Daily Manna 22

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்: நீதிமொழி:28 :27

எனக்கு அன்பானவர்களே!

ஆசீர்வாதத்தின் ஊற்றும், உறைவிடமும், காரணருமாயிருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள்.

ஜான் .டி. ராக்பெல்லர் சீனியர் (John D. Rockefeller Sr.) என்பவர் எப்படியாகிலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தவராய் அதற்காக கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். அவரது 33ஆவது வயதில் முதலாவது மில்லியன் டாலர்களை சம்பாதித்தார்.

பிறகு 43ஆவது வயதில் உலகத்திலேயே பெரிய கம்பெனிக்கு உரிமையாளர் ஆனார். 53ஆவது வயதில் அவரே உலகின் பெரிய பணக்காரரானார். அவரது விடாமுயற்சி அவரை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது.
ஆனால் அந்த நேரத்தில் அவருக்கு அலோபீசியா (Alopecia) என்னும் வியாதி வந்தது.

அதன்படி அவருக்கு எல்லா முடியும் கொட்டிப்போனது, ஏன், கண்களின் மேல் இருக்கும் முடிக் கூட கொட்டி போகும். ஆனால் அது பரவாயில்லையே, அவரால் ஒன்றும் சாப்பிட முடியாது. அப்படி ஒரு வியாதி அவரைத் தாக்கியது.

எத்தனையோ மில்லியனுக்கு சொந்தக்காரர், ஆனால் அவரால் பாலையும், சில பிஸ்கெட்டுகளையும் தான் சாப்பிட முடியுமே தவிர வேறு ஒன்றும் சாப்பிட முடியாது! என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அது மட்டுமல்ல, அவர் பணக்காரராய் இருந்த படியால் அவருக்கு அநேக எதிரிகள் இருந்தார்கள்.

அவரைச் சுற்றிலும், எப்போதும் பாதுகாப்பு படையினர் அவரைக் காவல் காத்தனர். ஏனென்றால் யார், எப்போது, அவரை கொலை செய்வார்கள் என்று அறியாததால்.

இப்படிபட்ட பணம் தேவைதானா?
அவருக்கு வைத்தியம் செய்த வைத்தியர்கள் இவர் இன்னும் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பார் என்று சொல்லி விட்டார். அதைக் கேள்விப்பட்ட செய்தித்தாள்கள், அவர் உயிர் அப்போதே போய்விட்டதுப் போல செய்திகளை வெளியிட்டனர். அவருக்கு தூக்கம் என்பது பறந்துப் போயிற்று.

அவர் ஒரே யோசனை செய்ய ஆரம்பித்தார். இன்று மரித்தால் ஒரு பைசாவையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்கிற ஞானம் அவருக்கு உதித்தது. பணமே எல்லாவற்றிற்கும் முடிவல்ல என்பதை உணர்ந்தார். பணத்தால் தன் உடல்நிலையை சரியாக்க முடியாது, பணத்தால் நிம்மதி கொடுக்க முடியாது என்றெல்லாம் உணர ஆரம்பித்தார்.

மறுநாள் காலை புதுத்தெம்போடு எழுந்தார். தன்னுடைய அளவற்ற செல்வத்தை எடுத்து, ஆலயக் கட்டுமானத்திற்கும், மிஷனரி ஊழியங்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தார். ஏழைகளுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் உதவி கரம் நீட்டி, வாரி வழங்க ஆரம்பித்தார்.

Rockefeller foundation என்று ஒரு ஸ்தாபனத்தை ஆரம்பித்து, அதன் மூலம் மருத்துவ ஆய்வுகளுக்கு தேவையான பணத்தைக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் அப்படிக் கொடுத்ததன் மூலம், பென்சிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. மற்றும் அநேக வியாதிகளுக்கு அந்த ஸ்தாபனத்தின் உதவியினால் மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

ராக்பெல்லர் உறங்க ஆரம்பித்தார். அவருடைய தூக்கம் இன்பமாக மாறியது. டாக்டர்கள் அவர் ஒரு வருடம் தான் அதாவது 54 வயது வரைதான் உயிரோடு இருப்பார் என்றுக் கூறினர், ஆனால் அதற்கு பிறகு, 98 வயது வரை சுகமாய் வாழ்ந்து, கிறிஸ்துவுக்குள் மரித்தார்.

