That Pleases God