Let us proclaim the name of God

Let us proclaim the name of God

Let us proclaim the name of God

இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2 :10.

~~~~~~~
எனக்கு அன்பானவர்களே!

நற்செய்தியை நமக்கு தருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

உலக வரலாற்றில் நல்ல செய்தியாக இருப்பது சர்வ வல்லமை உள்ள தேவன் மனிதர்களைத் தேடி பூமிக்கு வந்தது தான்.

இந்த செய்தி `எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி
லூக்கா 2:10

நம்மைத் தேடி இந்த பூமிக்கு வந்த தேவாதி தேவனின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து மகிழ்ச்சி அடையும் நாம், அவர் இந்த பூமிக்கு வந்த நோக்கத்தையும் நன்றாக புரிந்து கொண்டு வாழும் போது, நாம் மட்டும் அல்ல, ஆண்டவரும் நம்மோடு சேர்ந்து மகிழ்ச்சி அடைவார்.

தேவ தூதன் மூலமாக அறிவிக்கப்பட்ட நற்செய்தியை கேட்ட மேய்ப்பர்கள் தீவிரமாக காண சென்றார்கள்.
அது மட்டுமல்ல தாங்கள் கேட்ட, கண்ட நற்செய்தியை தாமதம் இல்லாமல் பிரசித்தம் {அறிவித்தல்} பண்ணினார்கள் என்றும் வேதம் சொல்லுகிறது.

நாமும் நமக்கு கிடைத்த நற்செய்தியை மற்றவர்களுக்கும் அறிவிப்பதே இயேசு கிறிஸ்து நமக்குள் பிறந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இருக்கும். இன்று அனேக மக்கள் பாவத்திலும், விசாரத்திலும் , மீட்பு இல்லாமல் வாடி தவிக்கின்றனர்.

நமக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தியைக் குறித்து நாம் எந்த அளவுக்கு மற்றவர்கள் மேல் கரிசனை உள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும்.

கடந்த சில வருங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம். வசதி வாய்ப்பில் குறைவில்லை, சொத்து பத்தில் குறையில்லை. வீடு, தோட்டம், துறவு என எல்லா வளங்களும் நிறைந்திருந்தது.

செல்வாக்காக, வாழ்ந்து வந்த நபரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் மனதை மிகவும் பாதிக்க செய்தது. ஒரே வருடத்தில் ஆறு மாத காலத்திற்குள்ளாக அந்த குடும்பத்தில் உள்ள நான்கு பேர் மரணத்தை சந்தித்திருக்கிறார்கள்.

முதலாவது மனைவியை இழந்தார், இரண்டு மாத கால இடைவெளியில் தனது டாக்டர் மகனை விபத்தில் இழந்தார்.
அடுத்த இரண்டு மாத காலத்தில் குடி போதைக்கு அடிமையாகி இருந்த தனது மூத்த மகனை இழந்தார்.

அடுத்த 15 நாளில் அந்த மனிதரும் மரித்துப் போனார்.
இந்த பூமியில் வாழ்வதற்கு எந்த குறையும் இல்லை. அநியாயமாய் சொத்து சேர்ப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் வெற்றி கண்ட அந்த குடும்பத்தினர், உண்மையான வாழ்க்கையில் தோற்றுப் போய் விட்டார்கள்.

இப்போது அவர்கள் சேர்த்த பணம் சொத்துக்கள் இருக்கிறது. ஆனால் அதை அனுபவிப்பதற்கு அவர்கள் இல்லை.
பணத்தை முக்கியத்துவப் படுத்தினார்கள். பதவி, அதிகாரத்தை முக்கியத்துவப்படுத்தினார்கள். ஆனால் தங்கள் ஆத்தும விடுதலைக்காகவும், ஆத்மீக வாழ்வு செழிப்படைய வேண்டுமே என்றும் அறிந்து கொள்ளாமல், இதை முக்கியத்துவப்படுத்தாமல் விட்டு விட்டார்கள்.

இப்படியாகத் தான் அநேக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்,. இதற்கெல்லாம் காரணம் என்ன? பாவம், பாவத்தினால் உண்டான சாபம் தான். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனின் பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுவிக்கவும் மனிதர்களை வாழ வைக்கவுமே இந்த பூமியில் பிறந்தார்.

ஆனால் இன்னும் மனிதர்கள் உண்மை வழியை அறிந்து, ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் கொள்ளை கொள்ளையாக போகிறார்கள். இந்த பூமிக்குரிய வாழ்வுவோடு எல்லாம் முடிந்து விட்டதா?

