Daily Manna 17

சோர்ந்து போகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார். ஏசாயா:40:29

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே!

சோர்வுகளை மாற்றி, புதிய துவக்கத்தை தருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

அது ஒரு தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ மருத்துவமனை. யுத்தகளத்தில் காயப்பட்ட இராணுவ வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அங்கு மரணத்தருவாயில் இருந்த இராணுவ வீரன் அருகில் சிற்றாலய போதகர் ஜெபித்து கொண்டிருந்தார். கண் விழித்த வீரன் போதகரிடம் தனக்கொரு உதவி செய்யும்படி கேட்டு கொணடான். போதகரும் மிகுந்த ஆர்வத்துடன் “கட்டாயம் செய்கிறேன் தம்பி” என்றார்.

மெதுவாக தனது பேண்ட் பையிலிருந்து ஒரு சிறு விலாச புத்தகத்தை எடுத்து அதில் ஒரு விலாசத்தை சுட்டிகாட்டி “இது என் ஞாயிறு பள்ளி ஆசிரியருடையது இவருக்கு நீங்கள் ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் ஞாயிறு பள்ளியில் நீங்கள் கற்று கொடுத்த வேத வசனத்தின்படி நான் ஒரு நல்ல கிறிஸ்தவ வீரனாக வாழ்ந்து மரணத்தை சந்திக்கிறேன்.

என்னை அன்பின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவிடம் வழிநடத்திய உங்கள் பணிக்காக நன்றி கூறுகிறேன்” என்ற செய்தியை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்’ என்றான். போதகரும் உடனே கடிதம் எழுதினார்.

ஓய்வு நாள் பள்ளி ஆசிரியரிடமிருந்து தாமதியாமல் பதிலும் வந்தது. அவரது கடிதத்தில் “மகனே, போன மாதம் என் ஞாயிறு பள்ளி ஆசிரியர் பணியை விட்டு விட்டேன். ஏனெனில் நான் கற்பித்து கொடுத்ததில் எந்த பலனுமில்லை என்பதாக உணர்ந்தேன்.
ஆனால் உன்னுடைய கடிதம் என்னை உயிர்ப்பித்தது.

என்னுடைய பொறுமையின்மைக்காகவும், விசுவாச குறைவிற்காகவும் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டேன். மீண்டும் இவ்வூழியத்தை இன்னும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
எனது சோர்வை நீக்கி உற்சாகமூட்டிய உனது கடிதத்திற்காக நன்றி செலுத்துகிறேன்” என எழுதியிருந்தார்.

ஆனால் இக்கடிதத்ததை படிக்க இராணுவ வீரன் உயிருடன் இல்லை. இதை வாசித்த போதகரின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

ஆண்டவருடைய கிரியை எத்தனை மகத்துவமானது! ஆசிரியரை கொண்டு நல்ல கிறிஸ்தவர்களை உருவாக்கினார். அந்த ஆசிரியர் சோர்ந்த நேரத்தில் பழைய மாணவர்களை கொண்டு உயிர்ப்பிக்கிறார்.

வேதத்தில் பார்ப்போம்,

சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுகிறார்.
ஏசாயா:40:29

நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.
கலாத்தியர்:6 :9

சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
ரோமர்:2 :7

பிரியமானவர்களே!

எலியா தீர்க்கதரிசி தன் ஊழியத்தில் சோர்ந்து போன போது, ஆண்டவர் எத்தனை கரிசனையாய் அவரை உயிர்ப்பிக்கிறார்!

‘அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச் செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச் செடியின் கீழ்ப் படுத்துக் கொண்டு நித்திரைப் பண்ணினான்.

அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்’
1 இராஜா19:4-5
இது போன்ற சூழ்நிலைகளில் நாமும் கூட அடிக்கடி கடந்து சென்றிருக்கிறோம் அல்லவா?

ஊழியத்தில் வருகிற பாடுகளை கண்டு, ‘போதும் ஆண்டவரே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும். நான் என் பிதாக்களை பார்க்கிலும் நல்லவன் அல்ல’ என நம் உள் மனதும் சொல்வதுண்டு.

நாம் ஊழிய பாதையில் படும்
சிலபாடுகள் நம்மை அத்தனையாய் நினைக்கவும், போதும் இந்த ஊழியம் என்று சொல்லவும் வைத்தாலும் நம்மை அழைத்த கர்த்தர் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார் என்கிற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும்.

உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கும்போது, உங்களை அந்த இடத்தில் ஊழியக்காரனாக வைத்திருப்பது தேவனடைய கிருபையும் சித்தமுமலல்லவா!

நம் சோர்வுகளை கண்டு கிறிஸ்து நம்மை அப்படியே விட்டு விடுகிறவர் அல்ல, நாம் செய்த ஊழியத்தில் இருந்து, மற்றொருவரை ஏற்படுத்தி சிறப்பாக செய்ய வைப்பது அவருக்கு இலேசான காரியம் என்றாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த ஊழியத்தை செய்ய உங்களையே எதிர்ப்பார்க்கிறார்.

அதனால் எந்த விதத்திலாகிலும் உங்களை உயிர்ப்பிக்கவே விரும்புகிறார். ஆகவே சோர்ந்து போகாதிருங்கள்!
உங்களுடைய தாலந்துகளை கர்த்தருக்கென்று இன்னும் வைராக்கியமாக உபபோயகப்படுத்துங்கள்! இன்னும் கர்த்தருக்கென்று வைராக்கியமாய் உழையுங்கள்.

சோர்வுகளை கண்டு மனம் தளர்ந்து போகாதிருங்கள். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஊழியத்தையும், குடும்பங்களையும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

ஆமென்.

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God