வேதத்தில் பார்ப்போம்,

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
நீதிமொழி:19:17

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்: தன் கண்களை ஏழைக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
நீதிமொழி:28:27

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும், அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள், நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
லூக்கா: 6:38

பிரியமானவர்களே,

அநேக செல்வத்தை வைத்திருந்த ராக்பெல்லர் சுயநலமாய், தனக்கென்று வைத்திருந்த போது, அவருக்கு நிம்மதி இல்லை, உறக்கம் இல்லை. ஆனால் அவர் மற்றவர்களுக்கு உதவி கரம் நீட்டிய போது, அவருடைய நித்திரை இன்பமாக மாறியது.

அவர் உடல் நோய்கள் அவரை விட்டு மாறியது. நீண்ட ஆயுசை கர்த்தர் அவருக்கு கொடுத்து, மற்றவர்களுக்கு கொடுப்பதினால், சந்தோஷமும், உடல் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பதை விளங்கப் பண்ணினார்.

ஆம், கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார் என்பது எத்தனை உண்மை. எத்தனை தான் சம்பாதித்தாலும், கர்த்தரின் ஆசீர்வாதமே வேதனை இல்லாத ஐசுவரியம்!

கொஞ்சமாக சம்பாதித்தாலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தால் அது கோடி பணம் சம்பாதிப்பதற்கு ஒப்பானது. ஏராளமான பணம் இருந்து, சமாதானம் இல்லாதிருந்தால் அல்லது உடல் வியாதி கொண்டிருந்தால் அத்தனை பணத்தினாலும் எந்த பயனும் இல்லை.

நமக்கு வரும் சம்பாத்தியம் எத்தனையாயிருந்தாலும் அதை கர்த்தரின் பாதத்தில் வைத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டு அதை உபயோகிப்போமானால் அவருடைய ஆசீர்வாதம் நமக்கு ஐசுவரியத்தை நிச்சயமாய்த் தரும். ‘இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறது போல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர் கர்த்தர்’ என்று உபாகமம் 8:18ல் பார்க்கிறோம்.

நமக்கு ஆண்டவர் கொடுத்த ஐசுவரியத்தில் ஆலயத்திற்கும், கர்த்தருடைய ஊழியத்திற்கும், ஏழைகளுக்கும் உதவிக்கரம் நீட்டுவோம், பரத்திலே பொக்கிஷத்தை சேர்த்து வைப்போம். கர்த்தர் மென்மேலும் நம்மை ஆசீர்வதிப்பாராக
ஆமென்

  • Related Posts

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற வசனம் துன்பத்தின் நடுவிலும் நம்பிக்கையை விதைக்க அழைக்கிறது. தேவன் தரும் அறுவடை சரியான நேரத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படும் என்பதை இந்த செய்தி நினைவூட்டுகிறது.

    தயவு: ஆவியின் கனியாக வாழ்க்கையில் வெளிப்படும் கிரிஸ்தவ குணம்

    தயவு என்பது கைமாறு நினைக்காமல் செய்யப்படும் அன்பான நடத்தை. இது ஆவியின் கனியாக வளரும்போது உறவுகள், சமாதானம், விசுவாச வாழ்வு எல்லாம் வலுப்படும்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    கண்ணீரோடே விதைப்பவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் | தேவனுடைய வாக்குத்தத்தம்

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Sowing and Reaping in the Bible | Understanding God’s Principle

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    Seek First the Kingdom of God: A Practical Guide to Right Priorities

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    You Will Eat the Fruit of Your Labor: God’s Promise for Faithful Work

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    God’s Word Is Light: Biblical Guidance for Life

    Trust in the Lord: Committing Your Ways to God

    Trust in the Lord: Committing Your Ways to God