இல்லையே, பாவத்தோடு, சாபத்தோடு மரிக்கும் மனிதனின் நிலை என்ன? நித்திய நித்திய காலமாக நரகத்தில் வேதனை.

ஆகையால் தான் பிரியமானவர்களே, மனிதர்களை பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும் விடுவிக்கும் படியாக இயேசு கிறிஸ்து இந்த பூமியில் எல்லா மனிதர்களுக்காகவும் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்க வேண்டியது நமது கடமையாக இருக்கிறது.

வேதத்தில் பார்ப்போம்,

தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
லூக்கா 2:10

தங்களுக்குச் சொல்லப்பட்டதின் படியே கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்
லூக்கா 2:20.

கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம் பண்ணினார்கள்.
லூக்கா 2:17

பிரியமானவர்களே,

நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் இந்த வேளையில் பாவ பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களையும் நாம் நினைவு கூற வேண்டும்.

அப்படிப்பட்டவர்களின் ஆத்தும இரட்சிப்பிற்காகவும் இவ்வுலகில் பிறந்த சர்வ வல்லமையுள்ள தேவாதி தேவன் இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்ததின் நோக்கத்தை அறிவிக்க வேண்டும்.

இதைத் தான் பிறந்த கிறிஸ்துவை கண்ட மேய்ப்பர்கள் செய்து இயேசு கிறிஸ்து பிறப்பின் நன்நாளைக் கொண்டாடினார்கள்.
துதித்து மகிமைப்படுத்தினார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து தேவ தூதர்களும் திரள் சேனையாக கூடி “உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்
லூக்கா 2:14 என்று வேதம் கூறுகிறது.

நாமும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் துதிக்க வேண்டும். அவருடைய நாமம் மகிமைப்படும் படி வாழ வேண்டும். நாம் தேவனைத் துதிக்கும் போது தேவன் மகிமை அடைகிறார்.

அதை விட அவருக்குப் பிரியமாக நாம் வாழும் பொழுதே உண்மையாக நாம் தேவனுக்கு மகிமையை கொடுக்கிறோம்.

இந்த பூமியில் பிதாவாகிய தேவனின் சித்தத்தின்படி இந்த பூமிக்கு வந்த குமாரனாகிய தேவன், எப்படி எல்லாம் தன்னுடைய செயல்களின் மூலமாக, தனது நடக்கையின் மூலமாக தேவனுக்கு மகிமையை கொடுத்தாரோ,
அதே போல தான் கிறிஸ்து பிறப்பின் நாளை நினைவு கூறும் நாமும் எந்த அளவிற்கு நமது வாழ்க்கையில், நமது நடக்கையில், நமது பேச்சின் மூலமாக தேவனுக்கு மகிமையை செலுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முதலாவது கிறிஸ்துவை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும், நம்முடைய வாழ்க்கையை மாற்றும்படி இந்த பூமியில் பிறந்த இயேசு கிறிஸ்து என் உள்ளத்தில் பிறந்ததின் நோக்கத்தை என்னுடைய வாழ்க்கை எந்த அளவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது?. எந்த அளவுக்கு நான் மற்றவர்களுக்கு பயன்படும் வண்ணம் மாறி இருக்கிறேன்
மற்றவர்கள் நம்மைப் பார்க்கும் போது, இவர்கள் கிறிஸ்துவை உடையவர்கள் தான். நல்ல முறைமைகளில் வாழ்கிறார்கள் என்று சொல்லும் போது, தேவன் மகிமை அடைகிறார் என்பதை உணர வேண்டும்.

இதுவே தேவனுக்கு மகிமையை கொண்டு செல்லும். தேவனும் நம் மூலமாக மகிமை அடைவார்.

இப்படிப்பட்ட நற்செய்தியை மேய்ப்பர்கள் தேவனை துதித்து பாடியது மட்டுமல்லாமல், தேவனுடைய மகத்துவங்களை பிரசித்தப்படுத்தியது போல, நாமும் தேவனுடைய மகத்துவங்களை பிரசித்தப்படுத்துவோம்.தேவனுடைய நாமத்தை பறைசாற்றுவோம்.

இத்தகைய நல்வாழ்வை வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God