Daily Manna 170

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் :13:13

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
1 கொரிந்தியர் :13:13
==========================
எனக்கு அன்பானவர்களே!

அன்பின் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஒரு பெண் அவசர அவசரமாக கிளம்பி வீட்டுக்கு வெளியே வந்து பார்த்த போது, அங்கு மூன்று வயதான ஞானிகளை போன்ற மனிதர்கள், திண்ணையில் அமர்ந்திருப்பதை கண்டாள். அவர்கள் யார் என்று அந்தப் பெண்ணுக்கு அடையாளம் தெரியவில்லை.

அவர்களை நோக்கி, ‘நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பார்த்தால் பசியோடிருப்பவர்களை போல தெரிகிறது. உள்ளே வாருங்கள், வந்து ஏதாவது சாப்பிடுங்கள்’ என்று கூறினாள். அப்போது அவர்கள், ‘இந்த வீட்டின் மனிதர் உள்ளே இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள்.

அந்த பெண் இல்லை என்றதும், ‘இல்லை, நாங்கள் உள்ளே வரமாட்டோம்’ என்றார்கள். சாயங்காலமான போது, கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அந்த பெண், நடந்ததை கூறினாள். அதற்கு அந்த கணவர், ‘அவர்களை உள்ளே அழைத்து வா’ என்று கூறினார்.

அந்த பெண் அழைக்க போன போது, அந்த மனிதர்கள், ‘நாங்கள் மூவரும் ஒன்றாக உள்ளே வர முடியாது’ என்றனர். அப்போது அந்த பெண் ஏன் என்று கேட்டதற்கு, ‘இவருடைய பெயர் செல்வம், இவர் வெற்றி, என் பெயர் அன்பு. இவர்களில் யார் உள்ளே வர வேண்டும் என்று உன் கணவரிடம் பேசி முடிவெடுத்து விட்டு வா’ என்று கூறினர்.

அந்த பெண் உள்ளே சென்று தன் கணவரிடம் கூறின போது, அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, ‘நாம் செல்வத்தை அழைப்போம். அப்போது நம் வீடு செல்வத்தினால் நிறையும்’ என்று கூறினார். அதற்கு மனைவி, ‘வெற்றியை அழைத்தால், செல்வம் தன்னால் வந்து சேரும்’ என்று கூறினாள்.

அதைக் கேட்டு கொண்டிருந்த அவர்களுடைய மகன், ‘அப்பா, அம்மா, நாம் அன்பை அழைத்தால், நம் வீடு அன்பால் நிறைந்திருக்குமே’ என்று கூறினான். அதற்கு எல்லாரும் உடன்பட்டு, அன்பை உள்ளே அழைப்போம் என்று தீர்மானித்து, அந்த பெண் அந்த வயதானவர்களிடம் போய், ‘ஐயா அன்பு, நீங்கள் உள்ளே வாருங்கள்’ என்று கூறினாள்.

அன்பு உள்ளே செல்ல எழுந்தார், அப்போது செல்வமும், வெற்றியும் கூட உள்ளே வர ஆரம்பித்தனர். அதைக் கண்ட அந்த பெண், ‘நான் அன்பைத் தானே அழைத்தேன், நீங்களும் வருகிறீர்களே’ என்று கேட்டாள்.

அதற்கு அவர்கள் சொன்னார்கள், ‘நீ செல்வத்தை மட்டும் அழைத்திருந்தால், செல்வம் மட்டும் உள்ளே வந்திருப்பார், வெற்றியை அழைத்திருந்தால் அவர் மட்டும் உள்ளே வந்திருப்பார், ஆனால், நீ அன்பை அழைத்ததால், நாங்கள் மூன்று பேரும் உள்ளே வருகிறோம்.அன்பு எங்கே உண்டோ அங்கு செல்வமும், வெற்றியும் எப்போதும் உண்டு’ என்றனர்.

வேதத்தில் பார்ப்போம்,

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள் என்றார்.
யோவான்: 13 :35.

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
1 கொரி: 13 :13.

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.
பிலிப்பியர்: 2 :2.

பிரியமானவர்களே,

பிறர் மீது நீ விதைக்கும் அன்பு உன் மனதை இலகுவாக்கும். வாழ்வில் வெற்றி காண்பதற்கான இன்னொரு ஆதாரம் அதுவேயாகும்.

நாம் மற்றவர்களிடத்தில் எப்படி அன்புகூறுகிறோம்? நம்மிடத்தில் அன்பு என்ற ஆவியின் கனி உண்டா? நம் சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு கூறுகிறோமா? நம் பெற்றோரிடத்தில் அன்பு கூறுகிறோமா? நம் சக விசுவாசிகளிடத்தில் அன்பு கூறுகிறோமா? அன்பில்லாதவன் தேவனை அறியான் என்று வசனம் கூறுகிறது.

எத்தனை பேர் தங்கள் சொந்த சகோதர சகோதரிகளிடத்தில் அன்பு கூறாமல், உலகத்திலுள்ள மற்றவர்களை நேசிக்கிறவர்களாக இருக்கின்றனர்! சிலர் வருஷகணக்கில் தங்கள் சகோதர சகோதரிகளிடத்தில் பேசாமல் இருக்கின்றனர்.

தேவனிடத்தில் அன்புகூறுகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்பு கூறாமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூறுவான்? 1யோவான் 4:20. என்று வேதம் கேட்கிறது.

ஆகவே நாம் நம் சொந்த சகோதரரிடத்திலும் சகோதரிகளிடத்திலும் அன்புகூறுவோம்.
அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.

அன்பு ஒருவரில் வரும் போது செல்வமும் ஆரோக்கியமும், வெற்றியும் உலக ஆசீர்வாதங்களும் நம்மை வந்து சேரும். முதலாவது தேவனிடத்திலும், பின்பு மற்றவர்களிடத்திலும் அன்பு கூற வேண்டும். இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: .

உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூறுவாயாக என்பதே பிரதான கற்பனை.

இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை மாற்கு:12:29-31என்று கூறினார்.

அன்புகூறும் போது, அதில் மற்ற கற்பனைகள் எல்லாம் அடங்கியிருக்கிறது. அந்த பெரிதான தியாகமான அன்பால் நம் இருதயம் நிறைந்திருப்பதாக!

இத்தகைய பூரண அன்பிலே ஒவ்வொரு நாளும் நிலைத்திருக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு துணை புரிவாராக.
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God