Daily Manna 143

விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். நீதிமொழி: 13 :16.

எனக்கு அன்பானவர்களே!

இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

விசுவாச வீரரான ஜார்ஜ் முல்லரிடம் ஒருமுறை வாலிபன் ஒருவன் சென்று ‘உங்கள் ஊழிய வெற்றிக்கு காரணம் என்ன’ என்று கேட்டான்.

அதற்கு அவர் ‘கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன். என் சுயம் மரித்தது. அதுவே என் ஊழிய வெற்றிக்கு காரணம்’ என்றார். அப்போது அந்த வாலிபன் ‘ஐயா சுயத்திற்கு மரிப்பது என்றால் என்ன?’ என்று கேட்டான்.

அதற்கு அவர், ‘தம்பி நீ கல்லறைக்கு போய் அங்கே எழுதப்பட்டிருக்கும் மரித்தவர்களின் பெயரை வாசித்து, அவர்களை உன் மனம் போல வாய்க்கு வந்தபடியெல்லாம் பழித்து பேசு, பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவர்களின் பெயர்களை சொல்லி புகழ்ந்து பேசு. பிறகு என்னிடம் வா’ என்று சொல்லி அனுப்பினார்.

அப்படியே இந்த வாலிபன் கல்லறைக்கு சென்று அவர்களை பழித்தும் புகழ்ந்தும் பேசி விட்டு திரும்பி வந்தான். முல்லர் கேட்டார், ‘நீ கடினமாய் பேசின போது, கல்லறைக்குள் அடக்கம் பண்ணப்பட்டவர்கள் உன் மேல் சீறினார்களா?’ ‘இல்லை ஒரு பதிலும் பேசவில்லை’ என்றான்.

‘நீ புகழ்ந்த போது பெருமையடைந்து உன்னை பாராட்டினார்களா?’ என்றார். ‘இல்லை ஒன்றும் பேசவில்லை’ என்றான். ‘சுயம் மரித்தல்’ என்பது அது தான்.

மற்றவர்களுடைய புகழுரை கேட்டு நாம் பெருமையடையவும் கூடாது, கடுஞ்சொற்கள் நம்மை பாதிக்கவும் கூடாது. இந்த மனநிலையை சிலுவையில் தம் ஜீவனை தந்த கிறிஸ்துவின் உதவியோடு பெற்று கொள்வது தான் சுயம் மரித்தல்’ என்று முல்லர் கூறினார்.

பிரியமானவர்களே,
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது சுயம் நம்மை விட்டு நீங்கி, கிறிஸ்து நமக்குள் வாழ்கிற அனுபவம் ஆகும். அதாவது பழைய ஜென்ம சுபாவங்கள் நம்மிடமிருந்து வெளிப்படாமல், கிறிஸ்துவின் சுபாவங்கள் வெளிப்பட வேண்டும்.

எத்தனை தான் ஆவிக்குரியவர் என்று எண்ணப்பட்டாலும் ஒருவருடைய ஜென்ம சுபாவங்கள் மாறுவது மிகவும் கடினமாகவே காணப்படுகிறது.

வெளிப்படும் சுபாவத்தின் அடிப்படையில் நம்மிடம் இன்னும் சுயம் வாழ்கிறதா அல்லது கிறிஸ்து வாழ்கிறாரா என அறிந்து கொள்ளலாம்.

வேதத்தில் பார்ப்போம்,

அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
நீதிமொழி:17 :27.

தன் வழியைச் சிந்தித்துக் கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
நீதிமொழி: 14 :8

உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக் கடவன்.
யாக்கோபு 3:13.

பிரியமானவர்களே,

நம்மில் பலர் ஆவிக்குரியவர்களாக பக்தி வாழ்க்கை வாழ்கிறோம். ஆனால் குடும்பத்தில், சமுதாயத்தில், வேலை பார்க்கும் இடத்தில் நமக்கு தர வேண்டிய முக்கியத்துவமும் மரியாதையும் சற்று குறைந்து விட்டால், நம்மால் தாங்கி கொள்ள முடிவதில்லை.

நம்முடைய நற்செயல்கள் கண்டு கொள்ளப்படாமல் போகும் போதும், நம்முடைய ஆலோசனை ஏற்று கொள்ளப்படாமற் போகும் போதும், நாம் அதிகமாய் சோர்ந்து விடுகிறோம்.

ஆனால் நாம் பாராட்டப்படும் போதும், ஒரு கூட்ட ஜனங்களுக்கு முன் கௌரவிக்கப்படும் போதும் நான் என்ற எண்ணமே மேலோங்கி பெருமை தலை தூக்குகிறது.

பிறரால் இகழப்படும் போது, சோர்ந்து விடுவதும், பாராட்டப்படும் போது, பெருமை அடைவதும் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவனுக்கு உகந்ததல்ல. தன்னை கிறிஸ்துவின் சிலுவையின் முன் ஜீவ பலியாய் ஒப்புக் கொடுத்தவரின் சிந்தனை இவ்விரண்டிற்கும் சாய்கிறதாய் இருக்க முடியாது.

இயேசு கிறிஸ்துவை பின்பற்றி வர விரும்பினவர்களுக்கு அவர் சொன்ன முதல் நிபந்தனை அவன் தன்னைத் தான் வெறுக்க வேண்டும் என்பதே.

அப்படியே நம்மை ஒருவர் வெறுக்கும் போதும், எந்தவிதமான புகழ்ச்சியும், இகழ்ச்சியும் நம்மை பாதிக்க கூடாது. அப்போது தான் கிறிஸ்துவே நம்மில் உயர்த்தப்படுவார்.

இப்படிப்பட்ட கிறிஸ்துவின் சிந்தை நம்மில் பெருக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.

  • Related Posts

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    நாவின் அதிகாரம்: வார்த்தைகள் வாழ்க்கையையும் உறவுகளையும் எப்படி மாற்றுகின்றன

    நாவின் அதிகாரம் ஏன் நம்மை எச்சரிக்கச் செய்கிறது? நாவின் அதிகாரம் என்பது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம். ஆனால் வேதாகமம் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் காட்டுகிறது. நாம் பேசும் வார்த்தைகள் ஒருவரை உயர்த்தவும் முடியும், அதே நேரத்தில் ஒருவரின் மனதை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Living a Faithful Life: Why Truth Still Matters to God

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships

    Christian Kindness: How the Fruit of the Spirit Changes Everyday Relationships