Daily Manna 141

அந்நாட்களிலே, இயேசு ஜெபம் பண்ணும் படி ஒரு மலையின் மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். - லூக்கா 6:12.

எனக்கு அன்பானவர்களே!

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு விமானத்தில் ஆப்ரிக்க கண்டத்திலிருந்து, ஐரோப்பிய கண்டத்திற்கு ஒரு பெரிய பெட்டியில் விஷ பாம்புகளை அடைத்து வைத்து எடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அதை அடைத்த மனிதன் பூட்டுப் போட மறந்து விட்டான்.

விமானம் கீழே இருந்து மேலே எழும்பினபோது, பெட்டி திறந்து பாம்புகள் வெளிவர தொடங்கின. அது பயணிகள் இருக்கும் இடத்திற்கு வேகமாக ஊர்ந்து வர ஆரம்பித்தன. அதைக் கண்ட பயணிகள் சிலர் மயக்கமடைந்தனர்.

சிலர் அது மேலே வராதபடி உயரமான இடத்திற்கு செல்ல முயற்சித்தனர். பாம்புகளைப் பற்றி செய்தி விமான ஓட்டிக்கு தெரியப்படுத்தப்பட்டது. சிலரை பாம்பு கடித்து அவர்கள் உடனேயே மரித்தனர்.

விமான ஓட்டி மிகவும் பயந்தவராக, கண்ட்ரோல் அறையை அழைத்து, விஷயங்களை சொல்லி, ‘எங்கு தரையிறக்க வேண்டும்’ என்று பதட்டமாய் கேட்டார். கீழே இருந்த கண்ட்ரோலர், ‘கீழே இறக்க வேண்டாம், ஒரு நிமிடம் நான் யோசிக்க வேண்டும்’ என்றார். ஒரு நிமிடம் என்பது ஒரு யுகமாக இருந்தது அவர்களுக்கு.

ஒரு நிமிடம் கழித்து அந்த கண்ட்ரோலர் ‘எவ்வளவு உயரத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்?’ என்றுக் கேட்டார். அதற்கு விமானி, ‘4000 அடி உயரத்தில்’ என்றுக் கூறினார். கண்ட்ரோலர் ‘இன்னும் உயர போங்கள்’ என்றார். விமானி போயும் ஒன்றும் நடக்கவில்லை, ‘இன்னும் உயர இன்னும் உயர’ என்று என்று கட்டளைக் கொடுத்துக் கொண்டே இருந்தார் கண்ட்ரோலர்.

கடைசியாக மிக உயரத்தில் சென்ற போது, பாம்புகள் எல்லாம் செயலிழந்துப் போயின. அதை ஒரு பொம்மையை தூக்குவதுப் போல தூக்க முடிந்தது. பயணிகளில் ஒருவர், ‘இந்த கருநாகம் என்னை எப்படி துரத்தியது, இப்போது அதை நான் எப்படி இலகுவாக தூக்குகிறேன்’ என்றார்.

எல்லா பாம்புகளையும் மீண்டும் பெட்டியில் போட்டு அடைத்தப்பின் பெரிய பூட்டுப் போடப்பட்டது. மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு, ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் காக்கப்பட்டார்கள்.

பிரியமானவர்களே,
சாத்தானின் வல்லமைகளுக்கு நாம் தப்ப வேண்டுமானால் நாம் உயர செல்லத் தான் வேண்டும். இந்த உலகத்தின் அதிபதியாகிய பிசாசானவன் நாம் இந்த உலகத்தில் கீழே இருக்கும் காலம் வரைக்கும் நம்மை உபத்திரவத்திற்குள்ளும், சோதனைக்குள்ளும் உள்ளாக்கி பாழ்ப்படுத்திக் கொண்டே தான் இருப்பான்.

ஆனால் நாம் நம்; ஜெபத்தில் கர்த்தரை நோக்கி உயர, உயர செல்ல செல்ல அவன் செயலிழந்துப் போவான். அவனுடைய தந்திரங்களும், அஸ்திரங்களும் தேவனை நோக்கி மேலே மேலே போகிறவர்களிடம் பலிப்பதில்லை.

