Daily Manna 166

என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; சங்கீதம்: 62 :7.

என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது;
சங்கீதம்: 62 :7.
***********
எனக்கு அன்பானவர்களே!

இரட்சிப்பின் கன்மலையாம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

இன்றைய நாட்களில் களைப்பினால் ஆலயத்திற்குப் செல்லாமல் தூக்கத்தில் இருப்பவர்கள் எத்தனை பேர்?. களைப்பின் மத்தியிலும் உடல் சோர்வின் மத்தியிலும் ஆராதனைக்கு செல்பவர்கள் எத்தனை பேர் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆரவாரங்கள் மட்டுமே வாழ்வு அல்ல;

இந்த வாழ்வில் எதுவும், எப்போதும் நடக்கும் என்பதை எச்சரிப்பது போல வானளாவ எழுந்து வந்த சுனாமி அலைகளை நாம் மறந்து விட்டோமல்லவா! இன்னொரு சுனாமி வரும் என்றும். வராது என்றும் நம்மால் சொல்ல முடியாது; ஆனாலும், அந்த அழிவுகள் நமக்கு எச்சரிப்பைத் தந்தும், நமது வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட்டதா? என்பது தான் கேள்வி.

அன்று தாவீதின் வாழ்விலும் சுனாமியின் தாக்கத்தைப் பார்க்கிலும் அதிக வேதனை தரும் சம்பவங்கள் நிகழத் தான் செய்தன. தாவீது மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்கள் அநேகம் உண்டு.

மனிதரால் இகழப்பட்ட வேளைகள் பல. பலர் அவருக்கு விரோதமாக தீங்கிழைத்தனர். ஆனால், எந்த இக்கட்டிலும் தாவீது சோர்ந்து போகவில்லை.( அது எப்படி?) தாவீது தேவனையே நோக்கி அமர்ந்திருந்து, அவரையே தன் கன்மலையாக, இரட்சிப்பாக, உயர்ந்த அடைக்கலமாகக் கொண்டிருந்தார்.

தேவன் தன்னோடு இருப்பதை அவர் முழுமையாக நம்பினார். ஆகையால் அசைக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களிலும், தான் அசைக்கப்பட முடியாது என்று உறுதியான விசுவாசத்தில் நிலைத்திருந்தார்.

ஆனால், நாம் இன்று எவ்வளவாக அசைக்கப்படுகிறோம். தீங்கு நேரிடுவதால் அசைக்கப்படுவதைப் பார்க்கிலும் உலக ஆசாபாசங்கள், உலக இன்பங்கள், கொண்டாட்டங்கள் இவற்றினாலும் நாம் அதிகமாய் அசைக்கப்பட்டு விடுகிறோம்.

ஏனென்றால் பணத்தையும் , அதிகாரத்தையும் ,
மனித பலத்தையும் நம்புகிறதான மனிதர்கள் நடுவில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் ஆண்டவரை நம்புகிறோம் என்று சொன்னாலும் நாம் அவரை முற்றிலுமாக நம்புவதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஆனால் தாவீது தனக்கு பண பெலன், அதிகார பெலன், ஆள் பெலன் எல்லாம் இருந்தும் அவரின் நம்பிக்கை கர்த்தர் மேல் இருந்தது என்று வேதம் நமக்கு தெரிவிக்கின்றன .
எனக்கு என்ன தான் இருந்தாலும் என் ஆத்துமா தேவனை நோக்கி தான் அமர்ந்திருக்கும்.

ஏனென்றால் என் வாழ்வில் தேவன் மாத்திரமே என் இரட்சிப்பென்னும் மதிலாக இருக்கிறார்.
ஆகவே நான் அசைக்கப்படுவதே இல்லை என்று தன் நம்பிக்கையை ஆணித்தரமாக வெளிப்படுத்துகிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும்.
சங்கீதம் 62 :1.

கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக் கொண்டு, நீதியைச் செய்யுங்கள் என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
ஏசாயா :56 :1.

நாம் விசுவாசிகளான போது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.
ரோமர்: 13 :11.

பிரியமானவர்களே,

தாவீது கர்த்தரை இரட்சிப்பென்கிற மதிலாக அறிந்து வைத்திருந்தபடியால் , தாவீது சொல்லுகிறான் எனக்கு அவர் கன்மலையாக இருக்கிறார் , உயர்ந்த அடைக்கலமாக இருக்கிறார் ஆகவே என்னை எதுவுமே ஆசைப்பதில்லை ,
நான் அசைக்கப்படுவதில்லை என்று கூறுகிறான் .

இப்படியெல்லாம் கர்த்தரை அறிந்து வைத்திருந்த தாவீதின் வாழ்விலே அவன் சந்தித்த போராட்டமான சூழ்நிலைமைகளிலெல்லாம் அவன் தன் ஆத்துமாவை பார்த்து ,என் ஆத்துமாவே,ஏன் கலங்குகிறாய் தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.
சங்கீதம் 62:5,
அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்தவர் அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை
சங்கீதம் 62:6

என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; இப்படி விசுவாச வார்த்தைகளை கூறி தன் ஆத்துமாவிலே பெலன் அடைந்தார்.

மேலும் தான் கர்த்தரை நம்புகிறபடியே ,
நீங்களும் அவரை நம்புங்கள் என்று நமக்கும் அழைப்பு கொடுக்கிறார் .

தாவீது ,ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றி விடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்
சங்கீதம்:62:8,
கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமை பாராட்டாதிருங்கள்;
ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள்
சங்கீதம் 62:10 என்று நம்மை பார்த்து இந்த நாளிலே சொல்லுகிறார்.

அன்பான தேவ பிள்ளையே ,
உன்னுடைய இரட்சிப்பு ,நம்பிக்கை யார் மேல் இருக்கிறது ?. உன்னுடைய வாழ்வில் இரட்சிப்பாகிய தேவனை மதிலாக கொண்டிருக்கிறாயா ?

தேவனே என் இரட்சிப்பும் ,
கன்மலையும் ,என் உயர்ந்த அடைக்கலமாகவும் இருக்கிறார் என்று தாவீதைப் போல தைரியமாக இன்று உன்னால் சொல்ல முடியுமா ? தாவீது சொன்ன பிரகாரமாக எக்காலத்திலேயும் கர்த்தரை நம்ப இன்று தீர்மானம் எடுங்கள்.

அவர் சமூகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றி விட ஆயத்தமாகுங்கள் . இந்த உலகத்தில் நம்மால் எதையும் நடப்பிக்க முடியாது.

எனவே,கர்த்தர் மேல் உங்களுடைய நம்பிக்கையை வையுங்கள் .
ஆண்டவர் உங்களுக்கு நல்ல ஐஸ்வரியைகளையும் ,மேன்மைகளையும் , அதிகாரங்களையும் கொடுத்திருந்தால் உங்கள் இதயத்தை அதின் மேல் வைக்காதேயுங்கள்.

கர்த்தர் மேல் உங்கள் நம்பிக்கையை வையுங்கள் . நீங்கள் ஒரு போதும் இவ்வுலகில் அசைக்கப்படுவதில்லை.

இப்படிப்பட்ட நிலையான ஆசீர்வாதங்களை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God