If you are faithful, you will receive whatever you ask in prayer

If you are faithful, you will receive whatever you ask in prayer

மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
மத்தேயு 21:22.

×××××××××××××××××××××××××
எனக்கு அன்பானவர்களே!

விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்கு ஒரு பெண் பயிற்சி பெற்றாள். இந்த பயிற்சியின் போது, அவளுடைய கணவர் கூடவே இருந்து, “வெற்றி பெற கொஞ்ச தூரம் தான், உன்னால் கூடும், உன்னால் கூடும்” என்று சொல்லிக் கொண்டே அவளை உற்சாகப்படுத்துவார்.

ஓட்டப் பந்தய நாளும் வந்தது. ஓடுவதற்கு ஆயத்தமானாள். பந்தயத்தை முடிப்பதற்கு கொஞ்ச தூரத்திற்கு முன்பாக அவளுடைய கால்கள் திடீரென்று மரத்துப் போனது போலாகி விட்டது.

இதற்கு மேல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலையில் செய்வதறியாது திகைத்தாள். அப்பொழுது அவளுடைய கணவன் சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ரீங்காரமிட்டது.

“கொஞ்ச தூரம் தான், உன்னால் கூடும், உன்னால் கூடும்” என்ற வார்த்தைகளை அவள் காதில் ஒலித்தது .ஒலித்துக் கொண்டே இருந்தது .அவள் கணவன் சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.

ஒரு புதுபெலன் அவளுக்குள் வந்தது போல் உணர்ந்தாள். முன்னைக் காட்டிலும் வேகமாக ஓடினாள். முடிவில் பந்தயத்தில் மிகவும் சுலபமாக வெற்றி பெற்றாள்.

அன்பானவர்களே,
இது தான் விசுவாசம். அந்த சகோதரியின் கணவனின் வார்த்தைகள் அவளை இலக்கை அடைய தூண்டியது.

அதேபோல் உங்கள் வாழ்க்கையிலும், ஊக்கமளிக்கும் மற்றும் உங்களை திடப்படுத்தும் கர்த்தரின் வார்த்தைகளை கேட்டு அதற்கு கீழ்ப்படியுங்கள். அப்பொழுது நீங்கள், உங்கள் வாழ்க்கை எனும் ஓட்டத்தை மிக எளிதில் வெல்வீர்கள்.

வேதத்தில் பார்ப்போம்,

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 9 :23.

விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் அவளுக்கு நிறைவேறும் என்றாள்.
லூக்கா 1 :45.

தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும்.
யோவான் 3 :15.

பிரியமானவர்களே,

நாம் எந்த நிலைமையிலும் கர்த்தரை நோக்கிப் பார்க்க, அவரிடத்தில் நம்முடைய இருதயத்தை ஊற்ற நாம் கற்றுக் கொண்டோமானால்,
அன்பின் ஆண்டவர் தெய்வீக நம்பிக்கையோடு கூடிய திடமான விசுவாசத்தை நமக்கு தருவார்.

அதுமட்டுமின்றி, அவருடைய வசனத்தை வாசிக்கிற பொழுதும், கேட்கிற பொழுதும், இந்த மேலான விசுவாசம் நமக்குள் வளரும்.

உங்கள் விசுவாசமே அற்புதத்தை பெறுவதற்கு ஊன்று கோலாயிருக்கிறது.

“நீ விசுவாசிக்கக் கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்” மாற்கு 9:23 என்ற வேத வார்த்தையின் படி என்ன பிரச்சினைகள் வந்தாலும், எந்த நிலைமையிலும் விசுவாசித்து, உறுதியோடு ஆண்டவரை பற்றிக் கொள்ளுகிறவர்களுடைய மனவிருப்பத்தை அவர் அப்படியே நிறைவேற்றி ஆசீர்வதிப்பார்.

அவர் உங்களுக்கு பரிபூரண ஆசீர்வாதத்தை தருவார். இன்று சிறிய காரியங்களுக்கும், மக்கள் சலித்து, சோர்ந்து போகிறார்கள். உங்கள் நம்பிக்கையை விட்டு விடாதிருங்கள்.

ஏனெனில் நீங்கள் விசுவாசத்துடன் ஜெபத்தில் எவைகளை கேட்கிறீர்களோ, அவைகளையெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள். மத்தேயு 21:22. என்று பார்க்கிறோம்.

நம்முடைய வாழ்வின் மரித்துப் போய் கிடக்கிற ஒவ்வொரு காரியத்தையும் நாம் விசுவாச வார்த்தையால் தட்டி எழுப்புவோம். அப்போது நாமும் இவ்வுலகில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நம்முடைய விசுவாச ஓட்டத்தில் வெற்றியை சுதந்தரிக்க நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.

ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God