வேதத்தில் பார்ப்போம்,

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
மத்தேயு 26 :41.

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
கொலோ 4 :2.

அப்படி நான், ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்து வந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.
தானி 9 :21.

பிரியமானவர்களே,

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லும் போது நாம் இடைவிடாமல் முழங்காலில் நிற்க வேண்டுமா? இல்லை. நம்முடைய மனநிலையைக் குறித்து இந்த இடத்தில் கூறுகிறார். நம்முடைய எல்லா விதமான சூழ்நிலையிலும் இடைவிடாமல் கர்த்தரை நோக்கிப் பார்க்க வேண்டும்.

நம்முடைய நிலையை கர்த்தருக்குத் தெரியப்படுத்த வேண்டும். கர்த்தரைச் சார்ந்து வாழும்படியான வாழ்க்கையை நாம் கொண்டிருக்க வேண்டும். அநேக மக்கள் ஜெபம் என்பது ஏதோ ஒரு கடமை என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஜெபம் என்பது தேவனோடு கொண்டிருக்கும் உறவின் இனிமையைக் காட்டுகிறது.

“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” 1 தெச 5:17-18. ஒரு மெய்யான கிறிஸ்தவன் எல்லாவற்றிற்காகவும் எப்பொழுதும் தேவனுக்கு நன்றிகளை செலுத்துபவனாக காணப்படுவான்.

அந்நாட்களிலே, இயேசு ஜெபம் பண்ணும் படி ஒரு மலையின் மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி: ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார் என்று வேத வாக்கியம் கூறுகிறது.

அவர் கீழேயே இருந்து ஜெபிக்கலாமே, ஏன் மலைக்கு சென்றார்? அங்கு யாருடைய தொந்தரவும் இல்லாமல், இராத்திரி முழுவதும் தேவனை நோக்கி ஜெபித்து, பெலத்தின் மேல் பெலத்தை பெற்றுக் கொண்டார்.

‘நீ அழியாத படிக்கு மலைக்கு ஓடிப்போ’ ஆதி 19:17 .என்று லோத்திற்கும் எச்சரிக்கை விடப்பட்டதல்லவா? நாமும் அழியாதபடி கன்மலையாகிய கிறிஸ்துவினிடத்தில் ஓடிப் போய் விட வேண்டும்.

அவரை பற்றிக் கொள்ளும் போது, உலகத்தின் எந்த அழிவிற்கும், பிசாசின் எந்த சோதனைகளுக்கும் நாம் தப்பித்துக் கொள்ள முடியும்.
நாம் ஒவ்வொரு நாளும் நமக்கு உதவி வரும் கன்மலையாகிய கிறிஸ்துவை நோக்கி ஜெபத்தில் முன்னேறி செல்ல வேண்டும்.

நாம் எத்தனை நேரம் ஜெபத்தில் தரித்திருந்தோம் என்று பார்த்தோமானால் எத்தனை குறைவாய் காணப்படுவோம்? ஒருவர் எழுதினார், ‘ஒரு நாளைக்கு ஐந்து நிமிடம் ஜெபித்தால் ஒரு வருடத்திற்கு ஒரே ஒரு நாளைக்குத் தான் ஜெபித்திருப்போம்’ என்று.

ஒவ்வொரு உலக காரியத்திற்கும் மணிக்கணக்கில் செலவழிக்கிற நாம், ஜெபத்திற்கு எத்தனை நேரம் செலவழிக்கிறோம்? நாம் எத்தனை நேரம் ஜெபித்தோம் என்பதை பொறுத்து தான் நாம் உலகத்தின் மீது ஜெயம் கொள்வது அமையும்.

ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் கூட ஜெபிக்காமல் இருந்தால் எப்படி நாம் சாத்தானை ஜெயிக்க முடியும்? ?
நாம் நம்மையே ஒரு விசை ஆராய்ந்து பார்த்து ஜெபிப்பதற்கு நம்மை ஒப்புக் கொடுப்போம்.

நம்முடைய ஜெபமே ஜெயத்தை தரும்.ஆகவே நாம் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய சமுகத்தில் சென்று ஜெபித்து இறை ஆசீரை பெற்றுக் கொள்வோம்.

ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God