அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். சங்கீதம்: 113 :7.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
சங்கீதம்: 113 :7.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எனக்கு அன்பானவர்களே!
இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான கார்கள் தயாரிக்கப்பட்டு அங்கு ஒரு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அந்த கார்கள் குடோனில் இருந்து வெளியே கொண்டு வர மிகவும் சிக்கல் ஏற்பட்டது.
காரின் உயரத்தை விட வாயிலின் உயரம் ஓர் அங்குலம் சிறிதாக இருந்தது. கார் முழுமையாக்கப்படாமல் உள்ளே ஏற்றும் போது எந்த பிரச்னையும் வரவில்லை ஆனால், வெளியே கொண்டு வரும் போது பிரச்சனை ஏற்பட்டது.
எப்படி வெளியே கொண்டு வந்தாலும் மேற்கூரை காரின் மேல் இடிக்கும். குறைந்தபட்சம் காரின் மேற்புறம் கீறல் விழக் கூடும்.
என்ன செய்வதென்று அனைவரும் யோசித்தனர்.
இஞ்சினியர்களும், டெக்னீஷியன்களும் வரவழைக்கப்பட்டனர். அனைவரும் யோசித்து, பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர். “காரில் கீறல் விழுந்தால் பரவாயில்லை. மறுமுறை பெயிண்ட் அடித்து டபுள் கோட் கொடுத்து விடலாம்” என்றார் மேலாளர்.
“வேண்டாம். வாயிலின் மேற்புறம் ஒரு செங்கல் கனத்துக்கு இடித்து விடுவோம். பிறகு மீண்டும் சிமெண்ட் வைத்து பூசிவிடலாம்” என்றார் அந்த கட்டடத்தின் இஞ்சினியர். இந்த யோசனையில் ஒன்றை செயல்படுத்துவது என முடிவுக்கு வந்தனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருந்த இறை பக்தி கொண்ட ஒரு வயதான காவலாளி ஒன்று சொன்னார், “”அதெல்லாம் வேண்டாம் சார். கார்களின் சக்கரத்தின் காற்றை இறக்கி விடுங்கள் சரியாக போய்விடும்” என்றார்.
கேட்டுக் கொண்டிருந்த கம்பெனியின் டைரக்டர், “ஆகா..அற்புதம். எப்பேர்ப்பட்ட ஆலோசனை. இஞ்சினியர்களும்,
டெக்னீஷியன்களும் அங்கே கூடியிருக்க எவருக்கும் தோன்றாதது ஒரு படிப்பறிவு இல்லாத இந்த வயதான காவலாளிக்குத் இது எப்படி தோன்றியது என்று அனைவரும் வியந்து போனார்கள்.
இவர்கள் தொழில் நுட்பத்தில் கரை கண்ட நிபுணர்கள். பெரிய பிரச்னைகளையெல்லாம் சமாளிப்பவர்கள். ஆனால் இந்த சிறிய பிரச்னை அவர்களை திக்குமுக்காட வைத்து விட்டதே” என்று சொல்லி அந்த காவலாளியைப் பாராட்டினார்.
வேதம் சொல்லுகிறது ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப் பண்ணுகிறான். நீதிமொழிகள்:24:5 என்று.
அந்த வயதான காவலாளியை பார்த்தது மட்டும் அல்ல.அவருக்கு ஒரு நல்ல பதவியும் கொடுக்கப்பட்டது.
வேதத்தில் பார்ப்போம்,
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை.
சங்கீதம்’ 9 :18.
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கி விடுகிறார், எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
சங்கீதம் :113 :7.
எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறார்.
சங்கீதம்: 107 :41.
பிரியமானவர்களே,
“எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒரு போதும் கெட்டுப் போவதில்லை.”என்று பார்க்கிறோம்.
ஆனால்
“எளியவன்”, “சிறியவன்” என்று எண்ணப்படுகிற மக்களை இவ்வுலகம் மிகவும் அற்பமாக எண்ணுகிறது. அது மட்டுமல்ல அவர்கள்
புறக்கணித்துத் தள்ளப்பட்ட நிலையில் வாழ வேண்டியதாக இருக்கிறது.
ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அந்த நிலைமையை தலைகீழாக மாற்றியமைக்கவே, ஏழைக் கோலத்தில், “மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை”
மத்தேயு 8:20;
லூக்கா 9:58 என்ற நிலையில், தம் மக்கள் இவ்வுலக வாழ்வில் “ஐசுவரியவான்களாக்கும்படி”,
தாம் தரித்திரராக
2 கொரி:8:9. மனுக்கோலத்தில் இறங்கி வந்தார்.
அவர் “சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடவும், எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தவுமே” அவர் வந்தார்.
1 சாமுவேல்: 2:8 எனவே, சிறுமை, எளிமை நிலையிலிருக்கிற நீங்கள் கர்த்தருடைய பார்வையில் மிகவும் விசேஷித்தவர்கள்.
நான் சிறுமை நிலையில், எளிமை நிலையில் குறைவுள்ளவனாயிருக்கிறேனே” என்று நீங்கள் கவலைப்படவோ, வேதனைப்படவோ வேண்டாம். ஏனென்றால் நமது அருமை ஆண்டவர் உங்கள் மேல் நினைவாய் இருக்கிறார்.
உங்கள் நம்பிக்கை கர்த்தர் மேலேயே உறுதியாயிருப்பதாக. ஏனெனில் தேவனுடைய வார்த்தை கூறுகிறது, “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லைஎன்று.
எனவே நீங்கள் மற்றவர்களோடு உங்களை ஒப்பிடாதீர்கள். கர்த்தர் அதினதின் காலத்தில் எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாக செய்து முடிப்பார்.
நீங்கள் அவரைத் உண்மையாய் தேடும் போது,மனிதர் கண்களில் கிருபை கிடைக்கச் செய்து, நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்கு உங்களை கொண்டு செல்வார். நீங்கள் வெட்கப்பட்ட அதே இடத்தில் தேவன் உங்களை உயர்த்தி வைத்து அழகுப் பார்பார்.
இத்தகைய நன்மைகளை பெற்று வளமாய் வாழ கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்.