We will store our treasures in heaven

Where your treasure is, there your heart will be also.

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
மத்தேயு 6 :21.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!

நித்திய வாழ்வை மகிழ்ச்சியாக வாழச் செய்யும் நம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

வில்லியம் போர்டன் (William Borden) என்னும் மிஷனரி, உயர்ந்த கல்வி கற்றவரும், பணக்காரருமாயிருந்தார்.

ஆனால் அவர் இந்த உலக செல்வங்களையெல்லாம் துச்சமாக எண்ணி, இஸ்லாமியர் மத்தியில் கிறிஸ்துவை அறிவிப்பதற்காக எகிப்து நாட்டிற்குச் சென்றார்.

அங்கு அவர் தனக்கென்று ஒரு கார் கூட வாங்காமல் தன்னிடமிருந்தப் பணத்தையெல்லாம் ஊழியத்திற்காகக் கொடுத்து, உற்சாகமாக எகிப்து நாட்டில் ஊழியம் செய்து வந்தார்.

ஆனால், அங்கு இருந்த நான்கே மாதங்களில் அவருடைய முதுகு தண்டுவடத்தில் Spinal card Meningitis என்னும் வியாதியால் பீடிக்கப்பட்டு, தனது 25ஆவது வயதில் அங்கு கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவரது சடலம் எகிப்து நாட்டிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க….
எகிப்தை மிகவும் சிறு வயதில் ஆண்ட King Tutankhamen சாகும் போது வயது பதினேழுதான்.

அந்தக் காலத்தில் எகிப்தியர் மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டு என்று நம்பினபடியால்,அந்த அரசன் மரித்த போது, தூய தங்கத்தில் செய்யப்பட்ட இரதங்களையும், ஆயிரக்கணக்கான தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களையும் கூட வைத்து புதைத்தனர்.

அந்த அரசனின் சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் தங்கத்தாலே செய்யப்பட்டு, மூன்று நான்கு தங்கத்தாலான குகைகளுக்குள்ளே வைக்கப்பட்டு இருந்தது.

ஏனெனில் தங்கள் அரசன் அங்காவது தன் வாழ்வைச் சந்தோஷமாய் கழிக்கும்படியாக அதை அவர்கள் அமைத்திருந்தனர்.

1922ஆம் ஆண்டு ஹோவர்ட் கார்ட்டர் (Howard Carter) என்பவர் அதைக் கண்டுபிடிக்கும் வரைக்கும் 3000 ஆண்டுகள் அது அப்படியே வைக்கப்பட்டிருந்தது.

மற்ற கல்லறைகளை விட இந்த கல்லரை மிகவும் ஆடம்பரமாகவும் , எல்லா வசதிகளும் நிறைந்ததாகவும், செல்வாக்கு நிறைந்ததாகவும் இருந்தது.

இந்த கல்லறையை எல்லாரும் வந்து அவைகளை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டு மகிழ்ந்தார்கள்.

இரண்டு கல்லறைகளுக்கும் அநேக வித்தியாசங்கள் இருந்தன. அவர்கள் இருவரும் தங்கள் மறுமையின் வாழ்வில் அவர்களின் பொக்கிஷங்கள் எங்கே இருக்கும்?

வேதத்தில் பார்ப்போம்,

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்.
மத்தேயு 6:19

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.
மத்தேயு: 6:20

உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சை கொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள்,
லூக்கா 12 :33.

பிரியமானவர்களே,

இந்த இரண்டு பேருடைய கல்லறைக்கும் தான் எத்தனை வித்தியாசம்? ஒருக் கல்லறை ஏதோ ஒரு இடத்தில் தூசி படிந்ததாக, கேட்பாரற்று, ஒரு மூலையில் இருக்கிறது.

மற்ற கல்லறையோ ஆடம்பரமாக, எல்லா வசதிகளும் நிறைந்ததாக, செல்வாக்கு நிறைந்ததாக, எல்லாரும் வந்து கண்டு வியக்கும் வண்ணமாக உள்ளது.

ஆனால் இந்த இரண்டு வாலிபர்களும் இப்போது எங்கே? என்றுப் பார்த்தால், தன்னை ஒரு இராஜாவாக, எல்லா சுகங்களையும் அனுபவித்த அரசன், கிறிஸ்து அல்லாத நித்தியத்திலே எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாதவனாக தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறான்.

மற்றவரோ தன் செல்வத்தையெல்லாம் கிறிஸ்துவுக்காக இழந்தவராக, உண்மையான இராஜாவுக்கு உண்மையாய் ஊழியம் செய்து, நித்திய நித்தியமாய் தேவனோடு சந்தோஷமாய் தன் நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்.

அரசன் டுட்டுவின் (King Tut) வாழ்க்கைச் சோகமானது. ஏனெனில் மிகவும் தாமதமாக அவன் கண்டுக் கொண்டான், தான் கொண்டு வந்திருந்த எந்த தங்கமும் செல்வமும் தன்னால் எங்கும் கொண்டு போக முடியாது, அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை.

ஆனால் மற்றவரோ ‘பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை;

அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை’ என்ற சத்தியத்தை அறிந்தவராக தன் பொக்கிஷத்தை பரலோத்தில் சேர்த்து வைத்தார். அதனால் தன் நித்தியத்தை வெற்றியாக முடிவு செய்தவராக அவர் நித்திய நித்தியமாக வாழ்கிறார்.

நம் பொக்கிஷங்களையும், பூச்சியாவது துருவாவது கெடுக்காத இடமாகிய கிறிஸ்துவினிடத்தில் சேர்த்து வைப்போம். உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

நம்பொக்கிஷம் உலகத்தின் காரியங்களிலே இருந்தால், நம் இருதயமும் அதிலே தான் இருக்கும். அதை எப்படி பாதுகாப்பது, அதை எப்படி பெருகச் செய்வது என்று அதன் மேலே தான் நம் இருதயம் இருக்கும்.

ஆனால் நம் பொக்கிஷம் ஜீவனுள்ள தேவனின் மேலே இருக்கும் போது, அது நிச்சயமாக பரலோகத்திலே சேர்த்து வைக்கப்படும். நாம் அங்கு செல்லும் போது, அதற்கான பதில் நமக்கு செய்யப்படும்.

பொக்கிஷம் என்பது, நாம் சம்பாதிக்கிற அல்லது நமக்கு நம் பெற்றோர் சுதந்தரமாக வைத்துப் போகிற சொத்துக்கள் மட்டுமல்ல, நாம் கிறிஸ்துவுக்குள் இருந்து செய்கிற ஒவ்வொரு நற்செயலும் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது.

கிறிஸ்துவுககுள் இல்லாமல் இருந்து, நாம் செய்கிற எந்த நற் செயலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அது சன்மார்க்க நெறியாகும். அது அல்ல பொக்கிஷம்,

நீதிமார்க்கமாய் நடந்து அல்லது நீதிமானாய் நடந்து, கர்த்தருக்குள் செய்கிற காரியங்களே நித்திய மகிமைக்குள் சேர்க்கப்படும்.

இப்படிப்பட்ட மகிமைக்குள்ள காரியங்களை செய்து, கர்த்தருடைய நாமத்தை பறைசாற்றுவோம். நம்முடைய பொக்கிஷங்களை பரலோகத்தில் சேர்த்து வைப்போம்.
ஆமென்

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships