Daily Manna 234
கருணைக் கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்: அவன் தன் ஆகாரத்தில் தரித்திரருக்குக் கொடுக்கிறான். நீதிமொழிகள்:22 :9. எனக்கு அன்பானவர்களே! அன்பின் தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள். அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா நகரம். நள்ளிரவு நேரம். மழை கொட்டோ கொட்டென்று பெய்து கொண்டிருந்தது. நகரத்தையே மூழ்கடித்து விடும் மூர்க்கத்தோடு அடைமழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு சின்ன ஹோட்டலுக்கு வெளியே ஒரு வாடகை கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முதியவரும் அவர் மனைவியும்…